.
யாழில் இடம்பெற்ற இந்தியாவின் 70 ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் (காணொளி இணைப்பு)
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 17 இலங்கையர்கள் கைது
நாமலுக்கு எதிர்வரும் 22 ஆம் திகதிவரை விளக்கமறியல்
தயா மாஸ்டருக்கு பிணை.!
வவுனியாவுக்கான பொருளாதார மத்திய நிலையம் தேக்கவத்தையில்
33 ஆவது ஜெனிவா கூட்டத் தொடர் செப்டெம்பர் 13 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை
யாழில் இடம்பெற்ற இந்தியாவின் 70 ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் (காணொளி இணைப்பு)
தயா மாஸ்டருக்கு பிணை.!
வவுனியாவுக்கான பொருளாதார மத்திய நிலையம் தேக்கவத்தையில்
33 ஆவது ஜெனிவா கூட்டத் தொடர் செப்டெம்பர் 13 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை
யாழில் இடம்பெற்ற இந்தியாவின் 70 ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் (காணொளி இணைப்பு)
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 17 இலங்கையர்கள் கைது
நாமலுக்கு எதிர்வரும் 22 ஆம் திகதிவரை விளக்கமறியல்
தயா மாஸ்டருக்கு பிணை.!
வவுனியாவுக்கான பொருளாதார மத்திய நிலையம் தேக்கவத்தையில்
33 ஆவது ஜெனிவா கூட்டத் தொடர் செப்டெம்பர் 13 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை
யாழில் இடம்பெற்ற இந்தியாவின் 70 ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் (காணொளி இணைப்பு)
15/08/2016 இந்தியாவின் 70 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் இல்லத்தில் இடம்பெற்றது.
துணை தூதுவர் எ.நடராஜன் தலைமையில் இன்று சுதந்திரதினக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
இந்தியாவின் தேசியக் கொடியினை துணைத் தூதுவர் ஏற்றி வைத்ததையடுத்து இந்திய ஜனாதிபதியால் மக்களுக்கு ஆற்றப்படும் உரையினை துணை தூதுவர் வாசித்தார்.
தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்டிருந்த மக்களுக்கு தூதுவர் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் இந்தியப் பிரஜைகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 17 இலங்கையர்கள் கைது
15/08/2016 சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 17 இலங்கையர்களை கடற்படையினர் இன்று (15) மட்டக்களப்பு மேற்க கடற்பரப்பில் வைத்து கைதுசெய்துள்ளனர்.
குறித்த இலங்கையர்கள் வாழைச்சேனை பகுதியிலிருந்து படகொன்றின் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்டுள்ளனர்.
இதேவேளை கைதுசெய்யப்பட்ட நபர்களை கடற்படையினர் திரகோணமலை துறைமுகத்துக்கு அழைத்துவந்துள்ளதுடன், மேலதிக நடவடிக்கைகளுக்காக குற்றப்புலனாய்வு பிரிவு திணைக்களத்தின் கடல்சார் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர். நன்றி வீரகேசரி
நாமலுக்கு எதிர்வரும் 22 ஆம் திகதிவரை விளக்கமறியல்
15/08/2016 பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 22 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதமன்றம் இன்று (15) உத்தரவிட்டுள்ளது.
இன்று காலை நிதி மோசடி விசாரணைப் பிரிவில் வாக்குமூலமளிக்க ஆஜரான நாமல் ராஜபக்ஷவை நிதி மோசடி விசாரணைப்பிரிவினர் கைது செய்து நீதிமன்றில் ஆஜபடுத்தப்பட்ட நிலையில், அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனம் ஒன்றின் 125 மில்லியன் ரூபா பெறுமதியான பங்குகளை கொள்வனவு செய்தமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ள நாமல் நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி
தயா மாஸ்டருக்கு பிணை.!
16/08/2016 புலிகளின் முன்னாள் ஊடகத்துறைப் பொறுப்பாளர் தயா மாஸ்டர் பிணையில் நேற்று மாலை விடுதலை செய்யப்பட் டார். பிணையாளர்கள் நீதிமன்றத்தில் கையொப்பமிட்டதையடுத்தே அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அரச விரோத தமிழீழ விடுதலைப்புலிகளுடன் இணைந்து அரசுக்கெதிராக செயற்பட்டார் என குற்றம் சாட்டப்பட்ட இவருக்கு பயங்கரவாத செயற்பாடுகளின் கீழ் தொடுக்கப்பட்ட வழக்கில் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி புதிய பிணை நிபந்தணையை கடந்தவாரம் வித்தித்திருந்தார்.
இந் நிலையில் ஒரு லட்சம் ரூபா பொறுமதியான நான்கு அரச உத்தியோகத்தர்களை கொண்ட பிணையிலும் ஐந்து லட்சம் ரூபா ரொக்கப்பிணையிலும் செல்ல நீதிமன்றம் நேற்று உத்திரவிட்டது.
இந் நிலையில் நான்கு அரச உத்தியோகத்தர்கள்நேற்று நீதிமன்றத்தில் கையொப்பமிட்டதுடன் பணமும் நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது அதன் பின்னரே தயா மாஸ்டர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
இதேவேளை தயா மாஸ்டர் தினமும் யாழ் பொலிஸ் நிலையத்தில் காலை 9 மணியில் இருந்து 12 மணிவரைக்குள் கையொப்பமிட்வேண்டும் எனவும் வட மாகாணத்தை விட்டு செல்ல முடியாது என்ற நிபந்தணைகளும் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளன. நன்றி வீரகேசரி
வவுனியாவுக்கான பொருளாதார மத்திய நிலையம் தேக்கவத்தையில்
15/08/2016 நீண்டகாலம் இழுபறி நிலைக்குள்ளாகியிருந்த வவுனியாவுக்கான பொருளாதார நிலையத்தை வவுனியா தேக்கவத்தையில் அமைப்பதற்கான முடிவு இன்று ஏகமானதாக எடுக்கப்பட்டது.
வவுனியா அரசாங்க அதிபர் எம்.பி.ஆர்.புஷ்பகுமார தலைமையில் கிராமியப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பி.ஹரிசன், கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன், முதலமைச்சரின் செயலாளர் வி.கேதீஸ்வரன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் வவுனியா கச்சேரியில் இடம்பெற்ற உயர்மட்டக் கூட்டத்தில், இந்தத் தீர்க்கமான முடிவு எடுக்கப்பட்டது.
இன்று வவுனியா கச்சேரியில் இடம்பெற்ற கூட்டத்தில் வவுனியா விவசாய சங்கப் பிரதிநிதிகளும், வவுனியா மாவட்டத்தை தளமாகக்கொண்ட மக்கள் பிரதிநிதிகளும் பங்கேற்று, தத்தமது கருத்துக்களை வெளியிட்டனர்,
இக்கலந்துரையாடலின் பின்னர் அமைச்சர்களான ஹரிசன், றிசாத் பதியுதீன் ஆகியோர், வவுனியா தேக்கவத்தைக்குச் சென்று பொருளாதார நிலையத்தை அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்ட தேக்கவத்தை என்ற இடத்தைப் பார்வையிட்டனர்.
மஸ்தான் எம்.பி, வடமாகாண சபை உறுப்பினர் பி.ஜெயதிலக,வவுனியா அரசாங்க அதிபர் எம்.பி.ஆர்.புஷ்பகுமார, முதலமைச்சரின் செயலாளர் வி.கேதீஸ்வரன், முதலமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் பி.இராஜேஸ்வரி ஆகியோர் உட்பட விவசாய சங்கப் பிரதிநிதிகளும் இதில் பங்கேற்றிருந்தனர்.
தேக்கவத்தை மிகவும் பொருத்தமான இடமென உறுதிப்படுத்தப்பட்டு பின்னர் அமைச்சர்கள், அதிகாரிகள், விவசாயப் பிரதிநிதிகளுடன் மீண்டும் ஒரு கலந்துரையாடல் வவுனியா கச்சேரியில் இடம்பெற்றது.
இதேவேளை எதிர்வரும் 27 ஆம் திகதி அமைச்சர் ஹரிசனுக்கும், விவசாய சங்கப் பிரதிநிதிகளுக்குமான சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அந்தக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
பொருளாதார நிலையத்தில் எவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வதெனவும், எவ்வாறான விளைபொருட்களை கொண்டு வருவது எனவும் கலந்துரையாடுவதற்காகவே விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. நன்றி வீரகேசரி
33 ஆவது ஜெனிவா கூட்டத் தொடர் செப்டெம்பர் 13 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை
18/08/2016 ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 33 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 13 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது.
இந்த 33 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை குறித்த உத்தியோகபூர்வமான அமர்வுகளோ விவாதங்களோ நடைபெறாவிடினும் இலங்கை தூதுக்குழுவினால் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் குறித்த அறிக்கை ஆவணம் ஒன்று முன்வைக்கப்படவுள்ளது.
இது தொடர்பான ஏற்பாடுகள் ஜெனிவாவுக்கான இலங்கை தூதுவர் ரவிநாத ஆரியசிங்க தலைமையிலான தூதுக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
அத்துடன் 33 ஆவது கூட்டத் தொடரில் இலங்கையின் சார்பில் ஜெனிவாவுக்கான இலங்கை தூதுவர் ரவிநாத ஆரியசிங்க உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment