.
படித்துத் தொடுத்தது: செல்வத்துரை சந்திரகாசன்
nantri Thepam
இந்த நவீன காலத்தில், பல்வேறு வகைப்பட்ட திராவிட மொழிகளைப் பேசும் மக்கள் இந்தியாவின் தென் பகுதியிலும், இலங்கையின் வட-கிழக்கு பகுதியிலும் பெரும்பாலாக இருந்தாலும், ஆதிகாலத்தில் திராவிடர்களின் மூதையார்களின் அதிகார எல்லை/வாழ்விடம் சரியாக அறியப்படவில்லை. எது எப்படியாயினும் மிகவும் நன்றாக உறுதிபடுத்தப்பட்ட கருது கோள் [அனுமானம்], திராவிடர்கள் இந்தியா முழுவதும், அதாவது வட கிழக்கு பகுதி உட்பட எல்லா இடங்களிலும் பரந்து வாழ்ந்தார்கள் என்று கூறுகிறது. சில பன்மொழியறிஞர்கள்,இந்திய-ஆரிய இனத்தவர்களின் இடப்பெயர்ச்சிக்கு முன்பு திராவிடர்கள் இந்திய துணைக்கண்டம் முழுவதுமே பரந்து இருந்தார்கள் என உத்தேசமான முடிவுக்கு வருகிறார்கள்.
திராவிட மொழிகளில் முக்கியமானவை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு என்பனவாகும். இவை தவிர இன்னும் பல சிறிதும் பெரிதுமான திராவிட மொழிகள் தென்னிந்தியாவிலும், அதற்கு வெளியேயும் பேசப் பட்டு வருகின்றன. இவற்றுள் தமிழ் தவிர்ந்த ஏனையவை பெருமளவு வடமொழிச் செல்வாக்குக்கு உட்பட்டு மாற்றம் அடைந்துவிட்டன. தமிழ் மட்டுமே பெருமளவுக்குத் திராவிடச் சொற்களுடன் பேசப்படக்கூடிய மொழியாக இன்னும் இருந்து வருகிறது. உலகெங்கும் 85 திராவிட மொழிகள் தற்சமயம் உள்ளன. பொதுவாக இவர்கள் கரு நிறத் தோல் கொண்டவர்கள்.
நிலம், நீர், காற்று, விண், வளியென கலந்ததொரு மயக்கமான நிலையில் உலகம் உண்டாயிற்று. மயக்கமான நிலை நாளடைவில் மங்கத் தொடங்கியது. சிறிது சிறிதாய் உலகத்தின் வெளிப்புறத் தோற்றம் பரிமாணங்கள் பெற்றுத் தெளிவு பெறத் துவங்கியது என்கிறார் தொல்காப்பியர் 3000-2500 ஆண்டுகளுக்கு முன்னர்.
"நிலம் தீ நீர்வளி விசும் பொடைந்துங்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்
இருதிணை ஐம்பால் இயனெறி வழாமைத்
திரிவில் சொல்லோடு தழாஅல் வேண்டும்"
இப்படி படிப்படியாக உருப்பெற்ற உலகில், எல்லா மனிதர்களும் ஆரம்பத்தில் தென் கிழக்கு ஆஃப்ரிக்காவில் தான் தோன்றினார்கள். அங்கே தான் ஹொமினினே[Homininae/ஒமினினே ] என்கிற ஒரு வாலற்ற குரங்கு இனம் பரிணாம வளர்ச்சியில் உரு மாறிக்கொண்டே இருந்தது. மேலும் மேலும் பரிணாம வளர்ச்சிக்கு உட்பட்டு, உருமாறிக் கொண்டே போய், இப்போது இருக்கும் மனித இனமான ஹோமோ சேப்பியன்ஸ் சேப்பியன்ஸ் [homo sapiens sapiens : ,Actually, the root "homo" means "man" and the root "sapien" means "being." So, human being.Modern humans are the subspecies Homo sapiens sapiens] என்கிற இனமாக உருவானது. இந்த இனம் தோன்றியது தென்கிழக்கு ஆஃப்ரிக்காவில் தான். இந்த இனம் உணவு தேடி, நாடோடிகளாய் பல புதிய திறந்தவெளிகளை நோக்கி பயணித்தன. இந்த ஹோமோ சேப்பியன் இனத்தவர் தான் படிப்படியாக, ஐரோப்பா, மேற்கு ஆசியா மற்றும் இதர ஆசியப் பகுதிகள் நோக்கி இடம் பெயர்ந்தனர் எனவும், வரலாற்று அறிஞர்களால் நம்பப்படுகிறது.
