நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசரின் "Melodic Rhythms" 04 09. 2016

.
நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசரின் நடன நிகழ்வு செப்டெம்பர் மாதம்
4ம் திகதி ஞாயிற்றுக் கிழமை இடம் பெறுகின்றது . அனைவரையும் அன்போடு அழைக்கின்றார் நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர் .

1 comment:

Unknown said...

பாரம்பரிய கலைகள் அழிந்துவரும் காலத்தில் அந்நிய மண்ணில் பாரம்பரியக்கலையை அதன் மணம் மாறாமல் அப்படியே கொடுத்தமைக்கு முதற்கண் நாட்டிய கலாநிதி திருமதி கார்த்திகா கணேசர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

தற்போதைய குழந்தைகளுக்கு தங்கள் தாய்மொழியை, கலாட்ச்சாரத்தை அறிந்து கொள்ள வாய்ப்பே இருப்பது இல்லை ஏன் எனில் நாம் அந்நிய மண்ணில் நம் வாழ்வை தேடி வந்து வாழ்த்துவருவதால். ஆங்கில பாடம், கலாட்ச்சாரம் எல்லாம் சுற்றுசூழலின் காரணமாக அதிகம் பழக்கத்தில் இருப்பதாலும் கற்றுக்கொடுக்கும் அளவுக்கு வாய்ப்புகள் இல்லாமல் மக்கள் கால ஓட்டத்தில் ஓடிக்கொண்டு இருப்பதாலும் அழிந்து வரும் பாரம்பரிய கலைக்கு உயிர் கொடுக்கும் விதமாக கார்த்திகா அவர்களின் நாட்டியப்பள்ளி செயல்பட்டு வருவது உண்மையில் சந்தோசகரமான விஷயம்.

நுனி நாக்கு ஆங்கிலமும் முழு நேர பாப் பாடல்களும் ஜாஸ் மியூசிக்கும் பாவிக்கும் இந்தக்கால இளஞிகளின் காலில் சலங்கைகளை கட்டி பாரம்பரிய நாட்டியக்கலைக்கு அபிநயம் பிடிக்க வைத்தது இந்த அபிநயசரஸ்வதியாலேயே முடிந்தது. ஐந்து வயது சிறுமி கூட அழகாக ஜதிக்கு ஏற்ப காலை தட்டி ஆடியதை காண கண் கோடி வேண்டும். குச்சிப்பிடி, பரதநாட்டியம், பாலிவுட் நடனங்கள் என விளம்பரத்தில் வந்த போது, சற்று சங்கடமாக தான் இருந்தது எங்கே திரும்பவும் மேற்கத்திய அங்க அசைவுகளோடு சிறுமிகள் ஆடுவதை காண நேரிடுமோ என, ஆனால் திருமதி கார்த்திகா அவர்கள் ஏமாற்றவில்லை... எடுத்த ஒன்று இரண்டு பாடல்கள் கூட அருமையாக நாட்டியத்து ஏற்றவாறு தேர்ந்து எடுத்து முழுமையாக பாரம்பரிய நாட்டியக்கலைக்கு பங்கம் வராத மாதிரி நாட்டியத்தை அமைத்திருந்தது அருமை அருமை. காளிங்க நர்த்தனம், கிருஷ்ண முராரி, ஒருமுறை வந்து பார்த்தாயா, தட்டின் மீது நின்று தலையில் கலசத்துடன் ஆடும் நாட்டியம் ... அப்பப்பா நம்பவே முடியாத அளவுக்கு தேர்ச்சி பெற்ற நடனக்கலைஞர்களை போல இந்த சிறார்கள், பெண்கள் ஆடிய நடனம் இருந்தது.

யார் சொன்னது தமிழ் இனி மெல்ல சாகும் என? அந்நிய மண்ணாக இருந்தாலும் அதை உரமிட்டு வளர்க்க ஆட்கள் இருக்கிறார்கள் என்னும் போது தமிழும் அதன் கலாட்சாரம் எப்படி சாகும்? மேலும் பல நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தி இந்த கலையை அழியாமல் பாதுகாக்க வேண்டும் மக்களும் பேராதரவை கொடுத்து இந்த கலையை அழியாமல் பாதுகாக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.

அன்புடன்
சாந்தி நாகராஜ்