.
இவ்வாரம்முடிவடைந்த பிரித்தானிய பாராளுமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 650 ஆசனங்களைக் கொண்ட பிரித்தானிய பாராளுமன்றத்தில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி 319 இடங்களிலும் தொழிலாளர் கட்சி 261 இடங்களிலும் வெற்றியீட்டியுள்ளது. இன்னும் ஒரு இடத்தின் முடிவு இதுவரை வெளியாகவில்லை.
பிரித்தானியாவில் ஆட்சி அமைக்கும் கட்சி குறைந்தபட்சம் 326 தொகுதிகளில் வெற்றி பெற்றாக வேண்டிய நிலையில் கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சி அமைப்பதற்கான பெரும்பானமையினை பெறவில்லை. என்பதனால் தொங்கு பாராளுமன்றம் ஏற்படுவது உறுதியாகியுள்ளது.
ஸ்கொட்லாந்து தேசியவாத கட்சி 35, ஜனநாயக ஒன்றியக் கட்சி 10 இடங்களையும் , ஜனநாயக ஒருமைப்பாட்டு கட்சி 23 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. புpரித்தானிய அரசியலமைப்பு சட்டத்தின்படி பாராளுமன்ற தேர்தல்களில் அரசு அமைக்க தேவையான பெரும்பான்மை கிடைக்காதபட்சத்தில் ராணி எலிசபத்திடம் முன் அனுமதி பெற்று கூட்டணி ஆட்சி அமைக்கலாம்.
அதன் அடிப்படையில், பிரதமர் தெரசா மே இன்று பகல் சுமார் 12.30மணியளவில் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு சென்று ராணி எலிசபத்தை சந்தித்து ஜனநாயக ஒன்றியக் கட்சியை சேர்ந்த 10 நாடாளுமன்ற உறுப்பி;னர்கள் தங்களுக்கு ஆதரவு அளித்து கடிதங்களை ராணியிடம் கையளித்துள்ள நிலையில் புதிய அரசை அமைக்க இங்கிலாந்து ராணி எலிசபத் அனுமதி அளித்துள்ளார்.
No comments:
Post a Comment