"ஆஃப்ரிக்காவில் இருந்து வெளியே"[ஓரிடத் தோற்றக் கருதுகோள்] என்ற இந்த மாதிரி (model ) மிகவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விளக்கம் ஆகும். வெவ்வேறு நிலவியற் பகுதிகளில் வாழும் மக்களில் இப்போது காணப்படும் வெவ்வேறு உருவ அமைப்பு, அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்ப கடைசி 60 ஆயிரம் வருடங்களாக படிப்படியாகத் மாறி வந்துகொண்டு இருந்ததாக [பரிணாமம் அடைந்தது என] நம்பப்படுகிறது.
"பல்பிராந்திய" மாதிரி [பல்லிடத் தோற்றக் கருதுகோள்] இரண்டாவது ஆகும். இது மனிதர்களின் மூதையார்கள் ஆஃப்ரிக்காவில் இருந்து 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வெளியேறி, பரவி முற் காலத்துக்குரிய ஆஃப்ரிக்க, ஆசிய,ஐரோப்பிய பிராந்திய குழுக்களாக தோற்றம் அடைந்தார்கள் என்கிறது. எனவே ஆசிய,ஐரோப்பிய நவீன மனிதர்கள், அதன் பின் ஒரே சமயத்தில் அந்தந்த இடங்களில் பரிணாமம் அடைந்ததாக [நவீன மனிதர்களாகக் கூர்ப்படைந்தனர் என] கருதுகிறார்கள்.
இதே மாதிரி, போட்டியிட்டுக்கொண்டு பல கருது கோள்கள், எங்கு எப்போது தமிழ் திராவிடன் தோன்றினான், பின் எவ்வாறு பரவினான் என பலதரப்பட்ட கல்விமான்களால் விளக்கம் கொடுக்கப்படுகின்றன. ஒரே மாதிரியான மொழியும் பண்பாடும் இரு வேறுபட்ட,ஒன்றோடு ஒன்று எந்த தொடர்பும் அற்ற இரு இடங்களில் வளர்ச்சி அடைய முடியாது என்பதால், நாம் ஒரு மாதிரியையே, - "ஆஃப்ரிக்காவில் இருந்து வெளியே" என்ற மாதிரி ஒன்றையே- தெரிந்து எடுக்கவேண்டி உள்ளது. ஆகவே தமிழ் மொழியும், அதனுடன் இணைந்த பண்பாடும் தமிழ் நாட்டிலேயே அல்லது தமிழ் நாடு , இலங்கை ஆகியவற்றை ஒருமிக்க கொண்ட ஒரு நிலப்பரப்பிலோ அல்லது இவையை தவிர்ந்த வேறு ஒரு நிலப்பரப்பிலோ தோன்றி,வளர்ந்து 4000-5000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் நாடு.இலங்கைக்கு வந்திருக்கலாம் என கருத இடம் உண்டு. இக்கருத்துக்கு ஆதாரமாகப் பல சான்றுகள் உள்ளன.
அவையாவன:
[1] கடல் கொண்ட குமரிக்கண்டம் - தமிழ் இலக்கிய சான்றுகள்
[2] சுமேரிய நாகரிகம் - தற்போதைய இராக் பிரதேசம்
[3] சிந்து வெளி நாகரிகம் - மொகன்சதாரோ, கரப்பா - தற்போதைய பாகிஸ்தான் பிரதேசம்
[4] தற்கால ஆஃப்ரிக்கா ஆகும்
திராவிட இனத்தின் தோற்றம் பற்றித் தெளிவான முடிவுக்கு வரக்கூடிய சான்றுகள் போதாமையால் , இது தொடர்பான சர்ச்சைகள் மேலே கூறிய கருத்துக்களை வைத்து முடிவில்லாது தொடர்கின்றன. இந்தப் பின்னணியில் பல்வேறு வகையான கருத்துக்களை ஆய்வாளர்கள் முன்வைத்துள்ளனர். திராவிடரும், வெளியிலிருந்தே இந்தியாவுக்குள் வந்தனர் என்பது ஒரு வகையான கருத்து. இவர்களுட் சிலர் திராவிடர் மத்தியதரைக் கடற் பகுதிகளிலிருந்தே இந்தியாவுக்குள் வந்ததாகக் கூறுகின்றனர். வேறு சில ஆய்வாளர்கள், தென்னிந்தியா அல்லது அதற்குத் தெற்கே இருந்து கடல் கோளினால் அழிந்துபோன ஒரு நிலப்பகுதியே திராவிடர்களின் தாயகம் என்கின்றனர்.
எப்படியாயினும், ஆரியர் வருகைக்குமுன் இந்தியா முழுவதிலும் திராவிடர் பரவியிருந்தார்கள் என்னும் கொள்கை பல ஆய்வாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. 1 லட்சத்து 35 ஆயிரம் மற்றும் 75 ஆயிரம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கிழக்கு ஆஃப்ரிக்காவில் மிகப் பெரிய பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மாலவி ஏரி வற்றிப் போனதால் பெரும் பஞ்சம் ஏற்பட்டு ஆஃப்ரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த கிட்டத்தட்ட 95 சதவீதம் பேர் அங்கிருந்து இடம் பெயர்ந்துள்ளனர். அவர்கள் அந்தமான் நிக்கோபார் வழியாகத்தான் இடம் பெயர்ந்து சென்றுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. அதாவது அந்தமான், நிக்கோபார் மற்றும் தென்னிந்தியாவின் மூலமாக அவர்கள் பல்வேறு நாடுகளுக்கும் இடம் பெயர்ந்து சென்றுள்ளனர் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
பகுதி 03 of 82 தொடரும்-----
Origins of Tamils
[Where are Tamil people from?]
Composed and Compiled by: Kandiah Thillaivinayagalingam
Edited and Forwarded by: Selvadurai Santhiragasan
Thanks to: THEEBAM; ttamil.com
ENGLISH SUMMARY
PART 02 of 82
Although in modern times speakers of the various Dravidian languages have mainly occupied the southern portion of India & north & east of Sri Lanka, nothing definite is known about the ancient domain of the Dravidian parent speech. It is, however, a well-established and well-supported hypothesis that Dravidian speakers must have been widespread throughout India, including the northwest region. Some linguists hypothesized that Dravidian-speaking people were spread throughout the Indian subcontinent before a series of Indo-Aryan migrations.
The most populous Dravidian languages are Telugu, Tamil, Kannada, and Malayalam.There are also small groups of Dravidian-speaking scheduled tribes,who live beyond the mainstream communities. Today, the Dravidian language family have about 85 languages including Tuluvas , Gonds and Brahui ,
Regarding the Origins of Modern Humans,Current data suggest few models. ‘Out of Africa’ model is currently the most widely favoured explanation accounting for the origins of modern humans. It suggests that modern humans originated in Africa and had spread to the Middle East by 100,000 years ago. Modern humans only became well established elsewhere in the last 50,000 years.The different physical features now found in modern humans from different geographical areas around the world are believed to have evolved over only the last 60,000 years or so as a result of adaptations to different environments.
The ‘Multi regional’ model suggests that when human ancestors first left Africa nearly two million years ago, they spread out and formed regional groups of early humans across Africa, Asia and Europe.Modern humans then evolved concurrently in all these regions rather than from a single group of humans in Africa.
Similarly,many competing hypotheses/evidences attempting to explain when & where early Tamil Dravidians, originated & migrated elsewhere are recently suggested by various scholars. In this regard, we can choose only one model similar to ‘Out of Africa’ model as identical/same language & related culture can not be developed in two different isolated places/lands. Hence either the Tamil language & related culture would have been originated in Tamil Nadu itself/any land mass contains Tamil Nadu & Sri Lanka or any other land other than Tamil Nadu & Sri Lanka & migrated to Tamil nadu & Sri Lanka 4000-5000 years before.
In relation to above suggestion we can consider many possibilities such as:
[1] Lost Tamil continent of Kumari Kandam,
[2] Sumerian civilization [Ancient Mesopotamia],corresponding to modern-day Iraq ,
[3] Mohenjodaro & Harappan civilization in the Indus Valley and
[4] Africa itself.
Although in modern times speakers of the various Dravidian languages have mainly occupied the southern portion of India, nothing definite is known about the ancient domain of the Dravidian parent speech. In this context, researchers have proposed various kinds of comments. Some say they came from outside India, may be through mediterranean region. Some say from Kumari Kandam, known as continent of Lemuria. It is, however, a well-established and well-supported hypothesis that Dravidian speakers must have been widespread throughout India, including the northwest region.It is believed that between 135 thousand and 75 thousand years ago, There were Great Famine in East Africa, due to dry up of Lake Malawi. There by, almost 95 per cent of the Africans migrated to different countries through Andaman, Nicobar and southern India.
PART :03 /WILL FOLLOW
nantri Thepam
No comments:
Post a Comment