அவுஸ்திரேலியத்தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஆண்டுப்பொதுக்கூட்டம்
கடந்த 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை
மெல்பனில் வேர்மண் தெற்கு சமூக மண்டபத்தில் சங்கத்தின் தலைவர் திரு. லெ. முருகபூபதியின்
தலைமையில் நடைபெற்றது.
ஆண்டுப்பொதுக்கூட்டத்திற்கு முன்னர், இலங்கையிலிருந்து வருகை தந்திருந்த எழுத்தாளரும்
சமூகப்பணியாளரும் ' செங்கதிர்'
இதழின் ஆசிரியருமான செங்கதிரோன் த. கோபாலகிருஷ்ணன், " கிழக்கிலங்கையின் கலை இலக்கிய செல்நெறி" என்னும் தலைப்பில்
உரையாற்றினார்.
அவரது
உரையைத்தொடர்ந்து இடம்பெற்ற வாசிப்பு அனுபவப்பகிர்வு
நிகழ்ச்சியில், கனடாவில் வதியும் செழியன் எழுதிய, வானத்தைப்பிளந்த
கதை ( ஈழப்போராட்ட நட்குறிப்பு) நூலை திரு.
எஸ்.கிருஷ்ணமூர்த்தியும், நடேசன் எழுதிய நைல்நதிக்கரையோரம்
( பயண இலக்கியம்) நூலை திருமதி சாந்தி சிவக்குமாரும், தமிழக எழுத்தாளர் பெருமாள்
முருகன் எழுதிய, பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை ( நாவல்) நூலை டொக்டர் நடேசனும், தமிழக எழுத்தாளர் அம்பை எழுதிய காட்டில் ஒரு மான் (சிறுகதைகள்) நூலை திருமதி
விஜி இராமச்சந்திரனும் அறிமுகப்படுத்தி, தமது
வாசிப்பு அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்கள்.
இந்நிகழ்ச்சியைத்தொடர்ந்து சங்கத்தின் ஆண்டுப்பொதுக்கூட்டம்
நடைபெற்றது. 2016 இல் நடந்த ஆண்டுப்பொதுக்கூட்ட குறிப்புகளும், 2016 - 2017 காலப்பகுதிக்கான
ஆண்டறிக்கை மற்றும் நிதியறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டு
சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஆண்டுப்பொதுக்கூட்டத்திற்கு கிடைக்கப்பெற்ற நிருவாகிகளுக்கான
பரிந்துரைப்படிவங்களை (Nominations) "அக்கினிக்குஞ்சு
" இணைய இதழ் ஆசிரியரும் எழுத்தாளருமான திரு. யாழ். பாஸ்கர் சமர்ப்பித்து தெரிவுகளை
நடத்தினார்.
2017 - 2018 நிருவாகிகளாக பின்வருவோர் தெரிவாகினர்:
காப்பாளர்: 'கலை வளன்' சிசு. நாகேந்திரன்.
தலைவர்: திரு. சங்கர சுப்பிரமணியன்.
துணைத்தலைவர்கள்:
மருத்துவர் ( திருமதி) வஜ்னா ரஃபீக்.
திரு. ந. சுந்தரேசன்
செயலாளர்: டொக்டர் நடேசன்.
துணைச்செயலாளர்: கலாநிதி ஶ்ரீ கௌரி சங்கர்.
நிதிச் செயலாளர்: திரு. லெ. முருகபூபதி
துணை நிதிச்செயலாளர்: திரு. ப. தெய்வீகன்
செயற்குழு உறுப்பினர்கள்:
திரு. 'பாடும்மீன்' சு. ஶ்ரீகந்தராசா
திரு. ஸி. ஶ்ரீநந்தகுமார்
திரு. இராஜரட்ணம் சிவநாதன்
திரு. இ. திருச்செந்தூரன்
திரு. ஜெ. ஜெயபிரசாத்
No comments:
Post a Comment