யாழ் இந்துக்கல்லூரியின் நூல் வெளியீடு - உலகம் பலவிதம்

.

யாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்க கொளும்புக்கிழையினர் அண்மையில் உலகம் பலவிதம் என்ற நூலை வெளியிட்டிருந்தனர் . இந்நூல் ஆசிரியர்  யாழ் இந்துக்கல்லூரியின் முன்னை நாள் ஆசிரியரும்  ( 1912 - 1947 )  அன்றைய யாழ்ப்பாணத்தின் முன்னணி பத்திரிகைகளில் ஒன்றான இந்துசாதனத்திற்கு 1912 இல் இருந்து 1921 வரை உதவி ஆசிரியராகவும்  1921 இல் இருந்து 1951 வரை பிரதம ஆசிரியராகவும் இருந்த ம.வே.திருஞானசம்பந்தப்பிள்ளை அவர்கள் ஆவார்.
இந்நூல் உலகில் பல நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டது . கடந்த ஞாயிற்றுக்கிழமை ( 18.02.2018) அன்று சிட்னி அவுஸ்ரேலியாவில் யாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்க சிட்னிக் கிளையினரின் ஆதரவில் வெளியிடப்பட்டது .
நூல் வெளியீட்டு விழாவை தற்போதைய தலைவர் திரு மு.தனபாலசிங்கம் தொடக்கி வைக்க ,  வெளியீட்டு விழா தொடர்பாளர் திரு மு.குணசிங்கத்தின் அறிமுக உரையுடன் ஆரம்பமானது.  நயப்புரை அரங்கு திரு திருநந்தகுமார் தலைமையில்  இடம்பெற்றது நயப்புரையை திரு செ.பாஸ்கரன், திரு மு.கோவிந்தராஜன் , திரு அ.சந்திரஹாசன் , திரு. ரஞ்சகுமார் , திரு. சிறிக்குமார் மற்றும் திருமதி சாந்தி துஸ்யந்தன் ஆகியோர் வழங்கினார்கள் . நூலின் முதல் பிரதிஜை யாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்க மெல்பெர்ன் கிளையின் தலைவர் வழங்க சிட்னி  தமிழ் அறிவகத்தின் சார்பில் திரு மோகன்குமார்  அவர்கள் பெற்றுக்கொண்டார். நன்றியுரையை செயலாளர் திரு குமணன் அவர்கள் வழங்க விழா நிறைவு பெற்றது .tamilmurasuaustralia

tamilmurasuaustralia

tamilmurasuaustralia


tamilmurasuaustralia

tamilmurasuaustralia

tamilmurasuaustralia

tamilmurasuaustralia

tamilmurasuaustralia

tamilmurasuaustralia

tamilmurasuaustralia

tamilmurasuaustralia

tamilmurasuaustralia

tamilmurasuaustralia

tamilmurasuaustralia

tamilmurasuaustralia

tamilmurasuaustralia

tamilmurasuaustralia

tamilmurasuaustralia

tamilmurasuaustralia

tamilmurasuaustralia

tamilmurasuaustralia

tamilmurasuaustralia

tamilmurasuaustralia

No comments: