“வடகொரிய அணு ஆயுத பயன்பாடு உலக அமைதிக்கு அச்சுறுத்தல் :பன்னாட்டு ஊகவியலாளர் மாநாட்டில் கவனத்தில் கொள்ளப்படும்”
பதற்றத்தை தணிக்க ஆலோசனை !!!
பாகிஸ்தான் பாராளுமன்றில் முதன் முறையாக இந்து தலித் பெண்!!!
சிரியாவில் ரஷ்ய விமானம் வீழ்ந்து விபத்து ; 32 பேர் பலி
சவுதி அரேபியாவின் தேசிய தினத்தில் பெண்களுக்கான மரதன் போட்டியில் 1500 பெண்கள்
“வடகொரிய அணு ஆயுத பயன்பாடு உலக அமைதிக்கு அச்சுறுத்தல் :பன்னாட்டு ஊகவியலாளர் மாநாட்டில் கவனத்தில் கொள்ளப்படும்”
04/03/2018 உலக ஊடகவியலாளர் மாநாடு தென் கொரியாவின் சியோல் நகரில் அமைந்துள்ள கொரிய ஊடகவியலாளர் மையத்தில் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாக உள்ளது .
கொரிய தீபகற்பப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலான நிலைமையினால் உலக அமைத்திக்கு ஏற்படக் கூடிய ஆபத்தினை கருத்தில் கொண்டு நிலையான அமையை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை உலகிற்கு வலியுறுத்தும் வகையிலேயே இந்த உலக ஊடகவியலாளர் மாநாடு ஏற்பாடு செய்யப்படட்டுள்ளது.
இந்நிலையில் கொரிய தீபகற்பத்தின் அணு ஆயுதக் குறைப்பு தொடர்பில் உலக ஊடகவியலாளர்களின் பங்ககளிப்பு என்ற தொனிப்பொருளில் ஒரு வார காலம் இந்த மாநாடு இடம்பெறவுள்ளது. இதன் போது நிலையான அமைதியை நோக்கிய கொரியாவின் பன்னாடுகளுடனான இராஜதந்திர உறவுகள் மற்றும் வெளிவிகார கொள்ளை உள்ளிட்ட கொரியாவின் தேசிய பொருளாதரம் மற்றும் கலாசாரம் என்பவை குறித்தும் இதன் போது தெளிவுப்படுத்தப்படவுள்ளது.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் கவனத்திற்குட்பட்டுள்ள வட கொரிய அணு ஆயுத பயன்பாடு குறித்து உலக நாடுகளின் ஊடகயவியலாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதே தென் கொரியவின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால் வட கொரியாவின் தொடர் அச்சுறுத்தலான நடவடிக்கைகள் கவலையளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
முழு அமெரிக்கா கண்டத்தையும் அடையக் கூடிய புதிய வகை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை வெற்றிகரமாக சோதித்துள்ளதாகவும் ஒரு அணு ஆயுத நாடாக மாற வேண்டும் என்ற குறிக்கோளை வட கொரியா அடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசு தொலைக்காட்சி இவ்வாறான நெருக்கடியான சூழலில் அறிவித்தமை உலக நாடுகளை ஆச்சரியப்படவும் அச்சத்திற்குள்ளாக்கும் வகையிலும் அமைந்ததுள்ளதாக தென் கொரியா குறிப்பிட்டுள்ளது.
மேலும் மிகவும் சக்தி வாய்ந்தது என கூறப்பட்ட ஹவாசாங்-15 ஏவுகணையையும் இந்த சூழலில் ஏவியிருந்தது. ஜப்பான் கடலில் விழுந்த இந்த ஏவுகணை வட கொரியா முன்பு சோதித்த ஏவுகணைகளை விட அதிக உயரம் பறந்தது என சர்வதேச செய்திகள் உறுதிப்படுத்தின.
இந்நிலையில் தென்கொரியாவின் பியோங்சாங்கில் இடம்பெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் வட கொரியத் தலைவர் கிம் ஜாங்-உன்னின் தங்கை கிம் யோ-ஜாங் கலந்து கொண்டார் .
மூத்த உறுப்பினரான கிம் யோ-ஜாங் தான் தென்கொரியா செல்லும் முதல் கிம் குடும்ப உறுப்பினர். குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வட கொரியா கலந்து கொள்வது இருதரப்பு உறவுகளில் நிலவும் பதற்றத்தைத் தணிக்கும் என்று கருதப்பட்டது. இரு கொரிய நாடுகளும் தொடக்க நிகழ்ச்சியில் ஒரு கொடியின் கீழ் அணி வகுத்துச் செல்வது நிலையான அமைதிக்காக சமிஞ்சை என கருதப்பட்டது.
ஆகவே உலக நாடுகள் இந்த விடயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும் என உலக நாடுகளிடம் தென் கொரியா கேட்டுக்கொண்டுள்ளது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் நாளை ஆரம்பிக்கப்படவுள்ள உலக ஊடகவியலாளர் மாநாடு முக்கியமான ஒன்றென கொரிய ஊடகயவியலாளர் மையம் குறிப்பிட்டுள்ளது. நன்றி வீரகேசரி
பதற்றத்தை தணிக்க ஆலோசனை !!!
06/03/2018 இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றத்தை தணிப்பது தொடர்பாக தென் கொரிய தூதருடன் கிம் ஜாங் உன் ஆலோசனை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரியப் போருக்குப் பிறகு வட - தென் கொரிய நாடுகளிடையே கடுமையான பதற்றம் நிலவி வருகிறது. சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா ஏவுகணைச் சோதனைகளையும், அணு குண்டு சோதனைகளையும் தொடர்ந்து நடத்தி வருவதால் கொரிய தீபகற்பத்தில் கடும் போர்ப் பதற்றம் நிலவி வந்தது
இந் நிலையில் தென் கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக்கில் தங்கள் நாட்டு வீரர்களை அனுப்புவது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிவித்தார். போட்டியின் தொடக்க விழாவில் பங்ககேற்பதற்காக வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன்னின் இளைய சகோதரி ஜிம் யோ-ஜோங் தென் கொரியா சென்றிருந்தார்.
மேலும் நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி தென் கொரிய அதிபருக்கு கிம் ஜோங்-உன் கடிதம் மூலம் அழைப்பு விடுத்திருந்தார். இந்தச் சூழலில் வட கொரியாவின் அணு ஆயுத திட்டத்தைக் கைவிடுவது உள்ளிட்ட முக்கியப் பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நல்லெண்ணத் தூதுக் குழுவை வட கொரியாவுக்கு அதிபர் மூன் ஜே-இன் அனுப்பினார்.
வடகொரியாவுக்கு வந்த தென்கொரிய குழு, வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சந்தித்து பேசியது. இந்த சந்திப்பின் போது இருநாடுகளுக்கு இடையேயான பதட்டத்தை தணிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
பாகிஸ்தான் பாராளுமன்றில் முதன் முறையாக இந்து தலித் பெண்!!!
05/03/2018 பாகிஸ்தான் மேல் மன்றிற்கு முதல் முறையாக இந்து தலித் பெண் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் பாராளுமன்ற மேல் மன்றில் மொத்தம் 52 உறுப்பினர்கள் (செனட்டர்கள்) உள்ளனர். அவர்கள் அனைவரும் இந்த மாதத்துடன் ஓய்வு பெறுகின்றனர். இதையடுத்து புதிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் மற்றும் சுயேட்சை உறுப்பினர்கள் உட்பட 130 பேர் மேல் மன்றிற்கு போட்டியிட்டனர்.
பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்களில் இருந்து தலா 12 உறுப்பினர்கள், கைபர் பக்துன்கவா மற்றும் பலுசிஸ்தான் மாகாணங்களில் இருந்து தலா 11 உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 52 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க மாகாண மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
இந்நிலையில் சிந்து மாகாணத்தைச் சேர்ந்த இந்து தலித் பெண் கிருஷ்ண குமாரி கோலி என்பவர் மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் வரலாற்றில் இந்து தலித் பெண் மேலவைக்குத் தேர்வு செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
பிலாவல் புட்டோ சர்தாரி தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சியின் (பிபிபி) உறுப்பினர் கிருஷ்ண குமாரிக்கு மேலவைத் தேர்தலில் போட்டியிட பிபிபி கட்சி வாய்ப்பளித்தது. ஏற்கெனவே பிபிபி கட்சி சார்பில் முதல் இந்து பெண் ரத்னா பகவன்தாஸ் சாவ்லா என்பவர் மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கிருஷ்ண குமாரி கடந்த 1979ஆம் ஆண்டு பிறந்தவர். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். இவர் சுதந்திர போராட்ட வீரர் ரூப்லோ கோலி குடும்பத்தில் இருந்து வந்தவர். கடந்த 1857ஆம் ஆண்டு பிரிட்டிஷார் சிந்து மாகாணத்துக்குள் ஊடுருவ முயன்ற போது அவர்களுக்கு எதிரான போரில் ரூப்லோ பங்கேற்றார். அதன்பின் ரூப்லோ கைது செய்யப்பட்டு பிரிட்டிஷாரால் 1858 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ஆம் திகதி தூக்கிலிடப்பட்டுள்ளார்.
16 வயதாக இருக்கும் போது லால்சந்த் என்பவருடன் இவருக்கு திருமணம் நடைபெற்றது. எனினும் சிந்து பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து படித்து சமூகவியல் முதுகலைப் பட்டம் பெற்றார். அதன்பின் பிபிபி கட்சியில் சேர்ந்தார். ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர். அவர்களுக்காகப் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டவர்.
பாராளுமன்ற மேல் மன்ற தேர்தலில் பதவியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் பிரதமர் நவாஸ் கட்சி 15 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
சிரியாவில் ரஷ்ய விமானம் வீழ்ந்து விபத்து ; 32 பேர் பலி
06/03/2018 சிரியாவில் இடம்பெற்றுவரும் போரில் அந்நாட்டு அரசுக்கு ஆதரவாக சென்ற ரஷ்ய விமானம் விபத்து உள்ளானதில் 32 பேர் உயிரிழந்துள்ளனர்.
சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது.
சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது.
போர் தற்போது உச்ச நிலையை அடைந்துள்ள நிலையில், சிரியாவில் இடம்பெற்றுவரும் இராணுவ தாக்குதல் காரணமாக கடந்த 15 நாட்களில் மட்டும் இதுவரை 1300 பேர் உயிரழந்துள்ளனர்.
இந்த போரில் தினமும் 5 மணி நேரம் போர் நிறுத்தம் செய்யப்படுகிறது. ஆனாலும் ரஷ்யா அவ்வப்போது வான்வெளி தாக்குதல் மேற்கொள்கிறது.
இந்த நிலையில் சிரியா அரசுக்கு ஆதரவாக சென்ற ரஷ்ய விமானம் விபத்துகுள்ளாகியுள்ளது. சிரியாவின் லடாகியாவிலுள்ள ரஷ்ய விமான தளத்திற்கு சென்றபோது விபத்துக்குள்ளானது.
சிரியாவில் ரஷ்ய விமானம் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணித்த 32 பேர் உயிரிழந்துள்ளனர். 32 பேரில் 6 பேர் விமான சிப்பந்திகள் ஆவர். நன்றி வீரகேசரி
சவுதி அரேபியாவின் தேசிய தினத்தில் பெண்களுக்கான மரதன் போட்டியில் 1500 பெண்கள்
05/03/2018 சவுதி அரேபியாவில் முதன் முறையாக பெண்கள் மட்டும் கலந்துக் கொண்ட மரதன் ஓட்டப்பந்தயம் நிகழ்ந்துள்ளது.
இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவில் பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் சிறிது சிறிதாக தளர்த்தப்பட்டு வருகின்றன. இங்கு தற்போதுதான் பெண்கள் வாகனங்கள் செலுத்த அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த செப்டம்பர்மாதம் ரியாத் நகரில் நடைபெற்ற ஒரு கால்பந்து போட்டி மைதானத்தில் நடைபெற்ற சவுதி அரேபியா தேசியதிருநாள் நிகழ்வைக் காண அனுமதி வழங்கப்பட்டது.அதையொட்டி சமீபத்தில் பெண்கள் மட்டுமே கலந்து கொண்ட 3.5 கிமீ தூரத்துக்கான மரதன் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.
இதில் கலந்துக் கொள்வதாக பெயர் கொடுத்த 2,000 பெண்களில் சுமார் 1,500 பெண்கள் கலந்துக் கொண்டனர்.இதில் சவுதியை சேர்ந்த 28 வயது பெண் பொறியாளரான மிஸ்னா அல் நசார் என்பவர் 15 நிமிடங்களில் 3.5 கிமீ தூரத்தை கடந்து வெற்றி பெற்றார். அமெரிக்கா மற்றும் தைவான் நாட்டை சேர்ந்த பெண்கள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்தனர்.
வெற்றி பெற்ற மிஸ்னா,
“நான் இந்தப் போட்டியில் கலந்து வெற்றி பெற்றதை பெருமையாக கருதுகிறேன். டோக்யாவில் வரும் 2020 ஆம் ஆண்டு நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் எனது நாட்டின் சார்பாக கலந்துக் கொள்ள ஆர்வமாக உள்ளேன்.
நான் இந்த போட்டியில் வெற்றி பெற எனது குடும்பத்தினரின் ஒத்துழைப்பே காரணம் ஆகும். நான் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். என்னைப் போன்ற பெண் விளையாட்டாளர்களை தற்போது ஊக்குவிக்க தொடங்கி உள்ள அரசுக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment