இலங்கைச் செய்திகள்


இலங்கை வந்தார் சர்ச்சைக்குரிய பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ 

முள்ளிவாய்க்காலில் காணி அபகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்டம்.!

அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் கந்தையா நீலகண்டனின் இறுதிக்கிரியை 





இலங்கை வந்தார் சர்ச்சைக்குரிய பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ 

22/02/2018 சர்ச்சைக்குட்பட்ட  பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதரகத்தில் பணியாற்றும் இராணுவ அதிகாரி பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ இன்று இலங்கை வந்தடைந்தார்.



இந்நிலையில், சர்ச்சைக்குரிய பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ, கலந்துரையாடல் ஒன்றுக்காகவே இலங்கைக்கு மீள அழைக்கப்படுவதாக தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து தெரிவித்திருந்தார்.
இதேவேளை, அவருக்கு எதிராக  ஒழுக்காற்று நடவடிக்கையோ விசாரணையோ  முன்னெடுக்கப்படாது என்றும் அவருக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாதெனவும் அவர் பாரிய குற்றங்கள் எதையும் செய்ததாக கருதவில்லை.  அந்த இடத்தில்   பிரபாகரன்  மற்றும்  தனி ஈழம் குறித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் பேசியிருக்கின்றனர். 
அதனால் அந்த அதிகாரி அவ்வாறு நடந்துகொண்டிருக்கின்றார்.  அதில் எந்தப் பெரிய தவறையும் நாங்கள்  காணவில்லையென தெரிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே அவர் இன்று பிரித்தானியாவிலிருந்து இலங்கை வந்துள்ளார்.
நன்றி வீரகேசரி 







முள்ளிவாய்க்காலில் காணி அபகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்டம்.!

22/02/2018 முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் கோத்தபாய கடற்படை முகாம் அமைந்துள்ள பொது மக்களுக்குச் சொந்தமான காணிகளை அளவீடு செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காணி உரிமையாளர்களும், பொது மக்களும் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
நன்றி வீரகேசரி










அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் கந்தையா நீலகண்டனின் இறுதிக்கிரியை 


21/02/2018 அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி கந்தையா நீலகண்டனின் இறுதிக் கிரியை இன்று இடம்பெற்றது.
அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி கந்தையா நீலகண்டன் கடந்த ஞாயிற்றுக் கிழமை தனது 70 ஆவது வயதில் இன்று காலமானார்.
கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சுகயீனம் காரணமாக உயிரிழந்தார்.
அன்னாரின் இறுதிக் கிரியை இன்று பொரளை கனத்தையில் இடம்பெற்றது.
நன்றி வீரகேசரி

























No comments: