இலங்கைச் செய்திகள்


கிந்தோட்டை வன்முறை : 127 சம்பவங்கள் பதிவு,4   பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்

நீதிபதி இளஞ்செழியனின் மற்றுமொரு அதிரடி தீர்ப்பு.!

18 வயதுடைய ஆவா குழு உறுப்பினர் கைது

இந்­தி­யா­வு­ட­னான பொரு­ளா­தார, தொழில்­நுட்ப உடன்­ப­டிக்கை குறித்து விரி­வாக பேசப்­பட்­டது

மோடியை சந்தித்தார் ரணில்




கிந்தோட்டை வன்முறை : 127 சம்பவங்கள் பதிவு,4   பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்

காலி - கிந்தோட்டை பகுதியில் சிங்கள - முஸ்லிம் சமூகங்களுக்கிடையே ஏற்பட்ட முறுகல் நிலைமை வன்முறையாக மாறியதால் மொத்தமாக 127 அசம்பாவித சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. பொலிஸ் விசாரணைகள் ஊடாக இவை தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி ருவன் குணசேகர வீரகேசரி இணையத்தளத்திற்கு தெரிவித்தார். 
இதனிடையே கிந்தோட்டையில் நிலவிய பதற்றம் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஆகியன கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியின் பாதுகாப்புக்கு சிறப்பு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. 


அதன்படி பெந்தோட்டை வன்முறைகளின் போது சிங்கள, முஸ்லிம் சமூகத்தவர்களுக்கு சொந்தமான 81 வீடுகள், 18 வர்த்தக நிலையங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் 6 முச்சக்கர வண்டிகளும் ஒரு லொறியும் வேன் ஒன்றும்  8 மோட்டார் சைக்கிள்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதனைவிட நான்கு பள்ளிவாசல்களும் இதன்போது தககுதலுக்கு உள்ளாகியுள்ளதுடன் 8 திருட்டு சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
அதன்படியே மொத்தமாக கிந்தோட்டை வன்முறைகளில் 127 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டினார்.   நன்றிப் வீரகேசரி 











நீதிபதி இளஞ்செழியனின் மற்றுமொரு அதிரடி தீர்ப்பு.!

20/11/2017 யாழ். மணல்காட்டு பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியொருவரை பாலியல் வல்லுறவு செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட நான்கு பிள்ளைகளின் தந்தைக்கு 15 ஆண்டுகால கடூழிய சிறைத் தண்டனை விதித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்பளித்துள்ளார்.
Image result for இளஞ்செழியன்
கடந்த 2012 ஆம் ஆண்டு ஜீலை மாதம் மணல்காட்டு பிரதேசத்தை சேர்ந்த 16 வயதினை விட குறைந்த பெண் பிள்ளையை கற்பழித்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் நான்கு பிள்ளைகளின் தந்தையான விக்டர் அருந்தவராஜா (47) என்பவர் எதிரியாக பெயர் குறிப்பிடப்பட்டிருந்தார்.
யாழ்.மேல் நீதிமன்றில் இடம்பெற்ற குறித்த பாலியல் வல்லுறவு வழக்கில் அரச சட்டவாதியான நாகரட்ணம் நிஷாந், குறித்த எதிரிக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். அத்துடன் குறித்த நபர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சிறுமி கர்ப்;பமாகியதில் நான்கு வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.
எனவே ஒரு சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து அப் பெண்ணின் வாழ்க்கையை வீணடித்து கர்ப்பவாதியாக்கிய குறித்த எதிரிக்கு சட்டப் புத்தகத்தில் உள்ள அதியூட்ச தண்டனை வழங்க வேண்டும் என மன்றில் குறிப்பிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து குறித்த நபருக்கு 15 ஆண்டுகால கடூழிய சிறைத் தண்டனையும், 30 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் கட்டத்தவறின் 18 மாத கடூழிய சிறையும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 6 இலட்சம் ரூபா நஷ்ட ஈடும் கட்டத்தவறின் 18 மாத கடூழிய சிறைத் தண்டனையும் விதித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.   நன்றி வீரகேசரி










18 வயதுடைய ஆவா குழு உறுப்பினர் கைது

25/11/2017 யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் ஆவா குழுவுடன் தொடர்புடைய நபரொருவரை கோப்பாய் பொலிஸார் கைதுசெய்துள்னர்.
யாழ்ப்பாணம், கோப்பாய் - கொண்டாவில் பகுதியில் நேற்று மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது குறித்த நபர் கோப்பாய் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் 18 வயதுடைய இளைஞராவார்.
இந்நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ள குறித்த நபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் கோப்பாய் பொலிஸார், விசாரணைகளின் பின்னர் நீதிமனற்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.  நன்றி வீரகேசரி












இந்­தி­யா­வு­ட­னான பொரு­ளா­தார, தொழில்­நுட்ப உடன்­ப­டிக்கை குறித்து விரி­வாக பேசப்­பட்­டது
25/11/2017 இந்து சமுத்­திரம் தொடர்­பாக இலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்­குமி­ டையில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வதற்கு உத்­தே­சிக்­கப்­பட்­டுள்ள பொரு­ளா­ தார மற்றும் தொழில்நுட்ப உடன்­ப­டிக்கை தொடர்­பாக இந்­தியத் தரப்­புடன் ஆழ­மான பேச்­சு­வார்த்­ தையில் ஈடு­பட்­ட­தா­கவும் அதற்­கான செயற்­பா­டு­களை துரி­தப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­தா­கவும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாத­மா­கும்­போது இரண்டு நாடு­களும் இணக்­கப்­பாட்­டிற்கு வந்த வேலைத்­திட்­டங்­களின் முன்­னேற்­றங்கள் தொடர்­பா­கவும் இதன்­போது விரி­வாக கலந்­து­ரை­யா­டப்­பட்­ட­தா­கவும் அவை மீளாய்வு செய்­யப்­பட்­ட­தா­கவும் பிர­தமர் குறிப்­பிட்­டுள்ளார். 
உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யம்­ ஒன்றை மேற்­கொண்டு கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இந்­தி­யா­வுக்கு சென்­றி­ருந்த பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க நேற்று நாடு திரும்­பு­வ­தற்கு முன்­பாக புது­டில்­லியில் ஊட­க­வி­ய­லாளர்­க­ளுக்கு கருத்து வெளியி­டு­கை­யி­லேயே இந்த விட­யங்­களை குறிப்­பிட்­டி­ருக்­கிறார். 
 பிர­தமர்  அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில், 
இந்து சமுத்­திரம் தொடர்­பாக இலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்­கு­மி­டையில் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்ள உத்­தேச புதிய பொரு­ளா­தார மற்றும் தொழில்­நுட்ப உடன்­ப­டிக்கை குறித்து இந்­தியத் தலை­வர்­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்­தினேன். 
இரண்டு நாடு­க­ளுக்­கு­மி­டையில் பொரு­ளா­தார தொடர்­பு­களை அடிப்­படை விட­யங்­களை முன்­நி­றுத்தி இந்த பொரு­ளா­தார மற்றும் தொழில்நுட்ப உடன்­ப­டிக்­கையை நிறு­வு­வ­தற்கு தீர்­மா­னித்­துள்ளோம். 
இந்­திய விஜ­யத்­தின்­போது இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி இந்­திய ஜனா­தி­பதி வெளிவி­வ­கார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் இந்­திய காங்­கிரஸ் கட்­சியின் தலை வர் சோனியா காந்தி ஆகி­யோரை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தற்கு எனக்கு சந்­தர்ப்பம் கிடைத்­தது. இந்த பேச்­சு­வார்த்­தை­களின் போது­ இ­லங்­கைக்கும் இந்­தி­யா­வுக்­கு­மி­டையில் நிலவும் தொடர்­பு­களை மேலும் பலப்­ப­டுத்­து­வது குறித்து ஆராய்ந்தோம். 
இந்­தி­யாவும் இலங்­கையும் இணைந்து முன்­னெ­டுக் கும் வேலைத்­திட்­டங்கள் தொடர்பில் கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பட்ட இணக்­க­ப்பா­டு­களின் அடிப்­ப­டை­யி­லான திட்­டங் கள் குறித்து இந்­தியப் பிர­த­ம­ருடன் கலந்­தா­லோ­சித்தேன். 
அவற்றின் முன்­னேற்றம் குறித்து பேசப்­பட்­டது. சில திட்­டங்­களை முன்­னெ­டுப்­பதில் தாமதம் ஏற்­பட்­டி­ருக்­கி­றது. அவை தொடர்­பிலும் பேசப்­பட்­டது. இங்கு இரண்டு செயற்றிட்டங்களை இந்தியாவும் ஜப்பானும் இணைந்து இலங்கை யில் முன்னெடுக்கவுள்ளன. 
இது ஒரு விசேட அம்சமாகும். இன்று இந்தியாவுக்கும் ஜப்பானுக் குமிடையில் காணப்படுகின்ற நட்பு றவானது ஆசிய ஆபிரிக்க அபிவி ருத்தித் தளத்தில் எவ்வாறான பங் களிப்பை வகிக்கும் என்பது குறித் தும் கலந்துரையாடினோம் என்றார்.   நன்றி வீரகேசரி












மோடியை சந்தித்தார் ரணில்

23/11/2017 இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார்.

இச் சந்திப்பு இன்று டில்லியில் இடம்பெற்றுள்ளது.

நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இந்தியாவுக்கு சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பழைமை வாய்ந்த கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் வழிபாடுகளை மேற்கொண்டார்.

இதையடுத்து நேற்று புதன்கிழமை டில்லியை சென்றடைந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார்.   நன்றி வீரகேசரி




No comments: