உலகச் செய்திகள்


ரோஹிங்கியர்களின் 55 கிராமங்கள் அழிப்பு : இன அழிப்பென ஐ.நா. குற்றஞ்சாடல்

5 நாட்களில் 400க்கு மேற்பட்டோர் பலி!!!

ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு!!!

பாகிஸ்தானின் ஆட்சி மொழியாக சீனாவின் மாண்டிரின் மொழி அங்கீகாரம்!!!

ஆன்மீக ஆலோசனை வழங்கிய பெண்ணை 3ஆவது முறையாக திருமணம் முடித்தார் கான்

ரோஹிங்கியர்களின் 55 கிராமங்கள் அழிப்பு : இன அழிப்பென ஐ.நா. குற்றஞ்சாடல்
24/02/2018 மியன்மாரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் வாழ்ந்த 55 கிராமங்கள் அழிக்கப்பட்டமை தொடர்பாகச் செயற்கைக்கோள் படங்களின் மூலம் தெரியவந்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
மியன்மாரின் ராஹினி மாநிலத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத இறுதியிலிருந்து நிலவிய வன்முறை காரணமாக அரை மில்லியனுக்கும் அதிகமானோர் தங்களது வசிப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர். இவர்களில் பலர் பங்களாதேஷில் தஞ்சம் கோரியுள்ளனர்.
ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின்போது, இவர்களின் வசிப்பிடங்கள் தீக்கிரையாக்கப்பட்டதுடன் வன்முறையில் அகப்பட்டு பலர் உயிரிழந்தனர். இதேவேளை இதுவொரு இன அழிப்பென ஐ.நா. குற்றஞ்சாட்டியுள்ளது.
இருப்பினும் பொதுமக்களை இலக்குவைத்து தாம் தாக்குதல் நடத்தவில்லையெனவும், போராளிகளை இலக்குவைத்தே தாம் தாக்குதல் நடத்தியதாகவும் மியன்மார் இராணுவத்தினர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.    நன்றி வீரகேசரி 


5 நாட்களில் 400க்கு மேற்பட்டோர் பலி!!!
23/02/2018 சிரியா உள்நாட்டுப் போரில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள கவுட்டா நகரை மீட்பதற்காக ரஷ்ய படைகளின் ஆதரவுடன் அதிபர் பஷார் அல் ஆசாத்க்கு  ஆதரவு படைகள் மூர்க்கமாக சண்டையிட்டு வருகின்றன.
கிழக்கு கவுட்டா பகுதியில் கடந்த 18ஆம் திகதி இரவு முதல் படைகள் தீவிர வான்வழி தாக்குதலில் ஈடுபட்டு வந்தன. 5 நாட்களாக நடந்த தாக்குதலில் 403 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர். பலியானவர்களில் 95க்கும் மேற்பட்டோர் சின்னஞ்சிறு குழந்தைகள் ஆவர்.
அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டாலும், பயங்கரவாதிகளிடம் இருந்து கவுட்டா நகரை விடுவிப்பதற்குத்தான் தாக்குதல் நடைபெறுவதாக சிரியா அரசு கூறுகிறது.
கிழக்கு கவுட்டாவில் நடந்து உள்ள தாக்குதல் கற்பனை செய்து பார்க்க முடியாத பயங்கரமான தாக்குதல் என்று ஐ.நா. சபை கூறுகிறது. நிவாரணப் பொருட்கள் சென்று அடைவதற்கு வசதியாக சண்டை நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்று ஐ.நா. சபை வலியுறுத்தி உள்ளது.   நன்றி வீரகேசரி


ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு!!!

21/02/2018 அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நாட்டில் துப்பாக்கி வாங்குவோர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை அதிரடியாக அறிவித்துள்ளாா்.
புளோரிடா மகாணத்திலுள்ள பாடசாலையில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தினால் நாடெங்கும் துப்பாக்கி உபயோகத்திற்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனிடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நாட்டில் துப்பாக்கி வாங்குவோர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளாா்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் பார்க்லேண்ட் பாடசாலையில் 19 வயதான முன்னாள் மாணவர் நிக்கோலஸ் குரூஸ் கடந்த 14 ஆம் திகதி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 17 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவம்  அந்த நாட்டையே உலுக்கியது.  துப்பாக்கி கலாச்சாரம் நாடெங்கும் பரவுவதை எண்ணி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்பட்டுள்ளது. இதனால் அமெரிக்க நாட்டு மக்களும், மாணவர்களும் நாட்டின் பல இடங்களில் துப்பாக்கி உபயோகத்தை எதிர்த்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே வெள்ளை மாளிகையில் நடைபெற்ற சந்திப்பில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் துப்பாக்கி உபயோகத்திற்கு புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளார். இதன் முறையே புதிதாக துப்பாக்கி வாங்குவோர்களின் முழு பின்னணி விவரங்கள் அறிந்த பிறகே அவர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.   நன்றி வீரகேசரிபாகிஸ்தானின் ஆட்சி மொழியாக சீனாவின் மாண்டிரின் மொழி அங்கீகாரம்!!!

20/02/2018 பாகிஸ்தானின் ஆட்சி மொழியாக மாண்டரினை அறிவிப்பதற்கு பாகிஸ்தானிய செனட் ஒரு தீர்மானத்தை கொண்டுவந்து நேற்று அனுமதி வழங்கி உள்ளது. 
சீனாவில் 70% மக்கள் மாண்டிரின் மொழியை பேசுகின்றனர். சீனா பாகிஸ்தானுக்கு பல்வேறு வகையான உதவிகளை செய்து வருகிறது.  சமீபத்தில்  சீனா மற்றும் பாகிஸ்தானின் உறவு மேலும் வலுவடைந்து உள்ளது. இதற்கு உதாரணமாக  மாண்டரின் மொழி  அதிகாரபூர்வ மொழியாக பாகிஸ்தான் அங்கீகரித்து உள்ளது. 
பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகளைப் பொறுத்த வரையில் இந்த நடவடிக்கை தேவை என்று அதில் கூறப்பட்டு உள்ளது. இஸ்லாமாபாத் மற்றும் பெய்ஜிங் இடையில் உள்ள உறவு மேலும் ஆழப்படுத்த மாண்டரின் தெற்காசிய நாட்டின் ஆட்சி மொழியாக இருந்தால் சீனா பாகிஸ்தான் பொருளாதாரத்தில் இணைய எளிதாக தொடர்பு உதவி புரியும் என கூறப்பட்டு உள்ளது.
இது குறித்து  பாகிஸ்தானின் முன்னாள் தூதர் ஹுசைன் ஹக்கானி தனது டுவிட்டரில்,
"70 ஆண்டுகள் இந்த ஒரு குறுகிய காலத்தில், சொந்த மொழிகளை புறக்கணித்து  நாட்டில் அதிக மக்களின்  தாய் மொழியாக இல்லாத ஆங்கில மொழி, உருது, அரபிக் மற்றும் இப்போது சீன மொழி - ஆகிய நான்கு மொழிகளுக்கு ஊக்கமளிப்பதில் பாகிஸ்தான் மிகுந்த ஆர்வம் காட்டி உள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில்  பரவலாக அதிகம் பேசப்படும் பஞ்சாப் மொழி பாஷ்டோ மற்றும் பல பிற மொழிகளும் நாட்டின் உத்தியோகபூர்வ மொழிகளாக அறிவிக்கப்படவில்லை என கூறி உள்ளார்.
பாகிஸ்தானின் டான் செய்தி ஊடகம்  வெளியிட்டு உள்ள தகவலில்  பாகிஸ்தானியர்கள் சீன மொழியை கற்றுகொள்வதில் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.  ஏனெனில் மாறிவரும் மாற்றங்கள் மற்றும் மாண்டரின்  மொழி  அறிதல் பாகிஸ்தானிலும் சீனாவிலும் அதிக வேலை வாய்ப்பைக் குறிக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்." என கூறி உள்ளார்.   நன்றி வீரகேசரி
ஆன்மீக ஆலோசனை வழங்கிய பெண்ணை 3ஆவது முறையாக திருமணம் முடித்தார் கான்

19/02/2018 முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் பாகிஸ்தான் "தெஹ்ரீக் ஈ இன்சாப்" கட்சி தலைவரான இம்ரான் கான் 3ஆவது முறையாக திருமணம் செய்து கொண்டார்.
அணியின் கப்டனாக இம்ரான் கான் இருந்த போது கடந்த 1992ஆம் ஆண்டு உலக கிண்ணத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தன் வசப்படுத்திக் கொண்டது.
கிரிக்கெட்டில் இருந்து விலகிய பின் பாகிஸ்தான் "தெஹ்ரீக் ஈ இன்சாப்" என்ற தனி கட்சியை தொடங்கி வழிநடத்தி வருகிறார் கான்.
இங்கிலாந்து நாட்டு கோடீஸ்வரரின் மகளான ஜெமிமா கோல்ட்ஸ்மித் மற்றும் இம்ரான் கான் திருமணம் 1995ஆம் ஆண்டு நடைபெற்றது.  இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.  9 வருட திருமண வாழ்க்கைக்கு பின் இருவரும் விவாகரத்து பெற்றனர். 
அதன்பின் 2015ஆம் ஆண்டில் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி நடத்துபவரான ரேஹாம் மற்றும்  கான் திருமணம் நடந்தது.  10 மாதங்களில் இந்த திருமணம் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் 40 வயதான பஷ்ரா மேனகா என்பவரை ஆன்மீக ஆலோசனை பெறுவதற்காக கான் சந்தித்து உள்ளார்.  கானின் கட்சி பற்றிய மேனகாவின் அரசியல் கணிப்புகள் சில உண்மையான நிலையில் அவருடனான நெருக்கம் அதிகரித்தது. 
இதனை தொடர்ந்து 5 குழந்தைகளை பெற்றவரான மேனகா தனது கணவரை விவாகரத்து செய்துள்ளார்.  கடந்த மாத தொடக்கத்தில் இம்ரான் கானை திருமணம் செய்ய ஒப்பு கொண்டுள்ளார்.
இந் நிலையில் லாஹூரில் உள்ள மேனகாவின் சகோதரர் இல்லத்தில் நேற்று கான் மற்றும் மேனகா திருமணம் எளிமையான முறையில் நடந்து முடிந்தது. 
இந்த திருமணத்தில் கானின் சகோதரிகள் கலந்து கொள்ளவில்லை.  2 முறை விவாகரத்து ஆன நிலையில் சகோதரிகள் மீது கானுக்கு நம்பிக்கை இல்லாத காரணத்தினால் 3ஆவது திருமணத்திற்கு அவர்களை அழைக்கவில்லை என கூறப்படுகிறது.   நன்றி வீரகேசரிNo comments: