உமாவின் Patchwork அமைப்புக்காக ரசம் லயம் மூலம் புதுமை படைத்துவிட்டார்கள் - திருமதி பரா சுந்தா


.


  உமாவின் Patchwork அமைப்புக்காக                                        சேரனும்ஜனகனும்  தங்கள்  குழுவினரோடு  இணைந்து                                ரசம் லயம் மூலம்  புதுமை   படைத்துவிட்டார்கள்   தாய் மண்ணிலே நிகழ்ந்த  கோரப்போரிலே அங்கவீனப்பட் டவர்களுக்காக பலவழிகளிலும்  உதவும் நோக்குடன்  அவுஸ்திரேலியாவிலிருந்து PATCHWORK  என்னும் அமைப்பை நடத்திவரும் உமாவின் அளப்பரிய சேவை  பற்றிக் கேள்விப்படாதவர்கள் இருக்க முடியாது

 நீண்ட காலமாக  நடனக் கலைஞர் சேரன் சிறீபாலன் தனது நடனநிகழ்ச்சிகள் மூலம்  இந்த அமைப்புக்கு அர்ப்பணிப்போடு பொருளுதவி  செய்து வருவதையும் நாம் அறிவோம் 


சென்ற ஞாயிறு  செப்டெம்பர் 25'ம் நாள் 2016  அன்று பரமற்றா  றிவர்     சைட்  அரங்கத்தில் சேரனோடு    லய வித்துவான்ஜனகன் சுதந்திரராஜ்  அவர்களும்  இணைந்து   பல இளைய இசைக்கலைஞர் நடனமணிகளுடன்   புதுமையான நிகழ்வொன்றைப்படைத்து உமாவின் PATCHWORK  அமைப்புக்கு    நிதி சேகரித்து  உதவிய  செயல்  பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது 

புதுமையான நிகழ்வு என்று ஏன் கூறவேண்டும் ?

இங்கே பழமையும் புதுமையும் கைகோர்ப்பதை பார்த்தோம் 


RASA LAYAM--

Neoclassical Bharathanatyam -Where Bharathanatyam Meets Contemporary Movement Theatre

Choreographed By Seran Sribalan And Composed By Janakan Suthanthiraraj 

பாரம்பரிய தாள வாத்தியங்களான மிருதங்கம் கடம் தபேலா போன்றவற்றோடு நவீன டிரம்ஸ் கீபோர்டு Rhythm  Pads ஐயும்  இணைத்து புதுமை படைத்தார்கள் -

வாய்ப்பாட்டுடன்  புல்லாங்குழலிசையும் இணைந்துகொண்டது காதுக்கு இனிமையாக இருந்தது 


ஜனகனின் துரித  கால  ஜதிகளுக்கு   இயைய சேரனின் நெறியாழ்கையிலே   ஸ்னேகா ராவ் ,அனுரதி கிருஷ்ணமூர்த்தி கேர்ஷேகா சிவகுமாரன் , பானு போல் ரெமிசென்   ஆகிய பிரபல நர்த்தகிகள்  சேரனோடு இணைந்து  அலாரிப்பு     கவுத்துவம் நவரசம் தாண்டவம்
  பதம் தில்லானா போன்ற பாரம்பரிய நடனங்களை நவீனம் கலந்தும் கலவாமலும் மற்றும்  ''சுவர்களுக்குள்ளே''  என்னும் நவீன நடனத்தை  பரீட் சார்த்த   முறையிலே ஆடிப்புதுமை படைத்தார்கள் 

பல்லவராஜன் நாகேந்திரன் ,கிருஷான் சேகரன், ஐங்கரன் காந்தராஜா , சாரு   ராமச்சந்திர குரு , பிரணவன்   பிரவீணன் ஜெயராசா சகோதரர் ஆகியோர் , ஜனகன் சுதந்திரராஜின்  வழிகாட்டலில்  தாளவாத்தியத்திலே இணைந்து தமது திறமையைக் காட்டினார்கள் 

 இவர்களுக்கு அனுசரணையாக     புல்லாங்குழல் இசைத்த வெங்கடேஷ் கீபோர்டு வாசித்த கண அருணேஸ்வரன் 

,இனிமையாகப் பாடிய காவ்யா ஜெய்ஷ்ங்கர் கோபிராம் சிறீரங்கநாதய்யர்  ஆகியோர் பாராட்டுக்குரியவர்கள் 

இவ்விளம் கலைஞர்களின்  இசையறிவு நடனத் திறன் பார்வையாளரை வியக்க வைத்தது 


இசை ஆர்வம் மிக்க  இன்றைய இளைய சமுதாயம்   பாரம்பரியத்தின்  ஆணிவேரை 

  மறவாது புதியமாற்றங்களையும்ஏற்றுக்கொண்டு வாழ அறிந்திருக்கிறார்கள் 

இந்த நிகழ்வு மீண்டும் மேடையேறும்போது மேலும் மெருகு பெறும் என்பது நிச்சயம் 
நிகழ்ச்சியின் நிறைவில் ,,உமா   மேடையிலே தோன்றி  தன்னுடைய முயற்சிக்கு   ஆதரவு 

அளித்த கலைஞர்கள் மற்றும்   பொருளுதவியளித்தோருக்கு    நன்றி  கூறும்போது வன்னியிலிருந்து நேரடியாகவே மாற்றுத்திறனாளி ஒருவரின்

 பேச்சையும் ஒலிபரப்பி PATCHWORK   அமைப்பு வழங்கும்   உதவிகளைப் பற்றிக் கூறியது  நல்லதொரு செயல் 

உமா தன்னுடைய உரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தி அவர்கள் தமது   வாழ்வில்  சுயமாக இயங்கவேண்டும் என்பதே தனது ஒரே நோக்கம் என்று வலியுறுத்தி  '' நானும் ஒரு மாற்றுத்திறனாளிதான்'' என்று கூறியது  கேட்போர்    மனதை நெகிழவைத்துவிட்டது


உமாவின் அர்ப்பணிப்பு -  தன்னலமற்ற தொண்டுக்கு தலை வணங்குகிறோம்No comments: