இதற்காக பெண் கவிஞருக்கு 3 வருட சிறை
புஷ்ஷின் மனைவி மரணம்!!!
வடகொரிய ஜனாதிபதியை சந்தித்த சி.ஐ.ஏ.யின் இயக்குநர் மைக்பொம்பே ?
ஜெயலலிதா விவகாரம் : புதிய தகவலை வெளியிட்டார் பன்னீர்செல்வம்
இதற்காக பெண் கவிஞருக்கு 3 வருட சிறை
சுயமாக சுதந்திரத்தை பிரகடனப்படுத்திக் கொண்டுள்ள சோமாலிலாந்து பிராந்தியத்தை மீளவும் சோமாலியாவுடன் இணைப்பதற்கு பரிந்துரை செய்யும் கவிதையொன்றை எழுதியமைக்காக இளம் பெண் கவிஞர் ஒருவருக்கு 3 வருட சிறைத்தண்டனை விதித்து சோமாலிலாந்து நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது.
நசிமா குவோரேன் என்ற பெண் கவிஞருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் நசிமாவின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக மனித உரிமைக் குழுக்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.
சோமாலிலாந்தானது 1991 ஆம் ஆண்டு சோமாலியாவிலிருந்து சுதந்திரத்தை சுயமாக பிரகடனப்படுத்திக் கொண்டுள்ள போதும், அந்த சுதந்திரத்திற்கு சர்வதேச ரீதியான அங்கீகாரம் இதுவரை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
புஷ்ஷின் மனைவி மரணம்!!!
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோர்ஜ் புஷ்ஷின் மனைவியும், ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷின் தாயாருமான பார்பரா புஷ் தனது 92ஆவது வயதில் மரணமடைந்தார்.
அமெரிக்காவின் 41ஆவது அதிபராக பதவி வகித்த ஜோர்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ்ஷின் மனைவி பார்பரா புஷ், இவர்களது மகன் ஜோர்ஜ் வாக்கர் புஷ்
இதய அறுவை சிகிச்சை மேற்கொண்ட பார்பரா புஷ் ஓய்வெடுத்து வந்த பார்பரா புஷ் மரணமடைந்ததாக ஜோர்ஜ் புஷ்ஷின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் ஜோர்ஜ் புஷ்சும், பார்பரா புஷ்சும் தங்களது 73ஆவது திருமண நாளை கொண்டாடினார்கள். நன்றி வீரகேசரி
வடகொரிய ஜனாதிபதியை சந்தித்த சி.ஐ.ஏ.யின் இயக்குநர் மைக்பொம்பே ?
18/04/2018 வடகொரியாவிற்கு விஜயம் மேற்கொண்ட சி.ஐ.ஏ.யின் இயக்குநர் மைக்பொம்பே வடகொரிய ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார் என அமெரிக்க ஊடகங்கள் பரபரப்பு செய்தியை வெளியிட்டுள்ளன.
சில வாரங்களிற்கு முன்னர் இந்த சந்திப்பு இடம்பெற்றதை உறுதிசெய்துள்ள அதிகாரிகள் வடகொரியா, அமெரிக்கா நேரடிப் பேச்சுவார்த்தைகளிற்கான ஏற்பாடுகளை சந்திக்கும் நோக்கிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
2000 ஆம் ஆண்டிற்கு பின்னர் அமெரிக்காவின் உயர்மட்ட பிரதிநிதியொருவருக்கும் வடகொரிய தலைவருக்கும் இடையில் இடம்பெற்றுள்ள இந்த இரகசிய எதிர்பாராத சந்திப்பு உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
2000 ஆம் ஆண்டு அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சராக பணியாற்றிய மடலின் அல்பிரைட் தற்போதைய வடகொரிய ஜனாதிபதியின் தந்தையை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தார்
இதேவேளை, வடகொரியாவுடன் உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதை அமெரிக்க ஜனாதிபதி உறுதி செய்துள்ளார். அதற்கு நான் அங்கீகாரம் வழங்கினேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நன்றி வீரகேசரி
ஜெயலலிதா விவகாரம் : புதிய தகவலை வெளியிட்டார் பன்னீர்செல்வம்
18/04/2018 அப்பல்லோ வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்தபோது ஜெயலலிதாவை நான்
ஒரு முறை கூட பார்க்கவேயில்லை என்று துணை முதல்வர் ஓ .பன்னீர் செல்வம் மீண்டும் தெளிவுப்படுத்தியிருக்கிறார்.
அப்பல்லோ வைத்தியசாலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அவரை யாரெல்லாம் சந்தித்தனர் என்பதில் இன்று வரை சர்ச்சை நீடிக்கிறது.
முன்னாள் தலைமை செயலாளர் ராம்மோகனராவ் விசாரணை ஆணையத்தில் சொல்லும் போது,‘ அப்பல்லோ வைத்தியசாலையில் ஜெயலலிதா உடல் நிலை தேறி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய போது ஒ.பன்னீர்செல்வம் உடனிருந்தார் என்று தெரிவித்திருக்கிறார். ஆனால் ஒ.பன்னீர்செல்வம் நான் ஒருமுறை கூட ஜெயலலிதாவை பார்க்கவேயில்லை என்று திரும்ப திரும்ப கூறிவருகிறார்.
இந்நிலையில் அவர் நேற்றுமுன்தினம் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது..,
‘அப்பல்லோ வைத்தியசாலையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நாள் முதல் அவர் உயிரோடு இருந்தவரை நான் பார்க்கவேயில்லை.’ என்றிருக்கிறார்.
இதனிடையே நீதவான் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் வாக்குமூலம் அளித்தவர்களிடம் சசிகலா தரப்பு சட்டத்தரணி ராஜா செந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment