.
ஜனாதிபதி, பிரதமர் படங்களுடன் மட்டக்களப்பில் பேண்தகு யுகம்
இலங்கையில் பிரபல கார் தொழிற்சாலை : அடிக்கல் நாட்டப்பட்டது
அம்பாந்தோட்டை பதற்றநிலை ; 23 பேருக்கு விளக்கமறியல்
இலங்கைச் செய்திகள் முல்லைத்தீவில் சிறுவர் தொழிலாளர்கள் அதிகரிப்பு

03/01/2017 ஜனாதிபதி மற்றும் பிரதமர் புகைப்படங்களுடன் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ள பேண்தகு யுகம் தொடர்பிலான சுவரொட்டிகளில் பொது மக்கள் ஆர்வம் செலுத்திவருகின்றனர்.
இந்த சுவரொட்டிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல இடங்களில் காணக்கூடியதாக இருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த சுவரொட்டிகளில், இதோ இன்னுமொரு தேர்தல் முடிவு, தூரத்தில் இல்லாமல் நாம் உணரக்கூடிய வளமான யுகத்தை உருவாக்கும் திட்டம் ஜனவரி 2ல் வெளியிடப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்றி வீரகேசரி
03/-1/2017 குளியாப்பிட்டியவில் அமையப்பெறவுள்ள வொக்ஸ்வாகன் மோட்டார் கார் தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இன்று நடைபெற்றது.
குளியாப்பிட்டிய லபுயாய பிரதேசத்தில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் குறித்த மோட்டார் வாகன தொழிற்சாலை அமையப்பெறவுள்ளது.
அடிக்கல் நாட்டு நிகழ்வில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நன்றி வீரகேசரி
அம்பாந்தோட்டை பதற்றநிலை ; 23 பேருக்கு விளக்கமறியல்
08/01/2017 அம்பாந்தோட்டை கைத்தொழில் வலைய அடிக்கல் நாட்டு விழாவின் போது பதற்ற நிலையை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டவர்களில் 23 பேரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதில் கைதுசெய்யப்பட்ட 21 பேரை எதிர்வரும் 9 ஆம் திகதிவரையும், ஏனைய இருவரையும் எதிர்வரும் 11 ஆம் திகதிவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தமை, அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை குறித்த குற்றங்களுக்காக நேற்று 52 பேர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
இலங்கைச் செய்திகள் முல்லைத்தீவில் சிறுவர் தொழிலாளர்கள் அதிகரிப்பு
05/01/2017 முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட நீராவிப்பிட்டி பகுதியில் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்கிவரும் வாரச்சந்தையில் பாடசாலைக்கு செல்லும் வயதிலிருக்கும் சிறுவர்கள் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாகவும் உரிய தரப்பினர் இதனை கண்டும் காணாமல் இருப்பதாகவும் சமூக ஆர்வலர்களால் கவலை தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட நீராவிப்பிட்டி பகுதியில் பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்கிவரும் வாரச்சந்தையில் பல சிறுவர்கள் வியாபாரிகளால் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளதை அவதானிக்கமுடிகிறது. இவ்வாறு சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது சட்டவிரோதமானது என்பதை அறிந்தும் சிலர் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் அதேவைளை, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கூட இதனை கண்டும்காணாமல் இருப்பதை அவதானிக்க முடிகிறது.
ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து தனியார் கல்வி நிலையங்களும் மூடப்பட்டு மாணவர்கள் அனைவரும் அறநெறி பாடசாலைகளுக்கு கட்டாயம் செல்லவேண்டும் என்ற கட்டுப்பாடும் சட்டமும் நடைமுறையில் இருக்கின்றபோதும், அவ்வாறு அறநெறி பாடசாலைகளுக்கு செல்லாது குறித்த மாணவர்களை வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும் வியாபாரிகள் மீது குறித்த அதிகாரிகள் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடப்பட்டுள்ளதுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment