நோபல் பரிசு பெற்ற சமூக சேவகர் அன்னை தெரசா

.


*உலகம் முழுவதும் அன்பு, கருணையை வாரி வழங்கிய முன்னுதாரண சமூக சேவகரும் அமைதிக்கான நோபல் பரிசை வென்றவருமான அன்னை தெரசா (Mother Teresa) பிறந்த தினம் ஆகஸ்ட் 26. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

*யூகோஸ்லேவியாவில், ஸ்கோப்ஜே என்ற நகரில் பிறந்தவர் (1910). ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ என்பது இவரது இயற்பெயர். 8 வயதில் தந்தையை இழந்தார்.

*இவரது அம்மா மிகவும் தர்ம சிந்தனை கொண்டவர். இவர்கள் வீட்டில் எப்போதுமே குடும்ப உறுப்பினர்களைத் தவிர நிறைய பேர் சேர்ந்து உண்பார்கள். ‘மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளாமல் ஒரு வாய் உணவைக்கூட உண்ணக்கூடாது’ என்பது அம்மா சொல்லிக்கொடுத்த பாலபாடம்.*12 வயதில் முதன்முதலாக ஆன்மிக அழைப்பை உணர்ந்தார். 18 வயதில் கன்னிகா ஸ்திரீயாக மாறுவது என முடிவு செய்தார். வீட்டைவிட்டு வெளியேறி, அதற்கான பயிற்சிகளை மேற்கொண்டார். ‘சகோதரி தெரசா’ என்று தன் பெயரை மாற்றிக்கொண்டார். 1923-ல் ‘சோடாலிட்டி ஆஃப் சில்ரன் ஆஃப் மேரி’ என்ற சமூக சேவை அமைப்பில் இணைந்தார்.

*1929-ல் கல்கத்தா வந்தார். அங்கு ஒரு பள்ளியில் சுமார் 17 ஆண்டு கள் பணிபுரிந்தார். 1946-ல் இவர் உணர்ந்த மற்றுமொரு ஆன்மிக அழைப்பை ஏற்றார், ஏழைகளுக்கு உதவுவதற்காக, கற்பித்தல் பணியிலிருந்து விலகினார். கல்கத்தாவின் மிக ஏழ்மையான குடியிருப்புகளுக்குச் சென்று அங்குள்ள மக்களைச் சந்தித்தார். அவர்களுக்கு

*சேவை செய்வதற்காக செவிலியர் பணிக்கான மருத் துவப் பயிற்சி பெற்றார். இவருடன் இணைந்து சேவையாற்றும் 10 பேர் கொண்ட முதல் குழு உருவானது. 1950-ல் ‘ஆர்டர் ஆஃப் தி மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி’ என்ற அமைப்பை உருவாக்கினார். தனது அமைப்புகளுக்கு தெருத்தெருவாகச் சென்று நிதி உதவி திரட்டினார்.

*1952-ல் ‘நிர்மல் ஹ்ருதய்’ என்ற இல்லத்தைத் தொடங்கினார். கல்கத்தா தெருக்களில் ஆதரவற்றுக் கிடந்த ஏராளமான தொழுநோயாளிகளை இங்கு கொண்டு வந்து பராமரித்தார். அவர்களின் காயங்களுக்கு மருந்திட்டார்.

*எய்ட்ஸ், தொழுநோய், காசநோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர் களுக்கான நலவாழ்வு மையங்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்துக் கான ஆலோசனை அமைப்புகள், முதியோர், மாற்றுத்திறனாளிகள், பார்வையற்றவர்கள் ஆகியோருக்கான மையங்கள், அனாதை இல்லங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றையும் ஆரம்பித்தார்.

*‘சிறந்த சமூக சேவகர்’, ‘ஏழைகளுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் பாதுகாவலர்’ என உலகமே இவரைப் பாரட்டியது. உலகில் எங்கெல்லாம் மக்கள் துன்புறுகிறார்களோ அங்கெல்லாம் ஓடோடிச் சென்று உதவினார். ‘சம்திங் ப்யூட்டிஃபுல் ஃபார் காட்’ என்ற இவர் வாழ்க்கை குறித்த ஆவணப்படம் வெளிவந்துள்ளது.

*இவரது மனிதநேயப் பணிகளுக்காக அமைதிக்கான நோபல் பரிசு 1979-ல் வழங்கப்பட்டது. பத்ம விருது, ஜவஹர்லால் நேரு விருது, பாரத ரத்னா விருது, அமெரிக்க ஜனாதிபதி பதக்கம், பிலிப்பைன்சின் ரமன் மகசேசே விருது, ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியா, மற்றும் இங்கிலாந்து, அமெரிக்க நாடுகளின் ஆர்டர் ஆஃப் மெரிட் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட விருதுகளையும் கவுரவங்களையும் பெற்றார். இந்தியாவிலும்

*மேற்கத்திய நாடுகளிலும் பல பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டங்கள் வழங்கின. அரை நூற்றாண் டுக்கும் மேலாக மானுட சேவையில் இறைதரிசனம் பெற்ற அன்னை தெரசா 1997-ம் ஆண்டு 87-வது வயதில் மறைந்தார். அப்போது 123 நாடுகளில் இவரது 610 தொண்டு அமைப்புகள் இயங்கி வந்தன.

Keywords: சமூக சேவகர், அன்னை தெரசா, அமைதிக்கான நோபல் பரிசு, நிர்மல் ஹ்ருதய், கல்கத்தா

nantri /tamil.thehindu.com/opin

No comments: