தமிழ் சினிமா

துருவங்கள் பதினாறு


Dhuruvangal Pathinaaru
தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் மாற்று சினிமா வரும். ரசிகர்கள் ஒரே மாதிரியான மசாலா படங்களை பார்த்து எப்போது வித்தியாசமான படங்களை கோலிவுட்டில் கொடுப்பார்கள் என காத்திருக்க, அவர்களுக்காகவே வந்துள்ளது இந்த துருவங்கள் பதினாறு.

கதைக்களம்

படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு கொலை, ஒரு விபத்து நடக்கின்றது, இதை கண்டுப்பிடிக்க தீவிர முயற்சியில் இறங்குகிறார் ரகுமான்.
அதை தொடர்ந்து இந்த கொலைகளை யார் செய்தது, அந்த விபத்து எப்படி நடந்தது, இந்த கொலைக்கும், அந்த விபத்திற்கும் என்ன சம்மந்தம் என அடுத்தடுத்து பல டுவிஸ்டுகளுடன் படம் நகர்கின்றது.
படத்தின் கதை இனி சொன்னால் சுவாரசியம் குறைந்துவிடும் என்பதற்காக இதோடு நிறுத்தியுள்ளோம்.

படத்தை பற்றிய அலசல்

கிரைம் த்ரில்லர் வகை படங்கள் தமிழ் சினிமாவில் ஏன், இந்திய சினிமாவிலேயே வருவது அரிது, பெரிதும் ஹாலிவுட், கொரீயன் படங்களில் தான் இதுப்போன்ற புலானய்வு கிரைம் படங்கள் வரும். கொரீயன் பட பாணியில் எந்த ஒரு படத்தின் தழுவலும் இல்லாமல் இருக்கின்றது இந்த துருவங்கள் பதினாறு.
மேலும், படத்தில் ரகுமானை தவிர வேறு எந்த முகங்களும் நமக்கு பரிச்சயம் இல்லை, ஆனால், கதையே ரகுமானின் பார்வையில் தான் சொல்லப்படுகின்றது.
இந்த மாதிரியான கிரைம் த்ரில்லர் படங்களில் நாம் யாரை சந்தேகப்படுகின்றோமோ, அவர்கள் கொலையாளிகளாக இருக்க மாட்டார்கள், அதே கான்செப்ட் தான் என்றாலும், 21 வயதான கார்த்திக் நரேன் அதை திறம்பட கொண்டு சென்றுள்ளார்.
இதில் குறிப்பாக ரகுமான் முதலில் போலிஸ் ஸ்டேஷனில் நுழைந்து அவர் சீட்டில் உட்காரும் வரை காட்டிய காட்சிகள், ஏதோ 10, 15 படம் எடுத்த இயக்குனரின் அனுபவம், படத்தில் விபத்தும், கொலையும் திரும்ப, திரும்ப வருகின்றது.
அப்படி வருவது எந்த ஒரு இடத்திலும் அலுப்பை ஏற்படுத்தாமல், சுவாரசியமாக கொண்டு சென்றுள்ளார்கள், ரகுமானுடன் உதவி போலிஸாக வரும் கௌதம் கவனிக்க வைக்கின்றார், ரகுமான் நினைப்பதற்கு முன்பே அவர் கூறுவது, ரகுமானை இம்ப்ரஸ் செய்ய முயற்சி செய்வது என நன்றாக நடித்துள்ளார்.
ஆனால், படத்தின் ஆரம்பத்தில் ஒரு கொலை நடக்கும் சம்பவத்தை காட்டுகிறார்கள், அது யாருடைய யூகம் இல்லை ஆடியன்ஸை குழப்புவதற்காக காட்டுகிறார்களா? என்பதே மட்டுமே குழப்பம்.

க்ளாப்ஸ்

படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் யதார்த்தமாக நடித்துள்ளனர், அதிலும் ரகுமான், ராம் படத்தில் பார்த்ததை விட, இதில் போலிஸாக ஒரு படி மேலே சென்று மிரட்டியுள்ளார், எந்த ஒரு விஷயத்தையும் டேக் இட் டீசி என இவர் டீல் செய்வது ரசிக்க வைக்கின்றது.
படத்தின் மேக்கிங், பிஜாய்யின் பின்னணி இசை அபாரம், தேவையில்லாத பயமுறுத்தும் சத்தங்கள் இல்லாமல் கதைக்கு தேவையான இசையை கொடுத்துள்ளார், அதை விட சுஜித்தின் ஒளிப்பதிவு அந்த இருளிலும் தெளிவாக படம்பிடித்து காட்டுகின்றது. அதிலும் ஒரு காட்சியில் 360 டிகிரியில் ரகுமானை சுற்றி வருகின்றது கேமரா, ஒரு அனுபவமான இயக்குனரால் தான் இப்படியெல்லாம் காட்சிகளை எடுக்க முடியும்.
யூகிக்க முடியாத கிளைமேக்ஸ்.

பல்ப்ஸ்

என்ன தான் நடிகர்கள் நன்றாக நடித்திருந்தாலும், ரகுமானை தவிர படத்தில் நமக்கு யாரையுமே தெரியாதது படம் பார்ப்பவர்களுக்கு கொஞ்சம் அந்நியமாகவே உள்ளது.

மொத்தத்தில் படம் தொடங்கியதிலிருந்து முடியும் வரை எந்த துருவத்திலும் ஆடியன்ஸை திரும்ப விடாமல் சீட்டின் நுனியில் கட்டிப்போடுகின்றது இந்த துருவங்கள் பதினாறு.
Cast:
நன்றி  cineulagam

No comments: