உலகச் செய்திகள்


அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை குறிவைத்து சீன தயாரித்துள்ள 10 அணுகுண்டுகளை ஒரே நேரத்தில் ஏவி தாக்கும் ஏவுகணை

அமெரிக்க ஜனாதிபதியின் மகளால் பாது­காப்பு அதி­க­ரிப்பு.!

ஜும் ஆ தொழுகையின்போது தாக்குதல்; 150க்கும் மேற்பட்டவர்கள் பலி

எகிப்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 235ஆக அதிகரிப்பு

புதிய ஜனா­தி­ப­தி­யாக எமர்ஸன் நாளை பத­வி­யேற்­கிறார்.!




அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை குறிவைத்து சீன தயாரித்துள்ள 10 அணுகுண்டுகளை ஒரே நேரத்தில் ஏவி தாக்கும் ஏவுகணை

22/11/2017 உலக நாடுகளுக்கு மத்தியில் அனைத்து துறைகளிலும் முன்னேறி வரும் சீனா தற்போது அணுசக்தி துறையிலும் தனது வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு சீனா "டாங்பெங் - 41" என்ற ஏவுகணையை தயாரித்து சோதனை நடத்தியது. இது 12 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டது.
இதன் மூலம் 10 அணுகுண்டுகளை ஒரே நேரத்தில் ஏவி தாக்குதல் நடத்த முடியும். அதோடு இவை வெவ்வேறு இலக்குகளை குறி வைத்து தாக்கும் திறன் கொண்டவை.
இதுவரை எழு முறை பரிசோதனை செய்யப்பட்டுள்ள இந்த ஏவுகணை கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் திறன் கொண்டது. தற்போது 8ஆம் முறையாக 2018 மீண்டும் பரிசோதிக்கப்பட உள்ளது.
சீன ஏவுகணை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை குறிவைத்து தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.   நன்றி வீரகேசரி












அமெரிக்க ஜனாதிபதியின் மகளால் பாது­காப்பு அதி­க­ரிப்பு.!
22/11/2017 ஹைத­ரா­பாத்தில் நடை­பெற இருக்கும் தொழில் முனைவோர் மாநாட்டில் அமெ­ரிக்க ஜனா­தி­பதி  டொனால்ட் ட்ரம்பின் மகள் இவாங்கா ட்ரம்ப் கலந்து கொள்­வதால் பலத்த பாது­காப்பு ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்டு வரு­கின்­றன.
சர்­வ­தேச தொழில் முனைவோர் மாநாடு எதிர்­வரும் 28ஆம் திகதி ஹைத­ரா­பாத்தில் நடை­பெ­று­கி­றது. மாநாட்டை பிர­தமர் நரேந்­திர மோடி தொடங்கி வைக்­கிறார்.
இம்­மா­நாட்டில் அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்பின் மகள் இவாங்கா ட்ரம்ப் கலந்து கொள்­கிறார். அமெ­ரிக்க தொழில் முனைவோர் குழு­வுக்கு இவர் தலைமை தாங்கி அழைத்து வரு­கிறார். ஹைத­ரா­பாத்தில் இவர் 3 நாட்கள் தங்­கு­கிறார்.
இவாங்கா ட்ரம்ப் வரு­கை­யை­யொட்டி ஹைத­ரா­பாத்தில் பலத்த பாது­காப்பு ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்டு வரு­கின்­றன.
ஹைத­ரா­பாத்தில் தங்கும் இவாங்கா ட்ரம்­புக்கு 5 அடுக்கு பாது­காப்பு கொடுக்­கப்­ப­டு­கி­றது. முதல் 2 அடுக்­கு­களில் அமெ­ரிக்க இரக­சிய பொலிஸார் பாது­காப்பு பணியில் ஈடு­ப­டு­கின்­றனர்.
இந்­திய சிறப்பு பாது­காப்பு படை­யினர் 3ஆவது அடுக்கு பாது­காப்பை கவ­னிக்­கின்­றனர். அதை­ய­டுத்து 4 மற்றும் 5-ஆவது அடுக்கு பாது­காப்பில் தெலுங்­கானா உளவுப் பிரிவு பாது­காப்பு பொலிஸார் ஈடு­ப­டு­கின்­றனர். இவர்கள் தீவி­ர­வாத தடுப்பு பயிற்சி மேற்­கொண்­ட­வர்கள்.
இவாங்­கா­வுக்கு மிரட்­டல்கள் இருப்­பதால் சர்­வ­தேச தொழில் முனைவோர் மாநாடு நடை­பெறும் இடத்தில் 3 கி.மீ சுற்றளவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இவர் வெஸ்டின் ஹோட்டலில் தங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது மாநாடு நடைபெறும் இடத்தின் அருகே உள்ளது. அதே நேரத்தில் வரலாற்று சிறப்புமிக்க பலாக்னுமா அரண்மனையிலும் தங்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. ஆனால் அது உறுதியாக தெரியவில்லை. ஆனால் இங்கு தெலுங்கானா அரசு சார்பில் இவருக்கு முதலமைச்சர் சந்திர சேகரராவ் விருந்து அளிக்கிறார். அதற்காக இந்த அரண்மனை ஹோட்டல் போன்று மாற்றப்பட்டுள்ளது.
இவாங்கா வருகையையொட்டி அமெரிக்காவின் இரகசிய பொலிஸ் குழு பல தடவை ஹைதராபாத் வந்து ஹோட்டல்கள், மாநாடு நடைபெறும் இடம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர்.
ஹைதராபாத்தில் இவாங்கா ட்ரம்ப் பயணம் செய்ய அமெரிக்க உளவுப்படை குண்டு துளைக்காத புல்லட்‘புரூப்’ கார்களை கொண்டு வருகிறது. துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும், பயிற்சி பெற்ற மோப்ப நாய்களும் வர வழைக்கப்படுகின்றன. மொத்தத்தில் அமெரிக்க ஜனாதி பதிக்குரிய பாதுகாப்பு வழங்கப்படுவதாக இந்தியாவுக் கான அமெரிக்க தூதர் தெரிவித்தார்.  நன்றி வீரகேசரி












ஜும் ஆ தொழுகையின்போது தாக்குதல்; 150க்கும் மேற்பட்டவர்கள் பலி
24/11/2017 எகிப்தின் வட பிராந்திய மாகாணம் சினாயில் உள்ள பள்ளிவாசல் ஒன்றின் மீது பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு மற்றும் துப்பாக்கித் தாக்குதலில் சுமார் 150க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
பிர் அல் அபேத் நகரிலுள்ள அல் ராவ்தா பள்ளிவாசல் மீதே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமையான இன்று, அல் ராவ்தா பள்ளிவாசலில் ஜும் ஆ தொழுகை நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது, நான்கு ‘பிக்-அப்’ ரக வாகனங்களில் வந்த பயங்கரவாதிகள், வந்த வேகத்தில் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது குண்டுகளை வீசியும் துப்பாக்கிகளை இயக்கியும் வன்முறையில் இறங்கியதாக சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் தெரிவிக்கின்றனர்.
தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களில் பலரும் எகிப்திய இராணுவத்தின் ஆதரவாளர்களே என்பதால், அவர்களை இலக்கு வைத்தே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
இதில் பலியானவர்கள் தவிர மேலும் நூறு பேர் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.   நன்றி வீரகேசரி










எகிப்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 235ஆக அதிகரிப்பு

25/11/2017 எகிப்தில் அல் ராவ்தா என்ற சூஃபி பள்ளிவாசல் மீது பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு மற்றும் துப்பாக்கித் தாக்குதல்களில் பலியானவர்கள் எண்ணிக்கை 235ஆக உயர்ந்துள்ளது.

வெள்ளிக்கிழமை ஜும்-ஆ தொழுகையில் கலந்துகொண்ட, எகிப்திய இராணுவ ஆதரவாளர்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
நான்கு ‘பிக் அப்’ ரக வாகனங்களில் வந்த பயங்கரவாதிகள் அதிரடியாக கண்மூடித்தனமாக துப்பாக்கிகளை இயக்கினர். இதில் 155 பேர் பள்ளிவாசலிலேயே பலியாகினர்.
காயமடைந்த 100க்கும் மேற்பட்டோரை வைத்தியசாலையில் அனுமதித்தபோதும் சிகிச்சை பலனின்றி சுமார் எண்பது பேர் உயிரிழந்தனர்.
தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு இயக்கமும் பொறுப்பேற்காதபோதும் இது ஐ.எஸ்.ஸின் நடவடிக்கையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
தாக்குதலில் ஈடுபட்டவர்களைத் தேடி எகிப்திய இராணுவம் முழுமூச்சாகக் களமிறங்கியுள்ளது.   நன்றி வீரகேசரி









புதிய ஜனா­தி­ப­தி­யாக எமர்ஸன் நாளை பத­வி­யேற்­கிறார்.!

23/11/2017 சிம்­பாப்­வேயின் ஜனா­தி­ப­தி­யாக நீண்ட காலம் சேவை­யாற்­றிய ரொபேர்ட் முகாபே எவரும் எதிர்­பா­ராத வகையில் நேற்று முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை இரவு தனது பத­வியை இரா­ஜி­னாமா செய்­த­தை­ய­டுத்து,  புதிய ஜனா­தி­ப­தி­யாக முன்னாள்  உப ஜனா­தி­பதி எமர்ஸன் மனன்­கக்வா   நாளை வெள்­ளிக்­கி­ழமை பத­வி­யேற்­க­வுள்ளார்.
 ரொபேர்ட் முகா­பேயால் பணி நீக்கம் செய்­யப்­பட்­டி­ருந்த எமர்ஸன் இரு வாரங்­க­ளுக்கு முன்னர் நாட்டை விட்டு வெளி­யேறி தென் ஆபி­ரிக்­காவில் தஞ்­ச­ம­டைந்­தி­ருந்தார்.
எமர்­ஸனின் பணி நீக்­க­மா­னது அந்­நாட்டு அர­சாங்­கத்தில் இரா­ணுவம் தலை­யீடு செய்­யவும் முகா­பேயின் 37  வருட கால ஆட்சி முடி­வுக்கு கொண்டு வரப்­ப­டவும் வழி­வகை செய்­தது.
முகாபே (93  வயது)  பத­வியை இரா­ஜி­னாமா செய்­தமை தொடர்­பான செய்தி வெளி­யா­னதும் அந்­நாட்டு மக்கள் அதனை ஒரு விழா­வாகக் கொண்­டா­டினர்.
பாரா­ளு­மன்­றத்தில் முகா­பேக்கு எதி­ராக கண்­டனத் தீர்­மா­னத்தை கொண்டு வரு­வ­தற்­கான வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­ட­வி­ருந்த நிலையில் அவரால் அனுப்பி வைக்­கப்­பட்­டி­ருந்த  கடி­த­மொன்று வாசிக்­கப்­பட்­டது.
எது­வித தடை­யு­மற்ற வகையில் அமை­தி­யான அதி­கார கைமாற்றம் இடம்­பெ­று­வ­தற்கு வழி­யேற்­ப­டுத்தி தரும் வகையில் தான் பதவி வில­கு­வ­தா­கவும் தனது தீர்­மானம் தன்னால் சுய­மாக எடுக்­கப்­பட்­டுள்­ளது எனவும் முகாபே அந்தக் கடி­தத்தில் குறிப்­பிட்­டுள்ளார்.
 இந்­நி­லையில் முன்னாள் உப ஜனா­தி­பதி எமர்ஸன் (71  வயது) புதிய தேர்தல் இடம்­பெறும் வரை முகா­பேயின் பத­வியை வகிக்­க­வுள்­ள­தாக ஆளும் ஸனு-பி.எப். கட்­சியின் பேச்­சாளர் தெரி­வித்தார்.
அந்­நாட்டின் புதிய தேர்­தல்கள் எதிர்­வரும் 2018 ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதம் நடை­பெ­ற­வுள்­ளது. இந்­நி­லையில் எமர்ஸன் நாளை  வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெ­ற­வுள்ள வைப­வத்தில் ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்­க­வுள்­ள­தாக அந்­நாட்டு  அர­சாங்­கத்தால் செயற்­ப­டுத்­தப்­படும் சிம்­பாப்வே ஒலி­ப­ரப்புக் கூட்­டுத்­தா­பனம்  தெரி­விக்­கி­றது.
தனது அர­சியல் தந்­தி­ரோ­பாய நட­வ­டிக்­கைகள் தொடர்பில் 'முதலை'  என அழைக்­கப்­படும் எமர்ஸன் தென் ஆபி­ரிக்­கா­வி­லி­ருந்து தன்னால் வெளி­யி­டப்­பட்­டுள்ள அறிக் கையில்,  நாட்டை மீளக்கட்டியெழுப்ப மக்க ளை ஐக்கியப்பட அழைப்பு விடுத் துள்ளார்.
பதவி விலகும்வரை தன்னை கடவுள் மட்டுமே பதவியிலிருந்து வெளியேற்ற முடியும் என உரிமைகோரி வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி





No comments: