இங்கிலாந்து தேர்தல்: இந்திய வம்சாவளியை சேர்ந்த 12 பேர் எம்.பி.க்களாக தேர்வு.

.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 12 பேர், இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
ஒரே நேரத்தில், இந்திய வம்சாவளியினர் 12 பேர் எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். இவர்களில் ஒருவர் சீக்கிய பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரீத்தி பட்டேல், அலோக் சர்மா, சுயல்லா பெர்னான்டஸ், ரிஷிசுனக், சைலேஷ்வாரா ஆகிய 5 பேர் கன்சர்வேடிக் கட்சி சார்பிலும், கெய்த்வாஸ், விரேந்திர சர்மா, லிசா நான்டி, சீமா மலகோத்ரா வலரிவாஸ், தன்மன்ஜித்சிங், பிரீத் ககூர்சில் ஆகிய 7 பேர் தொழிலாளர் கட்சி சார்பிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
சீக்கிய பெண்ணான பிரீத் ககூர்சில் எட்ஜ்பஸ்டன் தொகுதியில் போட்டியிட்டு 6 ஆயிரத்து 917 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இங்கிலாந்து நாடாளுமன்றத் தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மொத்தம் 27 பேர் போட்டியிட்டனர். இதில் 12 பேர் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த நாடாளுமன்றத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 10 பேர் எம்.பி.க்களாக இருந்தனர்.

No comments: