உலகச் செய்திகள்


திட்டமிட்டபடி வடகொரிய அதிபரை சந்திப்பேன் என்கிறார் டொனால்டு ட்ரம்ப்

பலியானோரின் எண்ணிக்கை 75 ஆக  உயர்வு

கர்ப்பமான பிரித்தானிய இளவரசி மேகனிற்கு இரட்டை குழந்தைகளா?

விமானத்தில் வெடிகுண்டு புரளி- இலங்கையரிற்கு 12 வருட சிறை

யேமன் கடற்பகுதியில் படகு நீரில் மூழ்கியது- 46 பேர் பலிதிட்டமிட்டபடி வடகொரிய அதிபரை சந்திப்பேன் என்கிறார் டொனால்டு ட்ரம்ப்

05/06/2018 சிங்கப்பூரில் திட்டமிட்டபடி எதிர்வரும் 12ஆம் திகதி, வடகொரிய அதிபர் கிம் ஜாங்கை சந்திப்பேன் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.
கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநிறுத்த தென் கொரியா கடும் முயற்சிகள் மேற்கொண்டது. அதன் பலனாக வரும் 12ஆம் திகதி சிங்கப்பூரில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சந்தித்து பேச முடிவானது. 


ஆனால் கடந்த மாதம் தொடக்கத்தில் தென் கொரியாவும் அமெரிக்காவும் கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபட்டன. மேலும், பேச்சுவார்த்தைக்கு முன்னர் எல்லா அணுஆயுதங்களையும் அழித்துவிட வேண்டும் என்று ட்ரம்ப் நிபந்தனை விதித்தார்.


இதனால் கோபம் அடைந்த கிம் பேச்சுவார்த்தை பேச்சில் இருந்து விலகுவேன் என்று எச்சரித்தார். இந்நிலையில் ட்ரம்ப்பை சந்தித்து தென் கொரிய அதிபர் மூன் சமாதானப்படுத்தினார். 


இந்நிலையில் கிம் ஜாங் உன்னின் நல்ல நண்பராக கருதப்படும் கிம் யாங் சோல், கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்கா சென்றார். வெள்ளை மாளிகையில் உள்ள அதிபரின் ஓவல் அலுவலகத்தில் கிம் யாங்கை, அதிபர் ட்ரம்ப் சந்தித்தார். 


அப்போது, அதிபர் கிம் ஜாங் உன் கொடுத்தனுப்பிய கடிதம் ஒன்றை அதிபர் ட்ரம்ப்பிடம் கிம் யாங் சோல் வழங்கினார். அதில் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து கிம் கேள்வி எழுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.


பின்னர் சுமூகமான பேச்சு வார்த்தையின் பின்னரே மேற்படி தீர்மானம் எட்டப்பட்டதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.  நன்றி வீரகேசரி 

பலியானோரின் எண்ணிக்கை 75 ஆக  உயர்வு

06/06/2018 குவாட்டமாலாவில் உள்ள பியூகோ எரிமலைக் குமுறலில் சிக்கி உயரிழந்தவர்களின் எண்ணிக்கை 75 ஆக உயர்வடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெவரிக்கின்றன.
மேற்படி எரிமலைக் குமுறலால் வெளிப்பட்ட உருகிய பாறைக் குழம்பு, மண்சக்தி மற்றும் சாம்பல் என்பன காரணமாக பல கிராமங்கள் அழிவடைந்துள்ளன.
மேலும் இந்த சம்பவம் காரணமாக 300 பேர் காயமடைந்துள்ளனர். 2000 பேர் குறித்த பகுதிகளிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் 192 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.
இந் நிலையில் காணாமல்போனோரை தேடும் நடவடிக்கையில் தீயணைப்பு படைவீரர்களும் படையினரும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். அதேசமயம் மேற்படி குமுறல் காரணமாக இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நன்றி விராகேரி 

கர்ப்பமான பிரித்தானிய இளவரசி மேகனிற்கு இரட்டை குழந்தைகளா?

08/06/2018 இளவரசர் ஹரி, மெர்க்கல் ஆகிய இருவரினதும் திருமணம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது யாவரும் அறிந்ததே. 


இந்நிலையில், பிரித்தானிய இளவரசி மேகன் மெர்க்கல் கர்ப்பமாக இருப்பதாக அமெரிக்காவில் இருந்து வெளியாகும் tabloid என்ற நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
மேகன் மெர்க்கலின் வயிறு சற்று பெரிதாக இருக்கும் நிலையில் புகைப்படத்தை வெளியிட்டு, மெர்க்கல் கர்ப்பமாக இருக்கிறார்,அதுவும் அவரது வயிற்றில் இருப்பது இரட்டை குழந்தைகள் என கூறியுள்ளது.
மேலும், 588 ஆண்டுகளில் முதல் ராயல் இரட்டை குழந்தைகள் என தெரிவித்துள்ள அந்நாளிதழ், இளவரசர் ஹரி மற்றும் மெர்க்கல் ஆகிய இருவரும் ரகசியமாக கருத்தரிப்பு மையத்திற்கு சென்றுள்ளதாகவும்  குறிப்பட்டுள்ளது.
ஆனால், இது பொய்யான தகவல் எனவும் மெர்க்கல் கர்ப்பமானது உண்மையென்றால் அது அரசகுடும்பத்தால் முறையாக அறிவிக்கப்படும், அதுமட்டுமின்றி திருமணத்திற்கு பின்னர் தனது கணவருடன் முதல் முறையாக சார்லஸின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் மெர்க்கல் கலந்துகொண்டபோது அவரது வயிறு பெரியதாக இருக்கவில்லையென தகவல்கள் தெரிவிக்கின்றன.  நன்றி வீரகேசரி விமானத்தில் வெடிகுண்டு புரளி- இலங்கையரிற்கு 12 வருட சிறை

07/06/2018 அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னிலிருந்து  மலேசிய சென்றுகொண்டிருந்த விமானத்தில் குண்டைவெடிக்க வைக்கப்போவதாக போலி நாடகமாடியதன்  மூலம் பரபரப்பை ஏற்படுத்திய இலங்கையை சேர்ந்த இளைஞரிற்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் 12 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.
2017 ம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலேயே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மனோட் மார்க்ஸ் என்ற 26 வயது இளைஞனிற்கே நீதிமன்றம் இந்த தண்டனையை வழங்கியுள்ளது.
மெல்பேர்னிலிருந்து மலேசிய நோக்கி சென்றுகொண்டிருந்த மலேசியன் எயர்லைன்ஸ் விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்த குறிப்பிட்ட இளைஞன் தன்னிடம் வெடிகுண்டிருப்பதாகவும் சத்தமிட்டதை தொடர்ந்து குறிப்பிட்ட விமானம் மீண்டும் மெல்பேர்னிற்கு திருப்பிவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
நீலவெளிச்சத்தை வெளிப்படுத்தும் இரு இலத்திரனியல் கருவிகளை காண்பித்த படி விமானத்திற்குள் நடமாடிய இந்த இளைஞன் விமானத்தை தகர்க்கப்போவதாக பயணிகளை மிரட்டினான் எனவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இது தொடர்பாக இடம்பெற்ற நீதிமன்ற விசாரணைகளின் முடிவில் இலங்கையை சேர்ந்த இளைஞனிற்கு 12 வருட சிறைத்தண்டனையை விதித்துள்ள நீதிபதி மனோட் மார்க்ஸ் ஆகக்குறைந்தது 9 வருடங்களாவது சிறைத்தண்டனையை அனுபவிக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.
மார்க் விமானவோட்டியின் அறையின் பக்கமாக நின்று பயணிகளை பார்த்து என்னிடம் குண்டுள்ளது என தெரிவித்தார் என குறிப்பிட்டுள்ள நீதிபதி பயணிகளும் விமான பணியாளர்களும் அச்சமடைந்ததுடன் அவரிடம் உண்மையிலேயே வெடிகுண்டுள்ளது என நம்பினார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
பயணிகள் எச்சரிக்கை நிலையில் வைக்கப்ட்டனர் விமானவோட்டி விமானத்தை புறப்பட்ட இடத்திற்கே திருப்பி செலுத்தவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
இலங்கையின் செல்வந்த குடும்பத்தை சேர்ந்த இந்த இளைஞன் அவுஸ்திரேலியாவில் கல்வி கற்பதற்காக சென்றதாகவும் அவ்வேளை போதைப்பொருளிற்கு அடிமையானதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விமானத்தில் ஏறும்போது குறிப்பிட்ட நபர் ஒருவகை போதைப்பொருளை பயன்படுத்தியது விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
மார்க் தனது தண்டனையை அனுபவித்த பின்னர் அவர் நாடு கடத்தப்படுவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  நன்றி வீரகேசரி 


யேமன் கடற்பகுதியில் படகு நீரில் மூழ்கியது- 46 பேர் பலி

07/06/2018 சோமாலியாவிலிருந்து யேமனிற்கு கடல்வழி மூலம் செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்ட குடியேற்றவாசிகளில் 46 படகு கவிழ்ந்ததில பலியாகியுள்ளனர் என ஐநா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
யேமனின் கொந்தளிப்பு மிகுந்த கடற்பகுதியில் படகு கவிழ்ந்ததில் இவர்கள் பலியாகியுள்ளனர் மேலும் 16 பேரிற்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை என ஐஓஎம் அமைப்பு தெரிவித்துள்ளது.
சோமாலியாவின் பொசாசோ துறைமுகத்திலிருந்து யேமனிற்கு புறப்பட்ட படகில் 100 பேர் வரையிருந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பலியானவர்கள் அனைவரும் எத்தியோப்பிய பிரஜைகள் எனவும் ஐநா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏடன் வளைகுடாவில் இந்த படகு கவிழ்ந்துள்ளது என தெரிவித்துள்ள அதிகாரிகள் பலியானவர்களில் 9 பெண்களும் உள்ளனர் என குறிப்பிட்டுள்ளனர்
படகிலிருந்த பலரிடம் உயிர்காக்கும் அங்கிகள் இருக்கவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  நன்றி வீரகேசரி 


No comments: