தமிழ்ப் பாடசாலைகளின் அதிபர்களுக்கு விடுக்கும் செய்தி

.

சிட்னி பெருநகரத்தில் இயங்கும் தமிழ்ப் பாடசாலைகளின் அதிபர்களே

ஆசிரியர்களே நிர்வாக நண்பர்களே

அனைவருக்கும் என் அன்பு வணக்கம்



இவ்வாண்டின் முதல் தவணையைப் பூர்த்தி செய்து இரண்டாவது தவணையை எதிர்நோக்கியிருக்கும் இவ்வேளையில் முக்கியமானதும் அவசியமானதுமான இரண்டு விடயங்களைத் தெரிவிக்க,  தமிழ் முரசு அவுஸ்திரேலியா இணைய இதழூடாக உங்களைத் தொடர்பு கொள்வதில் மிக்க மகிழ்ச்சி

     1.     மொழிக்கல்வி மாநாட்டில் Professor David Nunan

சென்ற ஆண்டின் இறுதியில் மாநில அரசு சமூகமொழிக் கல்வி அபிவிருத்திக்கெனெ 11 மில்லியன் டொலர்களை அடுத்த மூன்று வருடங்களில் செலவிடவுள்ளதாக அறிவித்ததை நீங்கள் அறிவீர்கள்.  இத்தொகையில் ஆறரை மில்லியனுக்கும் சற்று அதிகமான தொகை சமூக மொழிப்பாடசாலை ஆசிரியர்களின் தராதரத்தை உயர்த்துவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.  பொறுப்புக் கூறலில் உயர்ந்த தரத்தைப் பேணுவதோடு கற்பித்தல் துறை சார்ந்த தகுதியினை வளர்க்க விரும்பும் பாடசாலைகளுக்கு சுமார் இரண்டு மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.  மேலும் பாலர் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையான மொழிகல்விப் பாடத்திட்டத்தை உருவாக்குவதற்கு எட்டு இலட்சம் டொலர்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிதி ஒதுக்கீடு மூலம் சமூகமொழிப் பாடசாலைகளில் மொழிக்கல்வி பயிலும் மாணவர்களுக்குத் தரமானதும் பொருத்தமானதுமான மொழிக் கல்வியை வழங்கும் அரசின் எண்ணமும் இத்துறை சார்ந்த சமூக ஆர்வலர்களின் எண்ணமும் வெளிப்படுகிறது.




இந்தப் பின்னணியில் எதிர்வரும் சனிக்கிழமை (28/04/2018) நி..வே மாநில சமூக மொழிப் பாடசாலை ஆசிரியர்கள் நிர்வாகிகளுக்கான மொழிக்கல்வி மாநாடு சிட்னி பல்கலைக்கழகத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.


ஆரம்ப அமர்வைத் தொடர்ந்து நடைபெறும் விசேட ஆற்றுகையில் அவுஸ்திரேலியாவின் தலைசிறந்த மொழிக்கல்வியாளரும், ஹாங்கொங் பல்கலைக்கழக மேனாள் பேராசிரியரும், ஏராளமான மொழிக்கல்வி சார்ந்த நூல்களை எழுதியவருமான டேவிட் நூனன் (Professor David Nunan)அவர்கள் சிறப்புரை ஆற்றுகிறார்கள்

மாலை அமர்வுகளில் மூன்று மணித்தியாலங்கள் வெவ்வேறு தலைப்புகளில் சமகால செயலமர்வுகள் நடைபெறுகின்றன. இதில் மொழிக்கல்வி கற்பித்தலில் துறைசார்ந்த வளவாளர்கள் கலந்துகொண்டு ஒரு மணிநேர பயிற்சி செறியை வழங்கவுள்ளனர். 

    



2.     Survey on Resources for Community Languages Schools Sector conducted by a team headed by Prof. Ken Cruickshank

பேராசிரியர் கென் குறுக்ஷாங் (Prof. Ken Cruickshank) தலைமையில் சிட்னி பல்கலைக்கழகத்தின் சமூக மொழிக்கல்விப் பிரிவு இயங்கிவருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.  பேராசிரியர் கென் குறுக்ஷாங் அவர்கள் தமிழ்க் கல்விச் சமூகத்துக்கு நெருக்கமானவர் தமிழ்ப் பாடசாலைகள் கூட்டமைப்புடன் நீண்டகாலமாக தொடர்பிலிருப்பவர். என்பதோடு எமது தமிழ் ஆசிரிய மாநாடுகள், செயலமர்வுகள் மற்றும் முதலாவது இனிய தமிழ் மாலை ஆகிய நிகழ்ச்சிகளிலும் கலந்து சிறப்பித்துள்ளார்.




அவர் தலைமையில் இயங்கும் சமூகமொழிக்கல்விப் பிரிவு, சமூகமொழிப் பாடசாலைகளுக்கு வேண்டிய கற்பித்தல் சார்ந்த வளங்களை (resources) உருவாக்குவதற்கு முயற்சி எடுத்துவருகின்றது.  அதன் தொடர்ச்சியாக சமூக மொழிப் பாடசாலைகளின் வளங்கள் தொடர்பான கருத்துக்கணிப்பு ஒன்று நடைபெறுகிறது.   
(developing resources to help all community languages schools but they need information on what schools have and what they need)  

இதன் மூலம் மொழிப்பாடசாலைளுக்குக் கிடைக்கும் நன்மைகளைக் கருத்தில் கொண்டு சமூக மொழிப் பாடசாலைகளின் வளங்கள் தொடர்பாக உருவாக்கப்பட்டுள்ள கருத்துக்கணிப்பில் (Survey) அதிபர்களையும் ஆசிரியர்களையும் பங்கெடுத்து உதவுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

பாடசாலை நிர்வாகிகள் தங்கள் பாடசாலையில் சேவையாற்றும் அதிபர் ஆசிரியர்களுக்கு இச்செய்தியைப் பகிர்ந்து உதவுமாறு அன்புரிமையுடன் வேண்டிக்கொள்கிறேன்.

கருத்துக்கணிப்பு -
ஆசிரியர்களுக்கானது (Teachers survey)
 அதிபர்களுக்கானது (Principals survey)

தங்கள் ஆதரவிற்கு நன்றி
அன்புடன்
தி.திருநந்தகுமார்
Vice President,
NSW Federation of Community Languages Schools



No comments: