தமிழ் சினிமா ஜோக்கர்

.
ஜோக்கர் - Cineulagam
தமிழ் சினிமாவில் தரமான படங்கள் வருவது மிகவும் அரிது. அதிலும் நாட்டிற்கு அவசியமான கருத்துக்களுடன் வரும் படம் அரிதிலும் அரிது, கடந்த முறை குக்கூ என்ற தரமான கதையை கையில் எடுத்த இந்த ராஜு முருகன் இந்த முறை நாம் வாழ்கிறோம், என தெரியாமல் நாட்டிற்காக வாழ்பவர்களை ஜோக்கர், கிறுக்கன் என கூறுபவர்களுக்கு சாட்டையடியாக வெளிவந்துள்ள படம் தான் ஜோக்கர்.

கதைக்களம்

ஒருவனின் ஏழ்மையை அரசியல்வாதிகள் எப்படி அரசியலாக்குகின்றனர் என்பதே இப்படத்தின் ஒன் லைன், மன்னர் மன்னர் (குரு சோமசுந்தரம்) தன்னை ஜனாதிபதியாகவே நினைத்துக்கொண்டு ஊரில் நடக்கும் அநியாயங்களுக்கு எதிராக குரல் கொடுக்கிறார்.
இவரை ஊரே கிண்டலாக தான் பார்க்கிறது, தன் சொந்த மனைவியை கருணை கொலை செய்ய வேண்டும் என மனு கொடுக்கிறார் மன்னர் மன்னர், ஏன் இவர் இப்படியெல்லாம் நடந்துக்கொள்கிறார், இவருக்கு என்ன தான் வேண்டும். எதற்காக இவருடன் சேர்ந்து ஒரு வயதானவர் மற்றும் இளம் பெண் போராடுகிறார்கள் என்பதை மன்னர் மன்னர் வாயிலாக ராஜுமுருகன் கூறியுள்ளார்.

படத்தை பற்றிய அலசல்:

தமிழ் சினிமாவில் மாதம் 20 படங்கள் வருகிறது, இதில் ஒரு சில படங்களே காலத்தை கடந்தும் மனதில் நிற்கும், அப்படியான ஒரு படம் தான் இந்த ஜோக்கர், நாட்டில் நடக்கும் அனைத்து கேலிகூத்துக்களையும் மிகவும் தைரியமாக ராஜுமுருகன் கூறியுள்ளார்.
மன்னர் மன்னராக குரு சோமசுந்தரம், இதுதான் நடிப்பு என கூறும் அளவிற்கு அனைத்து விதமான காட்சிகளிலும் அசத்துகிறார், அவருடன் வரும் ஒரு வயதானவர் எதற்கு எடுத்தாலும் பெட்டி கெஸ் போடுவார், இவர்களுடன் வரும் இளம்பெண் அனைத்தையும் பேஸ்புக்கில் போட்டு உடனுக்குடன் ரெஸ்பான்ஸ் சொல்வது என கலகலப்பாக படம் தொடங்குகிறது.
மன்னர் மன்னர் தன்னை ஒரு ஜனாதிபதி என்று கூறும் இடத்தில் ஊர் மக்கள் மட்டுமில்லை ஆடியன்ஸும் கூட சேர்ந்து சிரிப்பார்கள், ஆனால், நாம் சிரிக்கும் ஒரு விஷயம் தான் மிகப்பெரும் அரசியல் என்பதை முகத்தில் அறைந்தார் போல் கூறப்பட்டது.
அதிலும் குறிப்பாக கிராமப்புறங்களில் இன்னும் பெண்களுக்கு ஒரு கழிவறை கூட இல்லை, கழிப்பிடம் இருக்கும் வீட்டிற்கு தான் மருமகளாவேன் என வைராக்கியத்துடன் இருக்கும் பெண் என பல உணர்வுகளை யதார்த்தமாக காட்டியுள்ளனர், ஒரு கழிப்பிடத்தில் கூட இத்தனை ஊழல் செய்ய முடியும் என்பதை வெட்ட வெளிச்சம் போட்டு காட்டியுள்ளனர்.
படத்தின் வசனம் கண்டிப்பாக எழுந்து நின்று கைத்தட்டலாம், இப்படியெல்லாம் வசனங்கள் வைக்க உண்மையாகவே தனி தைரியம் வேண்டும், அதிலும் இந்த காலத்தில், ஆளுங்கட்சி, முதல் எதிர்க்கட்சி வரை அனைவரையும் ஒரு ரைடு விட்டுள்ளார் ராஜு முருகன்.
இதில் குறிப்பாக இப்தார் விருந்தில் கலந்துக்கொண்டதால் தான் என்னை போலிஸ் பிடித்துவிட்டது, இது எல்லாம் பிரதமர் வேலை என குரு சொல்லும் இடத்தில் 1000 அரசியல் மறைந்திருக்கின்றது. பேஸ்புக் போராளிகள் சிலர் நம்மை கிண்டல் செய்கிறார்கள், அவர்களை ப்ளாக் செய்யட்டுமா? என ஒரு பெண் கேட்க, அது அவர்கள் கருத்துரிமை நாம் தலையிடக்கூடாது என மன்னர் மன்னர் கூறும் இடம் அப்லாஸ் அள்ளுகின்றது.
க்ளாப்ஸ்
ராஜு முருகன் எடுத்த கதைக்களம், அதற்கு ஏற்ற கதாபாத்திரங்கள், இவற்றை எல்லாம் விட வசனம், ஒரு கக்கூஸை வைத்துக்கொண்டு ஊழல் செய்த உங்களிடம் நான் நியாத்தை எதிர்ப்பார்த்தது என் தப்பு தான், நாட்டுக்காக போராடுகிற நாங்க ஜோக்கராயா? எதையும் செய்யாம ஆட்டு மந்தை மாதிரி ஓட்டை விற்று வாழும் நீங்க தான்யா ஜோக்கர்’ போன்ற வசனங்கள் சபாஷ்.
ஷான் ரோல்டனின் இசையில் என்னங்க சார் உங்க சட்டம் பாடல் காட்சிகளுடன் பார்க்கும் போது இன்னும் ரசிக்க வைக்கின்றது, பின்னணி இசையிலும் கலக்கியுள்ளார், செழியனின் ஒளிப்பதிவு தர்மபுரி கிராமப்பகுதிகளின் அழகையும், அழுக்கையும் படம் பிடித்து காட்டியுள்ளது.
நம்ம வீட்டிற்கு ஒரு கழிப்பிடம் வராதா என மன்னர் மன்னரின் மனைவி ஏங்கும் காட்சி, வித்தியாச வித்தியாசமாக போராடும் மன்னர் மன்னர், கிளைமேக்ஸில் உயர்நீதிமன்றத்திலேயே தைரியமாக பேசும் காட்சிகள் என அனைத்தும் செம்ம.

பல்ப்ஸ்

மெதுவாக நகரும் காட்சியமைப்புக்கள்.
மொத்தத்தில் படம் பார்த்து விட்டு வெளியே வருபவர்களுக்கு இந்த சமூகத்தில் நாம் எத்தனை பெரிய ஜோக்கராக இருக்கிறோம் என்பது தெளிவாக தெரிந்துவிடும்.
ரேட்டிங்- 3.5/5
நன்றி cineulagam
















ஜோக்கர்


No comments: