அகற்றிவிடல் அவசியமே ! - ( எம் . ஜெயராமசர்மா ..... மெல்பேண் .... அவுஸ்திரேலியா )


          அசுரர்கள் வாழ்ந்ததாய் அறிகின்றோம் கதைகளிலே 
             அசுரர்கள் நிஜமாக வாழ்கின்றார் அருகினிலே
         பிஞ்சுமனம் பார்க்கார்கள் கெஞ்சினாலும் கேட்கார்கள் 
              கொஞ்சமேனும் இரக்கமின்றி கொன்றொழிப்பார் பிஞ்சுகளை !

       படித்தாலும் பண்பில்லார் பதவியாலும் உயர்வுபெறார் 
            நினைப்பெல்லாம் கசடாக நித்தமுமே இருந்திடுவார்
       தமக்கெனவே வாழ்ந்திடுவார் தலைகுனிவை பொருட்படுத்தார்
              நிலத்திலவர் வாழ்வதனால் நிம்மதியை அழித்திடுவார் ! 

        படித்தவரில் பலபேரும் பாமரரில் சிலபேரும் 
                அடுத்தவரை அழவைக்கும் ஆசையிலே அலைகின்றார் 
        எடுத்துவைக்கும் அடியனைத்தும் இரக்கமதை மிதிப்பதற்கே 
                எடுத்துவைக்கும் இவர்களெலாம் ஏனுலகில் பிறந்தனரோ ! 

        காமமெனும் வெறியுடனே கணமெல்லாம் திருயுமிவர்
image2.JPG                காணுகின்ற அத்தனையும் காமமுடன் நோக்குகிறார்
        மாமியென்றோ மகளென்றோ மலருகின்ற குருத்தென்றோ
               காமநிறை கண்ணுடையார் கருதியே நிற்பதில்லை ! 


       கணநேரம் காணுகின்ற காமசுகம் தனைநினைப்பார்
            காலமெல்லாம் தவித்தழுவார் காயமதை நினைப்பதில்லை 
       உயிர்போகும் அவர்நிலையை ஒருகணமும் பொருட்படுத்தா
              உணர்வில்லா அசுரர்களாய் உலவுகிறார் உலகினிலே ! 

       அறியாத பிஞ்சுகளை அழித்துநிற்கும்  அசுரர்களை
             அனைவருமே சேர்ந்துநின்று அகற்றிவிடல் அவசியமே 
       நெறியிழந்து நிற்பாரை நீழ்புவியில் வாழவிட்டால் 
              அளவிறந்த  ஆவேசம் கொண்டுநிற்கும் அசுரகுணம் ! 



                                  

image2.JPG


             
               
             




No comments: