கோபாலகிருஷ்ணர் சிவகுமாரசாமி (சிவஞானம்)
1ம் கட்டை ஒழுங்கை, புலோலி கிழக்கு, பருத்தித்துறையினை வதிவிடமாகவும், காணிப்பதிவாளர் அலுவலகத்தில் கடமையாற்றி அரச ஓய்வூதியம் பெற்றவருமாகிய திரு. கோபாலகிருஷ்ணர் சிவகுமாரசாமி (சிவஞானம்) அவர்கள் கடந்த (17.02.2018) சனிக்கிழமை அன்று காலமாகி விட்டார். அன்னார் காலஞ் சென்ற கோபாலகிருஷ்ணர் - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும் காலஞ் சென்ற சந்திரசேகரம் - கனகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும் ஜெயராணியின் அன்புக் கணவரும் இரத்தினம் கனகசபாபதி, கனகம்மா சுப்பிரமணியம், விஜயம் விக்கினேஸ்வரமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரனும் சுமதி(பிரான்ஸ்), தயாபரன்(அவுஸ்திரேலியா), வசந்தி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத்தந்தையும் சந்திரகுமார்(பிரான்ஸ்), குமரேசன்(பிரான்ஸ்), ஆகியோரின் அன்பு மாமனாரும் கஜன் சந்திரகுமார், ஜனகன் சந்திரகுமார், சுவேதா சந்திரகுமார், மீரா தயாபரன், விக்னேஷ் குமரேசன், விதுஷா குமரேசன், விந்துஷா குமரேசன் ஆகியோரின் அன்புப்பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் (22.02.2018) வியாழக்கிழமை நடைபெற்றது. உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் இவ்வறிவித்தலை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
No comments:
Post a Comment