அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் இலக்கியச்சந்திப்பு

.


அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தினால் இன்று 2 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை  -  மெல்பனில்,  சங்கத்தின் உறுப்பினர் எழுத்தாளர் திரு. எஸ்.கிருஷ்ணமூர்த்தியின் இல்லத்தில் ஒழுங்குசெய்யப்பட்ட  இலக்கியச்சந்திப்பு  அனுபவப்பகிர்வு

                                                        நாடக, திரைப்பட, தொலைக்காட்சி கலைஞரும் கல்கி, சாண்டில்யன் முதலான வரலாற்று இலக்கிய ஆசிரியர்களின் படைப்புகளை ஒலிப்புத்தகமாகத்தயாரித்தவரும், மோகமுள் திரைப்படத்தில் நடித்தவருமான தமிழகத்திலிருந்து வருகைதந்திருந்த  கலைஞர்  திரு. பம்பாய் கண்ணன், இங்கிலாந்திலிருந்து வருகை தந்த மூத்த எழுத்தாளர் திரு.  ரத்னசபாபதி அய்யர், குவின்ஸிலாந்திலிருந்து வருகை தந்திருந்த சங்கத்தின் உறுப்பினரும் பிறிஸ்பேர்ண் தாய்த்தமிழ்ப்பள்ளி, மற்றும் தமிழ் விக்கிபீடியாவில் இயங்குபவருமான திரு. முகுந்தராஜ் ஆகியோர் தமது கலை, இலக்கிய, கல்வித்துறை சார்ந்த அனுபவங்களை  இச்சந்திப்பில்  பகிர்ந்துகொண்டனர்.





கலந்துரையாடல், தேநீர் விருந்தையடுத்து. கனடா மூர்த்தி இயக்கித்தயாரித்த உலகப்பொது மனிதன் ஜெயகாந்தன் ஆவணப்படக்காட்சி இடம்பெற்றது.  பேராசிரியர் கா. சிவத்தம்பியின் உரையுடன் பதிவுசெய்யப்பட்ட  ஆவணப்படத்தில் ஜெயகாந்தனின் வாழ்வும் கலை, இலக்கிய, அரசியல், கருத்தியலும்  சித்திரிக்கப்பட்டிருந்தன.


No comments: