சோமாலியாவில் அரசாங்கத் தலைமையகத்தை இலக்குவைத்து கார் குண்டுத் தாக்குதல்கள்
இத்தாலியில் பாரிய பூமியதிர்ச்சி ; உயிரிழப்பு 159 பேராக அதிகரிப்பு
உலகின் மிகப்பெரிய பலூன் விமானம் விபத்துள்ளானது
சோமாலியாவில் அரசாங்கத் தலைமையகத்தை இலக்குவைத்து கார் குண்டுத் தாக்குதல்கள்
22/08/2016 சோமாலியாவில் பகுதியாக தன்னாட்சி நிலவும் புன்ட்லாண்ட் பிராந்தியத்தில் கலக்கயோ நகரிலுள்ள உள்ளூர் அரசாங்கத் தலைமையகத்தை இலக்குவைத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட கார் குண்டுத் தாக்குதல்களில் குறைந்தது 10 பேர் பலியாகியுள்ளதுடன் பலர் காயமடைந் துள்ளனர்.
பலியானவர்களில் பாதுகாப்புப் படையினரும் பொதுமக்களும் உள்ளடங்குவதாக பிராந்திய பொலிஸ் அதிகாரியான அலி அஹ்மெட் தெரிவித்தார்.
இந்தத் தாக்குதலுக்கு அல் – ஷபாப் தீவிரவாதிகள் உரிமைகோரியுள்ளனர்.
இரு தற்கொலைக் கார் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன என அந்த தீவிரவாத குழுவின் பேச்சாளரான அப்டியாஸிஸ் அபு முஸாப் கூறினார்.
முதலாவது கார் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு ஒரு நிமிட காலத்தில் இரண்டாவது கார் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக அங் கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இத்தாலியில் பாரிய பூமியதிர்ச்சி ; உயிரிழப்பு 159 பேராக அதிகரிப்பு
25/08/2016 இத்தாலியில் நேற்று இடம்பெற்ற பூமியதிர்ச்சியில் 159 பேர் உயிரிழந்துள்ளதாகசர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மத்திய இத்தாலியில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் ஏற்பட்ட பூமியதிர்ச்சி 6.2 ரிச்டராக பதிவாகியுள்ளது.
இந்நிலையில் குறித்த பூமியதிர்ச்சியினால் ஏற்பட்ட இடிபாடுகளுக்குள் சிக்கி 159 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100 பேரை காணவில்லையென அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மீட்பு பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கைஅதிகரிக்க கூடும் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
உலகின் மிகப்பெரிய பலூன் விமானம் விபத்துள்ளானது
25/08/2016 உலகின் மிகப்பெரிய பலூன் விமானம் தனது 2 ஆவது பரீட்சார்த்த நடவடிக்கையின் போது விபத்துக்குள்ளானது.
பிரிட்டனின் ஹைபெர்ட் ஏர் வேக்கிள்ஸ் என்ற விமான தயாரிப்பு நிறுவனம்ஏர்லான்டர்-10 என்ற பெயரில் உலகின் மிகப்பெரிய பலூன் விமானத்தைவடிவமைத்ததுள்ளது.
முதல் சோதனை ஓட்டம் கடந்த 19 ஆம் திகதி நடந்தது. அதில் வெற்றிகரமாக தனது பயணத்தினை நிறைவு செய்தது.
இந்நிலையில், பெட்போர்ட்ஷயர் கவுண்டி பகுதியில் நேற்று 10 டொன் பாரத்தினை சுமந்து தனது 2 ஆவது சோதனை மேற்கொண்டது.
அப்போது விமானத்தின் முன்பாகம் திடீரென தரையில் மோதி விமான விபத்திற்குள்ளாகியது.
எனினும், குறித்த விமானத்தில் பயணித்தவர்களுக்கு எவ்வித ஆபத்தும்ஏற்படவில்லையென வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment