சிட்னியில் திரு திருநந்தகுமார் அவர்களின் மணிவிழா

.

கம்பன் கழக த்தின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவரும் , சிறந்த பேச்சாளரும் , ஹோம்புஷ் தமிழ் கல்வி நிலையத்தின் அதிபர் , ஆசிரியர் தலைவர் என்று பன்முக பார்வை கொண்டவருமான திரு திருநந்தகுமார் அவர்கள் தன் அறுபதாவது அகவையை எட்டியிருக்கின்றார்.

தமிழோடு வாழ்ந்து   தமிழுக்காக சேவையாற்றிக் கொண்டிருக்கும் திரு திருநந்தகுமார் அவர்களை கௌரவிக்கும் முகமாக சென்ற சனிக்கிழமை இரவு செவென் கில்லில்  ஒரு மணி விழா எடுக்கப் பட்டது. திரு பாபு மயில்வானம் தலைமையில் ஒரு குழு  இந்த விழாவினை முன்னெடுத்தது . திரு திருநந்தகுமாரை நீண்டகாலமாக அறிந்தவர்கள்,  தமிழோடும் தமிழ்க் கல்வி நிலையத்தோடும் தொடர்புபட்டவர்கள் , தமிழ் அறிஞர்கள் என்று பலர் உரையாற்றினார்கள் . குறிப்பாக மூத்த கவிஞர் திரு அம்பி என அழைக்கப்படும் அம்பிகைபாகர் , இலக்கிய குறுமுனி திரு தனபாலசிங்கம் , அவுஸ்ரேலிய கம்பன் கழக நிறுவனர் திரு .ஜெயராம் ஜெகதீசன்,  அகில இலங்கை கம்பன் கழக ஆரம்ப கர்த்தாவும் செயலாளருமான திரு க.குமாரதாசன் அவர்கள், எழுத்தாளரும் பத்திரிகை ஆசிரியருமான மாத்தளை சோமு அவர்கள் , இளம் பேச்சாளர் செல்வி மாதுமை கோனேஸ்வரன் அவர்கள், எழுத்தாளர் திரு கந்தராஜா அவர்களும் இன்னும் சிலரும்  உரையாற்றினார்கள்.








No comments: