மேயாத மான்
மெர்சலா வாரங்க, கூடவே நாங்களும் துள்ளி
வரோம் என மேயாத மான் படத்தின் புரமோஷனை பார்த்திருப்பீர்கள். பெரிய
நடிகர்களின் படங்கள் வந்தால் சிறு படங்கள் சற்று வழிவிட்டு செல்லும்.
இந்த
தீபாவளி ரேசில் மெர்சல் வந்தாலும் கூடவே தில்லாக இறங்கியிருக்கிறது மேயாத
மான். சரி இம்மான் போகும் பாதை என்ன, கதை என்ன என பார்க்கலாம்.
கதைக்களம்
ஹீரோ வைபவ் ஐ இதயம் முரளி, இதயம் முரளி என
படத்தில் அழைக்க இவருக்கு ஒரு பெரும் பின்னணி இருக்கிறது. அப்படி என்ன
இவருக்கு பின்னணியாக இருக்கும் என்பதை நீங்கள் சற்று யூகித்திருக்கலாம்.
இசைக்கச்சேரி குழுவை நடத்தி வரும் இவருக்கு ஒரே ஒரு தங்கை மற்றும் வினோத், கிஷோர் நண்பர்களும், இசைக்குழுவும் தான் குடும்பம்.
ஹீரோயினாக
முகம் காட்டியுள்ள பிரியா பவானி சங்கர் ஒரு பெரிய இடத்து பெண். அளவான
குடும்பம், அழகான வாழ்க்கை என இவரின் குடும்பம் செல்கிறது. ஹீரோவுடன்
கம்ப்பேர் பண்ணும்போது இவரின் லெவல் வேறு.
மொட்டை மாடியில் நின்று
நான் சாகப்போகிறேன் என அடிக்கடி மிரட்டும் வைபவை ஐ, அப்போதெல்லும் புராணம்
பாடுகிறார் என நினைக்கிறார்கள். விளையாட்டாக நடக்கும் நிகழ்வு ஒரு நாள்
நிஜமாக அனைவரும் பதறுகிறார்கள்.
மதுமிதா அப்போது இவ்விசயத்தில் நுழைய
வைக்கப்படுகிறார். வைபவ் தற்கொலையில் இருந்து தப்பித்தாரா அதற்கான காரணம்
என்ன என்பது தான் கதை.
படத்தை பற்றிய அலசல்
சென்னை 28 2,
க்கு பிறகு நடிகர் வைபவ்க்கு பெரிய ரோலாக மேயாத மான் வந்துள்ளது. படம்
முழுக்க இவரின் பங்கு நிறைந்துள்ளது. கதைக்கேற்ற கேரக்டர். பேச்சில்
லோக்கல் வாடை வீச, பாட்டு, ஆடல் என காட்சிகளை கலர்ஃபுல் ஆக்குகிறார். முரளி
முரளி என இவர் செய்யும் செய்கைகள் படத்திற்கு உச்சம்.
டிவி, சீரியல்
என கலக்கி வந்த பிரியாவுக்கு திறமைகாட்ட சரியான இடமாக இந்த மேயாத மான்
கிடைத்துள்ளது. இயல்பான நடிப்பால் இளைஞர்களின் இதயத்தில் நிற்பார். கிடைத்த
வாப்பை பயன்படுத்தியிருக்கிறார். ரொமான்ஸ் சீனில் மணிரத்னம் படத்தை ஹைலைட் செய்து கவனம் ஈர்க்கிறார்.
இரண்டாம்
ஹீரோயினாக இந்துஜாவுக்கு ஒரு பக்கம் காதல் துளிர்விடுகிறது. ஆனால் இந்த
காதல் வேறு பக்கம் வீச கதைக்கு ட்விஸ்ட். ஒரு பாட்டுக்கு இறங்கி செம
குத்தாட்டம் போட்டிருக்கிறார். இப்படத்தில் இவரை மது மது என புகழ்
பாடினாலும் குடி மதுவையும் கொண்டாடுகிறார்கள்.
இயல்பான சில காட்சிகளை
கூட காமெடி காட்சிகள் இருந்த நிறைவை கொடுத்திருக்கிறது. துள்ளும்
மானுக்கேற்ற குத்தாட்ட பாடல்கள். மான் ஃபீலிங்கில் இருந்தால் அதற்காக
சிச்சுயேசன் பாடலும் வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.
கார்த்திக் சுப்புராஜின் தயாரிப்பில் ரத்ன குமார் படத்தை முழுமையாக கொடுத்திருக்கிறார்.
கிளாப்ஸ்
நகைச்சுவை
நடிகர்கள் இல்லாத குறையை வைபவ் மற்றும் நண்பர்கள் நிவர்த்தி
செய்திருக்கிறார்கள். வைபவ் இப்படத்தில் மீண்டும் இறங்கி விளையாண்டுள்ளார்.
இயக்குனரின் கதை எளிமையாக இருந்தாலும் நிறைவான திருப்தி கொடுத்திருக்கிறார் என சொல்லலாம்.
பிரியா பவானிக்கு இன்னும் பல படங்கள் வரும் வாய்ப்பு இருக்கும் என இப்படம் சொல்லும்.
பாடல்கள் கொண்டாட்டம் போடவைத்தாலும், வரிகள் சிலருக்கு நினைவில் நிற்கலாம்.
பல்பஸ்
இரண்டாம்
கட்டம் தான் படம் போல தோன்றுகிறது. முதல் கட்டத்தில் கதை நீளமாக செல்வதால்
மிகவும் உன்னித்து பார்த்தாலும் மான் வேறுபாதையில் போகிறதோ என தோன்றும்.
இதை குறைத்து நீளத்தை சுருக்கினால் படம் இன்னும் கிரிஷ்ப்பாக அமைந்திருக்கும்.
மொத்தத்தில்
மேயாத மான் இது காட்டுமான் அல்ல. கலைமான். தன்னை தேடி வந்தவர்களுக்கு
விருந்து வைக்கும். மான் போகும் பாதை மனதிற்கு மகிழ்ச்சி. அனைவரும்
பார்க்கலாம்.
No comments:
Post a Comment