தமிழ் சினிமா

உரு 


தமிழ் சினிமா என்றாலே ஆடல், பாடல், சண்டை என ஒரு குறுகிய வட்டத்திற்குள் சுற்றி வருகின்றது. இதில் ஒரு சிலர் தான் விதிவிலக்காக இவற்றை தாண்டி தரமான படங்களை கொடுக்க வேண்டும் என்று குறிக்கோளுடன் இருப்பார்கள். அப்படி விக்கி ஆனந்த் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் தான் இந்த உரு.

கதைக்களம்

கலையரசன், தன்ஷிகா இருவரும் கணவன், மனைவி. இதில் கலையரசன் ஒரு எழுத்தாளர், இவர் ஒரு கதை எழுதுவதற்காக ஓர் இடத்திற்கு தன்ஷிகாவுடன் வருகின்றார்.
Uru
அங்கு ஒரு வீட்டில் இவர்கள் தங்க, கலையரசனை ஒரு முகமூடி அணிந்த நபர் கொல்ல முயற்சிக்கின்றார். ஆனால், அவரால் அந்த வீட்டிற்குள் உள்ளே வர முடியவில்லை.

அனைத்து கதவுகளும் அடைக்கப்பட, அந்த முகமூடி அணிந்திருப்பவர் யார், கலையரசனை ஏன் கொல்ல முயற்சிக்கின்றார் என்பதை பல டுவிஸ்டுகளுடன் சொல்கிறது இந்த உரு (படத்தில் பல டுவிஸ்ட் இருப்பதால் கதை குறித்து விரிவாக கூறவில்லை).

படத்தை பற்றிய அலசல்

ஒரு சில நடிகர்கள் மட்டுமே தொடர்ந்து கொஞ்சம் வித்தியாசமான படங்களாக தேர்ந்தெடுத்து நடிப்பார்கள். அதிலும் தற்போது வளர்ந்து வரும் நடிகர்கள் பலரும் மிகவும் சாமர்த்தியமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றனர். இதில் கலையரசனும் ஒருவர், அதே கண்கள், எய்தவனை தொடர்ந்து தற்போது உருவும் இவருக்கு ஒரு நல்ல பெயரை வாங்கிக்கொடுக்கும்.
தன்ஷிகா படத்தின் மிகப்பெரிய பலம், கண்டிப்பாக டாம் ரைடர் போன்ற படங்களை தமிழில் எடுத்தால் தன்ஷிகா சரியான சாய்ஸ். அதிலும் ஒரு கார் விபத்தில் இவர் கண்ணாடியை உடைத்து விழும் காட்சி எல்லாம் ஹீரோ கூட செய்வார்களா? தெரியவில்லை. தன்ஷிகாவும் தன் கதாபாத்திரம் உணர்ந்து படம் முழுவதும் சிறப்பாக நடித்துள்ளார்.
இப்படம் HUSH என்ற ஹாலிவுட் படத்தின் இன்ஸ்பிரேஷனில் தான் எடுத்தது என்று நன்றாக தெரிகின்றது. அதை மூடி மறைக்காமல் படத்தில் ஒரு சில இடத்தில் தொலைக்காட்சியில் அந்த ஹாலிவுட் படமே ஓடுவது போல் காட்டியது விக்கி ஆனந்தின் புத்திசாலித்தனம்.
ஆனால், படம் முழுவதும் சுவாரசியமாக போக கிளைமேக்ஸ் ஒரு டுவிஸ்ட் இருந்தால் பரவாயில்லை, டுவிஸ்டிற்கு மேல் டுவிஸ்ட் என்பது கொஞ்சம் பி, சி ஆடியன்ஸிற்கு ரீச்சாகுமா? என்பது சந்தேகம் தான்.
டெக்னிக்கலாக படத்தில் எந்த குறையும் சொல்ல முடியாது, பிரசன்னாவின் ஒளிப்பதிவும், ஜோஹனின் பின்னணி இசையும் மிரட்டல்.

க்ளாப்ஸ்

கலையரசன், தன்ஷிகாவின் நடிப்பு.
பின்னணி இசை, பட இடங்களில் நம்மை அச்சத்தில் உறைய வைக்கின்றது.
டெக்னிக்கல் டீம்.

பல்ப்ஸ்

கிளைமேக்ஸ் இன்னும் கொஞ்சம் எல்லோருக்கும் புரியும் படி கூறியிருக்கலாம்.
மொத்தத்தில் உரு அச்சத்தில் உறைய வைக்கும், கண்டிப்பாக பார்க்கலாம்.
Music:

நன்றி  Cineulagam






No comments: