ஜேர்மனியிலிருந்து கொழும்பு வர 15 மணிநேர தாமதம் விமானி பணி இடைநிறுத்தம்
நாமல் சற்றுமுன்னர் பிணையில் விடுதலை
பேராதெனிய பல்கலைக்கழகத்தில் தமிழ், முஸ்லிம் மாணவர்கள் மீது தாக்குதல்
பேராதனை பல்கழைக்கழகத்தின் 10 மாணவர்ளுக்கு வகுப்புத் தடை
நலன்புரி முகாம்களில் 1033 குடும்பங்களை விரைவில் மீள்குடியேற்ற நடவடிக்கை
பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல்.!
பேராதனைப் பல்கலை மாணவர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலையில்
வடக்கு கிழக்கில் எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்படப்போவதில்லை
ஜேர்மனியிலிருந்து கொழும்பு வர 15 மணிநேர தாமதம் விமானி பணி இடைநிறுத்தம்
22/08/2016 ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்துக்கு சொந்தமான விமானமொன்று 15 மணித்தியாலங்கள் தாமதமாக பயணத்தை ஆரம்பிக்க காரணமாக இருந்ததாக கூறப்படும் அவ்விமானத்தின் தலைமை விமானி உடன் அமுலுக்கு வரும் வகையில் பணி இடை நிருத்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஜேர்மனியின் ஃபிராங்ஃபர்ட் விமான நிலையத்தில் UL554 எனும் விமானத்தின் தலைமை விமானி (கெப்டன்) மதுபான பரிசோதனையில் தோல்வியடைந்ததன் விளைவாக அவரால் விமானத்தை செலுத்த முடியாது போனதாகவும் இதனால் 15 மணி நேர தாமதத்தின் பின்னர் பிறிதொரு விமானியைப் பயன்படுத்தி விமானத்தை இலங்கை நோக்கி செலுத்தி வந்ததாகவும் தெரிவிக்கும் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ், அது தொடர்பிலான விசாரணைகளுக்காகவே பணி இடை நிறுத்தல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.
ஃபிராங்ஃபர்ட் விமான நிலையத்தில் குறித்த தலைமை விமானி தொடர்பில் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து அவர் மதுபோதையில் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளுக்கு குறித்த விமான நிலைய அதிகாரிகளின் ஒத்துழைப்பும் பெற்றுக்கொள்ளப்படும் எனவும் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஶ்ரீ லங்கன் விமான நிறுவனத்திற்கு சொந்தமான UL554 எனும் விமானம், கடந்த வெள்ளியன்று பிற்பகல் 3.20 மணிக்கு ப்ரங்பேர்ட் விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்கவிற்கான பயணத்தை ஆரம்பிக்கவிருந்தது.
இந்த விமானத்தில் கட்டுநாயக்க நோக்கி பயணிப்பதற்காக, 259 பயணிகள் தயாராகவிருந்தனர்.
எனினும், விமான பணியாளரொருவர் வருகை தராமையால் விமானம் புறப்படுவதில் 15 மணித்தியால தாமதம் ஏற்பட்டது.
ஃப்ரங்க்ஃபர்ட் விமான நிலையம் இரவு நேரத்தில் மூடப்படுகின்றமையால், மறு நாள் சனியன்று காலை 6.20 இற்கே விமானம் இலங்கையை நோக்கி புறப்பட்டது.
மது போதையில் இருந்த தலைமை விமானிக்கு பதிலாக, கொழும்பிலிருந்து ஃப்ரங்க்ஃபர்ட் நோக்கிப் பயணித்த மற்றுமொரு விமானத்திலிருந்த விமானி, விமான நிறுவனத்தின் சட்ட விதிமுறைகளுக்கமைய கடமையில் ஈடுபடுத்தப்பட்டார்.
விமானம் தாமதமான நேரப்பகுதியில் பயணிகளுக்கு, உணவு மற்றும் தங்குமிட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டதாக ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் குறிப்பிடப்பட்டுள்ளது.
தாமதம் தொடர்பில் பயணிகளிடம் மன்னிப்புக் கோரியுள்ள விமான நிறுவனம், ஐரோப்பிய ஒன்றிய விதிமுறைகளுக்கு அமைய தாமதத்திற்காக பயணிகளுக்கு நட்ட ஈட்டைப் பெற்றுக்கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய ஒழுங்கு விதிமுறைகளுக்கமைய, மூன்று மணித்தியாலங்களுக்கு அதிக நேரம் தாமதம் ஏற்படும் பட்சத்தில் விமான நிறுவனத்திடமிருந்து நட்ட ஈடு பெற்றுக்கொள்ள முடியும்.
ஐரோப்பாவிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்காத 3500 கிலோமீற்றர்களை விட அதிகத் தொலைவிலிருக்கும் நாடொன்றிற்கு மூன்று மணித்தியாலங்கள் தாமதம் ஏற்பட்டால், பயணிகளுக்கு தலா 600 யூரோக்களை நட்ட ஈடாக செலுத்த வேண்டும்.
ஃப்ரங்க்ஃபர்ட் மற்றும் கட்டுநாயக்கவிற்கு இடையிலான விமானப் பயண தூரம் 8087 கிலோமீற்றர்களாகும்.
இதற்கமை, பயணியொருவருக்கு 600 யூரோக்களை ஶ்ரீலங்கல் விமான நிறுவனம் செலுத்த வேண்டியேற்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் நாணய மாற்று விகிதங்களுக்கு அமைய, ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் பயணியொருவருக்கு செலுத்த வேண்டிய தொகை 96,960 ரூபாவாகும். நன்றி வீரகேசரி
நாமல் சற்றுமுன்னர் பிணையில் விடுதலை
22/08/2016 நிதிமோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாமல் ராஜபக்ஷ எம்.பி. சற்றுமுன்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கடந்த 15 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, கொழும்பு, புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போதே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷ தனியார் நிறுவனம் ஒன்றின் 125 மில்லியன் ரூபா பெறுமதியான பங்குகளை கொள்வனவு செய்தமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ள நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தவேளை கடந்த 15 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி
பேராதெனிய பல்கலைக்கழகத்தில் தமிழ், முஸ்லிம் மாணவர்கள் மீது தாக்குதல்
23/08/2016 பேராதெனிய பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களால் தமிழ் மற்றும் முஸ்லிம் மாணவர்கள் மீது நேற்றிரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலில் காயமடைந்த 3 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நன்றி வீரகேசரி
பேராதனை பல்கழைக்கழகத்தின் 10 மாணவர்ளுக்கு வகுப்புத் தடை
25/08/2016 பேராதனை பல்கலைக்கழகத்தின் இணைந்த சுகாதார விஞ்ஞான கற்கை பீடத்தின 10 மாணவர்களுக்கு இருவார தற்காலிக வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் சிலர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே குறித்த தற்காலிக வகுப்புத் தடை வழங்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தின் இணைந்த சுகாதார விஞ்ஞான கற்கை பீடத்தைச் சேர்ந்த இரு மாணவக் குழுக்களிடையே கடந்த 22 ஆம் திகதி மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றது.
இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
நலன்புரி முகாம்களில் 1033 குடும்பங்களை விரைவில் மீள்குடியேற்ற நடவடிக்கை
23/08/2016 பாதுகாப்பு அமைச்சு மற்றும் மாவட்ட செயலகங்களுடன் இணைந்து நலன்புரி நிலையங்களிலுள்ள உள்ளக இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது யாழ் மாவட்டத்தில் 936 குடும்பங்களுடன் 31 நலன்புரி நிலையங்களும் வவுனியா மாவட்டத்தின் பூந்தோட்டம் நலன்புரிமுகாமில் 97 குடும்பங்களும் காணப்படுகின்றன என்று சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு ,மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
வவுனியாபூந்தோட்டம் நலன்புரி நிலையத்திலுள்ள உள்ளக இடம்பெயர்ந்த மக்களுக்கு, வவுனியா வடக்கு சின்னடம்பனில் 66 வீடுகளும் மற்றும் வவுனியா வடக்கு புளியங்குளத்தில் 31வீடுகளுமாக,மொத்தமாக 97 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.
இந்த வீடுகள் முறையே 2016ஆம் ஆண்டுசெப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்கிடையில் நிறைவுசெய்யதிட்டமிடப்பட்டுள்ளன. இவ் விடயம் தொடர்பானபுரிந்துணர்வுஒப்பந்தத்தில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு,புனர்வாழ்வளிப்பு,மீள்குடியேற்றம் மற்றும் இந்துமதஅலுவல்கள் அமைச்சு மற்றும் ஞானம் பவுன்டேசன் ஆகியன கையொப்பமிட்டன. அத்துடன் ஞானம் பவுன்டேசனால் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நிர்மாண வேலைகள் தற்போது நடைபெற்றுவருகின்றன.
எனவே,வவுனியாபூந்தோட்டம் நலன்புரிநிலையத்திலுள்ளஅனைத்துஉள்ளக இடம்பெயர்ந்தமக்களுக்கும் (97 குடும்பங்கள்) நிரந்தர வீடுகளுக்கான தீர்வுகள் கண்டறியப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு,புனர்வாழ்வளிப்பு,மீள்குடியேற்றம் மற்றும் இந்துமதஅலுவல்கள் அமைச்சின்செயலாளர் வே. சிவஞானசோதி தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் நலன்புரிநிலையத்திலுள்ள936 (குடும்பங்கள்) உள்ளக இடம்பெயர்ந்தமக்களுக்குத் தேவையானநிரந்தரவீடுகளைநிர்மாணிப்பதற்குஅமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்கயாழ் மாவட்டத்தின் காங்கேசன்துறை,கீரிமலைஆகிய இடங்களில் இலங்கை இராணுவத்தினரின் உதவியுடன் துரிதகதியில் 100வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுவருகின்றன. இக் கட்டுமானப் பணிகளை 2016ஆம் ஆண்டுசெப்டம்பர் மாதத்தில் நிறைவுசெய்வதற்குதீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும்உரிமையாளர்களின் முன்னெடுப்பின்கீழ் )பலாலிவடக்கில் 104 வீட்டுஅலகுகள் நிர்மாணிக்கப்பட்டுவருவதோடு இப் பணிகள் 2016ஆம் ஆண்டுஒக்டோபர் மாதமளவில் நிறைவுசெய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் நலன்புரிநிலையங்களிலுள்ள 250 காணியற்றகுடும்பங்களினைமீள்குடியேற்றுவதற்குகாங்கேசன்துறை சீமெந்துதொழிற்சாலைப் பகுதியில் 250 காணித்தொகுதிகள் இனங்காணப்பட்டுள்ளன.
அத்துடன் உள்ளக இடம்பெயர்ந்த மக்களை நலன்புரி முகாம்களிலிருந்து முழுமையாக வெளியேற்றி நிரந்தர தீர்வினை வழங்குவதற்காக மேலும் 452 குடும்பங்கள் நலன்புரிமுகாம்களிலிருந்துமீள்குடியமர்த்தப்படவேண்டியவர்களாகக் காணப்படுகின்றனர் அமைச்சின் செயலாளர் வே. சிவஞானசோதி குறிப்பிட்டார்.
ஜனாதிபதிமைத்திரிபாலசிறிசேனவின் அறிவுறுத்தலுக்கிணங்க,நலன்புரிமுகாம்களிலும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடனும் வசிக்கும் குடும்பங்களைமீள்குடியேற்றுவதற்கானநடவடிக்கைகள் பாதுகாப்புஅமைச்சினால் முன்கூட்டியேமேற்கொள்ளப்பட்டுள்ளன.நலன்புரிநிலையங்களிலுள்ளமேலும் 100 குடும்பங்களைகுறைப்பதற்கும்மீள்குடியேற்றுவதற்கும் காங்கேசன்துறைதெற்கு,மேற்குமற்றும் மையப்பகுதி,பலாலிவீமன்காமம் வடக்குமற்றும் தையிட்டிஆகிய இடங்களிலுள்ள 450 ஏக்கர் காணிகளைவிடுவிப்பதற்குகலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. உள்ளக இடம்பெயர்ந்தமக்களின் மீள்குடியேற்றத்திற்குஏதுவாகஅரசஅதிகாரத்திலுள்ளதனியார் காணிகளைவிடுவிப்பதற்குஅரசாங்கத்தினால் அதிகமுன்னுரிமைவழங்கப்பட்டுவருகின்றது. இவ் விடயம் தொடர்பாக,உள்ளக இடம்பெயர்ந்தமக்களின் மீள்குடியேற்றத்திற்கெனதனியார் காணிகளைவிடுவிப்பதுதொடர்பாகபிரதேசசெயலகங்களுடன் இணைந்துசெயற்படுவதற்குபாதுகாப்புஅமைச்சின் செயலாளர்பொறியாளர். கருணாசேனஹெட்டியாராய்ச்சியின் தலைமையில் விசேட குழு ஒன்றுசெயற்பட்டுவருகின்றது.
போரினால் பாதிக்கப்பட்ட இடம்பெயர்ந்தகுடும்பங்களின் தேசியகொள்கைகளுக்கானநிரந்தரதீர்விற்குகடந்தஅமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சரவைஅமைச்சர்களால்அனுமதிவழங்கப்பட்டுள்ளது. மேலும்,உரிமையாளர் முன்னெடுப்புடன் கூடிய 10,000 வீடுகளின் திட்டமானதுவடக்குமற்றும் கிழக்குமாகாணங்களில் மிகவும் முன்னேற்றகரமாகசெயற்படுத்தப்பட்டுவருகின்றது. 2,400பகுதியளவுபாதிக்கப்பட்டவீடுகள் புதுப்பிக்கப்பட்டுவருகின்றன மற்றும் குடிநீர் வசதிகள் சர்வதேச வீதிகள் மற்றும் மின்சாரத்துடன் கூடியஉட்கட்டமைப்புவசதிகளுடன் 7,600 சுகாதாரஅலகுகள் உள்ளக இடம்பெயர்ந்தகுடும்பங்களுக்கெனநிர்மாணிக்கப்பட்டுவருகின்றன.
அதிகபட்சமாகஒருகுடும்பத்திற்கு ரூபா. 100,000.00 என்றவகையில் 12,050 குடும்பங்கள் வாழ்வாதாரஅபிவிருத்தித் திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டுள்ளன . மேலும் இத் திட்டத்தின் கீழ் பயனாளிகளாக: உள்ளக இடம்பெயர்ந்தமக்கள்,நாடுதிரும்பப்பட்டஅகதிகள்,பெண்களைதலைமைத்துவமாகக் கொண்டகுடும்பங்கள்மற்றும் சமூகத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டமுன்னாள் போராளிகள்ஆகியோர் காணப்படுகின்றனர்.
இவ் அனைத்துமுயற்சிகளும்இலங்கையில்நிலையானஓர் நல்லிணக்கத்தைஏற்படுத்துவதற்கானநோக்கத்தைக் கொண்டவையாகும்என அமைச்சின் செயலாளர். வே. சிவஞானசோதிஅவர்கள் மேலும் கூறினார்.
நன்றி வீரகேசரிபிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல்.!
24/08/2016 முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனும் பிள்ளையானின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கவின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் எதிர்வரும் மார்ச் மாதம் 07 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு நீதவான் கனேசராஜாவின் உத்தரவிற்கமைய பிள்ளையானது விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது நன்றி வீரகேசரி
பேராதனைப் பல்கலை மாணவர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலையில்
24/08/2016 பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இரு மாணவக் குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த ஐவர் பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற இந்த மோதல் குறித்து மத்திய மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.ஏ.டி.எஸ். குணவர்தனவின் உத்தரவுக்கு அமைய பேராதனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கீழ் விஷேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்து வைத்தியசாலையில் உள்ள மாணவர்களிடமும் பேராதனை பல்கலையின் இணைந்த சுகாதார விஞ்ஞான பீடத்தின் முதலாம் தர மாணவர்கள் மற்றும் இரண்டாம் வருட மாணவர்கள் பலரிடமும் இது குறித்து வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் பலரிடம் வாக்கு மூலம் பெறப்படவுள்ளதாகவும் பேராதனை பொலிஸார் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும் நேற்று மாலை வரை பொலிஸார் முன்னெடுத்த ஆரம்பகட்ட விசாரணைகளின் பிரகாரம், அண்மையில் இடம்பெற்ற மாணவர் கூட்டம் ஒன்றில் மாணவர்கள் சிலர் கலந்துகொள்ளாமை தொடர்பில் இணைந்த சுகாதார விஞ்ஞான பீடத்தின் முதலாம் தர மாணவர்கள் மற்றும் இரண்டாம் வருட மாணவர்களிடையே காரசாரமான வார்த்தைப் பிரயோகங்கள் நேற்று முன் தினம் இரவு இடம்பெற்றுள்ளன. இந்த வாய்த்தர்க்கம் மோதலில் முடிவடைந்துள்ளதாக முதல் கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளன.
இந் நிலையிலேயெ இந்த மோதலால் காயமடைந்த 5 மாணவர்கள் பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருவதாகவும் அவர்களின் நிலைமை கவலைக்கிடமக இல்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
தாக்குதலுக்குள்ளான மாணவர்களால் பேராதனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாக பிரதேசத்துக்கு பொறுப்பான் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். நன்றி வீரகேசரி
வடக்கு கிழக்கில் எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்படப்போவதில்லை
25/08/2016 வடக்கு கிழக்கில் இருந்து எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்படப்போவதில்லை. தேசிய பாதுகாப்பு விடயத்தில் இன்றும் அச்சுறுத்தல் உள்ளது என இராணுவத் தளபதி லேப்.ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா தெரிவித்தார்.
இறுதி யுத்தத்தில் நாற்பதாயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறுவதும், அறுபதாயிரம் பொதுமக்கள் காணாமல்போனதாக கூறுவதும் முழுப்பொய். அதேபோல் விடுதலைப்புலி முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்படவில்லை என்பதை உறுதியாக கூறமுடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
கொழும்பு பாதுகாப்பு மாநாடு தொடர்பில் இன்று பாதுகாப்பு தரப்பினர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இராணுவத்தளபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
நாட்டின் பயங்கரவாத சூழ்நிலை தொடர்பில் எமக்கு நல்ல அனுபவம் உள்ளது. யுத்தம் முடிவுக்கு வந்ததில் இருந்து நம் வடக்கில் நிலைமைகளை கையாள்வதில் பாரிய சவால்களை எதிர்கொண்டு வருகின்றோம். அதேபோல் யுத்தத்தின் பின்னர் மீள் குடியேற்றம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை நாம் பலமாக மேற்கொண்டு வருகின்றோம். சர்வதேச நாடுகளின் பார்வை எம்மீது உள்ள நிலையில் இலங்கையில் அடுத்தகட்ட நகர்வுகள் எவ்வாறானதாக அமையும் என அனைவரும் பார்த்துகொண்டுள்ளனர். அதேபோல் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தரப்பின் நிலைப்பாடுகளை கவனத்தில் கொள்ளவேண்டிய நிலைமைகளும் உள்ளது.
இறுதி யுத்தத்தில் நாற்பதாயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறுவதும், அறுபதாயிரம் பொதுமக்கள் காணாமல்போனதாக கூறுவதும் பொய்யான கருத்தாகும். அதேபோல் விடுதலைப்புலி முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டுள்ளது என்பதும் முழுப்பொய்.
வடக்கில் இன்றும் பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல்கள் உள்ளன. வடக்கு கிழக்கில் மட்டும் அல்ல எந்தப்பகுதியில் இருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்படாது. வடக்கில் உள்ள இராணுவம் குறைக்கப்படும் என குறிப்பிட்டுள்ள போதிலும் முக்கியமான முகாம்கள் எவையும் அகற்றப்படுவதாக கூறவில்லை. அதேபோல் வடக்கில் இருந்து முகாம்களை அகற்றும் தீர்மானமும் இல்லை. தேசிய பாதுகாப்பு விடயத்தில் நாம் மிகுந்த அவதானத்துடன் செயற்பட்டு வருகின்றோம் என தெரிவித்தார்
நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment