உலகச் செய்திகள்


உலகில் முதல்முறையாக இரு தாய்மார் ஒரு தந்தை இணைந்து பெற்றெடுத்த குழந்தை

சீனாவில் சூறாவளி ; ஐவர் பலி ; 100 இற்கு மேற்பட்டோர் காயம் 

அமெரிக்காவில் இடம்பெற்ற பயங்கர ரயில் விபத்தால் பரபரப்பு



உலகில் முதல்முறையாக இரு தாய்மார் ஒரு தந்தை இணைந்து பெற்றெடுத்த குழந்தை

28/09/2016 பொதுவாக ஒரு குழந்தைக்கு பெற்றோராக தாய் மற்றும் தந்தை என 2 பேர் இருப்பார்கள். ஆனால் வழக்கத்திற்கு மாறாக 2 தாய்கள் ஒரு தந்தை என 3 பேர் இணைந்து ஒரு குழந்தையை உருவாக்கியுள்ளனர்.
ஜோர்டானை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு மரபணு குறைபாடு இருந்ததுள்ளது. அவருக்கு நல்ல உடல் ஆரோக்கியத்துடன் கூடிய பெண்ணிடம் இருந்த மைட்டோ காண்ட்ரியா தானமாக பெற்று ஜோர்டான் பெண்ணின் கருமுட்டையுடன் சேர்க்கப்பட்டது.


பின்னர் ஜோர்டான் பெண்ணின் கணவரின் விந்தணு கருமுட்டையுடன் சேர்க்கப்பட்டு கருத்தரிக்கப்பட்டது. அதன் மூலம் ஒரு ஆண் குழந்தை பிறந்ததுள்ளது. தற்போது குறித்த குழந்தை 5 மாத குழந்தையாக நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளது.
இந்த முயற்சியில் அமெரிக்க வைத்திய குழு ஈடுபட்டது. அவர்கள் சம்பந்தப்பட்டவர்களை மெக்சிகோவுக்கு வரவழைத்து உலகில் முதல்முறையாக 3 பேர் இணைந்து பெற்றெடுத்த குழந்தையை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி 
















சீனாவில் சூறாவளி ; ஐவர் பலி ; 100 இற்கு மேற்பட்டோர் காயம் 

28/09/2016 சீனாவின் புயூஜியான் மாகாணத்தை தாக்கிய சூறாவளியால் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100 இற்கு மேற்பட்டோர் கயாமடைந்துள்ளதாக சீன செய்திகள் தெரிவிக்கின்றன.
 மணிக்கு சுமார் 120 கிலோமீட்டர் வேகத்தில் சீனாவை நெருங்கிய ’மெகி’ சூறாவளி  சீனாவின் வடமாகாணமான பியூஜியானை தாக்கியது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இம்மாகாணத்தின் கரையோரப் பகுதிகளில் வசித்துவந்த ஒருலட்சத்துக்கும் அதிகமானோர்  பாதுகாப்பாக அனுப்பட்டுள்ளதோடு,  குறித்த பகுதியின் விமான சேவைகளும் நிறுத்திவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பலத்த மழையுடன் இன்று அதிகாலை கரையை கடந்த சூறாவளியின் காரணமாக 5 பேர் பலியானதுடன், 100 இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
நன்றி வீரகேசரி 
















அமெரிக்காவில் இடம்பெற்ற பயங்கர ரயில் விபத்தால் பரபரப்பு

29/09/2016 அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாகாணத்தில் உள்ள ஹோபோகன் ரயில் நிலையத்தில் பயணிகள் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளதோடு 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.   
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள ஹோபோகன் ரயில் நிலையத்தில் அமெரிக்க நாட்டின் நேரப்படி காலை 8.40 மணியளவில் வேகமாக வந்த பயணிகள் ரயில்  கட்டுப்பாட்டை இழந்து ரயில் நிலையம் மீது பயங்கரமாக மோதியுள்ளது.    
ரயில் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டு, ரயில் நிலையத்தின் வரவேற்பு அறைக்குள் புகுந்ததாக கூறப்படுகிறது.
இதில் ரயில் நிலையம் அதிகமாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரயில் விபத்தில் 4 பேர் பலியாகி உள்ளதாகவும், பலர் சிக்கி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
தகவல் அறிந்து வந்த மீட்பு குழுவினர் ரயிலில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 
படுகாயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 விபத்து குறித்து அம்மாகாண போக்குவரத்து பாதுகாப்பு துறை விசாரணையை ஆரம்பித்துள்ளது.
நன்றி வீரகேசரி 




















No comments: