முதல் தடவை கோல்ட்கோஸ்டில் நடந்த தமிழ் எழுத்தாளர் விழா

.
குவின்ஸ்லாந்து பொற்கரையில் சங்கத்தமிழும் நவீன இலக்கியமும் சங்கமித்த எழுத்தாளர் - கலைஞர் ஒன்றுகூடல்
.

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய  கலைச்சங்கத்தின் வருடாந்த  தமிழ் எழுத்தாளர் விழா இம்முறை முதல் தடவையாக  குவின்ஸ்லாந்து மாநிலத்தில் கோல்ட்கோஸ்டில்  கடந்த    27-08-2016 ஆம்                          திகதி  பேராசிரியர் ஆசி. கந்தராஜா தலைமையில்     Auditorium,   Helensvale  Library   மண்டபத்தில்     நடைபெற்றது.
இவ்விழாவை  இலங்கையிலிருந்து  வருகை    தந்த  மூத்த  எழுத்தாளர்  திருமதி.  தாமரைச்செல்வி மங்கல  விளக்கேற்றி  தொடக்கிவைத்தார்.  திரு. பவனேந்திரகுமாரின்   வரவேற்புரையுடன் ஆரம்பமான விழா  நிகழ்ச்சிகளில்,   மறைந்த   படைப்பாளிகள்,  கலைஞர்களின்  ஒளிப்படக்  கண்காட்சி,   கவியரங்கு,  கருத்தரங்கு,  பட்டி மன்றம், வாசிப்பு   அனுபவப்பகிர்வு,  மற்றும்  கலை  நிகழ்ச்சிகள்  இடம்பெற்றன.






நூல் விமர்சன அரங்கில் - கந்தசாமியும் கலக்சியும்    ( நாவல்) - (ஜே.கே.' ஜெயக்குமாரன்) -  கொஞ்சும் தமிழ் (சிறுவர் இலக்கியம்) -  கவிஞர் அம்பி -  கீதையடி   நீ எனக்கு  (குறுநாவல்கள்)    கறுத்தக்கொழும்பான் (படைப்புக்கட்டுரைகள்)  -   (பேராசிரியர் கந்தராஜா) -  வாழும் சுவடுகள்    (தொழில்சார்  அனுபவப் பதிவுகள்)     (மருத்துவர் நடேசன்  )ஆகிய நூல்கள் இடம்பெற்றன.                      
மருத்துவர்  நடேசன்,  திரு. முருகபூபதி, மருத்துவர்   வாசுகி  சித்திரசேனன், திரு. செல்வபாண்டியன்  ஆகியோர்  இந்த  அரங்கில் உரையாற்றினர்.
கருத்தரங்கில்    கன்பராவிலிருந்து    வருகைதந்த  இலக்கிய  ஆர்வலர் மருத்துவர்   கார்த்திக் வேல்சாமி    “சமகால தமிழ்  இலக்கியப் பரப்பில்  அவுஸ்திரேலியப்படைப்பாளிகளின்   எழுத்துலகம்” என்னும்    தலைப்பில்   உரையாற்றினார்.    " வெளிநாட்டு   வாழ்வில்   நாம்  பெற்றது  அதிகமா ?   இழந்தது  அதிகமா?"    என்ற   தலைப்பில்  சிட்னியிலிருந்து    வருகைதந்த   திரு. திருநந்தகுமார்   தலைமையில்    இடம்பெற்ற   பட்டி மன்றத்தில் மருத்துவர்     கண்ணன்  நடராசன்    அறிமுக   உரையாற்றினார்.  


வெளிநாட்டு வாழ்வில்  நாம்   பெற்றது   அதிகமா  ?   என்னும் தலைப்பில்,     திருமதி.வாசுகி சிவானந்தன்,    திரு.காந்தன் கந்தராசா,  திரு.சிவகைலாசம்    ஆகியோரும்   இழந்தது  அதிகமா ? என்னும் தலைப்பில்,   திருமதி சாரதா   இரவிச்சந்திரன்                   திருமதி இரமாதேவி  தனசேகர் ,   திரு. குமாரதாசன்   ஆகியோரும்  வாதாடினார்கள்.
கலையரங்கில்  வீணையிசை  -  பரதம் முதலான  நிகழ்ச்சிகளில்  செல்வி.    சிவரூபிணி  முகுந்தன்,  ஸ்ரீமதி.  பத்மலக்ஷ்மி ஸ்ரீராமும் குழுவினரும், செல்வி மதுஜா பவன், செல்வி  சிவகௌரி  சோமசுந்தரம்,   ஆகியோர் பங்கேற்றனர்.  விழாவை   முன்னிட்டு  வெளியிடப்பட்ட  தமிழ்நதி   சிறப்பிதழை முனைவர் பிரதீப்குமார்,    திருமதி   தாமரைச்செல்விக்கு   வழங்கி  வெளியிட்டுவைத்தார்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்  மருத்துவர்  வாசுகி சித்திரசேனன் தொகுத்து  வழங்கிய  மூவேந்தர்  வளர்த்த  சங்கத்தமிழின்  பெருமை பற்றிய  முத்தமிழ்  விருந்து  கதம்ப நிகழ்ச்சியில்,  சங்கமம் கலைக்குழுவைச்சேர்ந்த  முப்பதிற்கும்  மேற்பட்ட  கலைஞர்கள்    பங்கேற்றனர்.  


         இவ்விழாவில்   அண்மையில்  நடந்த  அவுஸ்திரேலியா  பல கதைகள்    சிறுகதைப்போட்டி   முடிவுகளை  அறிவித்த அதன்  ஏற்பாட்டாளர்  திரு. முகுந்தராஜ் ,   விழா    நிகழ்ச்சிகளின்  இறுதியில்   நன்றியுரை   நிகழ்த்தினார்.
அவுஸ்திரேலியா பல கதைகள்  - சிறுகதைப்போட்டி முடிவுகள்:
முதல் பரிசு - இமிகோலிங்  - அகிலன் நடராஜா - மேற்கு அவுஸ்திரேலியா
இரண்டாம் பரிசு - காவோலைகள் - சியாமளா யோகேஸ்வரன்;  - குவின்ஸ்லாந்து.
மூன்றாம் பரிசு - தாயகக்கனவுகள்  - கமலேந்திரன் சதீஸ்குமார் - தெற்கு அவுஸ்திரேலியா
------0---






No comments: