உலகச் செய்திகள்


4 இலட்ச அமெரிக்க டொலர்கள் பெறுமதியான எண்ணெய் கப்பல் கடத்தல்

காட்டுத்தீயின் விளைவாக சுமார் 82 ஆயிரம் பேர் இடம்பெயர்வு

 உயிருக்காக போராடும் பெண் நிகழ்ச்சி தொகுப்பாளர் ; ஒலிம்பிக்கிற்கு சென்றவேளை சம்பவம்

துருக்கியில் கார் குண்டு தாக்குதல் ; 3 பேர் பலி ; 100 பேர் காயம்

துருக்கியில் இரட்டை கார் குண்டு தாக்குதல் ; 14 பேர் பலி



4 இலட்ச அமெரிக்க டொலர்கள் பெறுமதியான எண்ணெய் கப்பல் கடத்தல்

17/08/2016 மலேசியாவின் எண்ணெய் கப்பல் ஒன்று கடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றனர்.
குறித்த எண்ணெய் கப்பலில் சுமார் 4 இலட்ச அமெரிக்க டொலர்கள்  பெறுமதியான 9 இலட்ச லீட்டர் மசகு எண்ணெய் கொண்டு சென்ற எம்டி.வியர் ஹார்மோனி என்ற கப்பலே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளது.
கடத்தப்பட்டுள்ள எம்டி.வியர் ஹார்மோனி கப்பல் இந்தோனேஷியா கடற்பரப்பில் தரித்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நன்றி வீரகேசரி













காட்டுத்தீயின் விளைவாக சுமார் 82 ஆயிரம் பேர் இடம்பெயர்வு

18/08/2016 அமெரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள கலிபோர்னியா மாநிலத்தின் தென்பகுதியில்அதிகரித்துவரும் காட்டுத்தீயின் விளைவாக சுமார் 82 ஆயிரம் பேர் தங்களதுவசிப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றனர்.
கலிபோர்னியாவின் தென்பகுதியில் உள்ள மலையோர காட்டுப் பகுதியில் ஏற்பட்ட திடீர்தீ பரவி 9 ஆயிரம் ஏக்கர் நிலம் முற்றாக சேதமடைந்துள்ளதோடு,இதுதவிர சுமார் 3இலட்சம் ஏக்கர் நிலம் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
இந்த காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் 700 இற்கும் அதிகமான தீயணைப்புப்படைவீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இருப்பினும்,அதிக காற்று காரணமாக வேகமாக பரவிவரும் இந்த தீயினால்லாஸ்ஏஞ்சலஸ் நகரில் இருந்து சுமார் 120 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள ரைட்வுட் குடியிருப்புபகுதியில் உள்ள பல வீடுகள் சேதமடைந்துள்ளன.
இதன்விளைவாகஅப்பகுதியில் வசித்துவந்த சுமார் 82 ஆயிரம் பேர் தங்களதுவசிப்பிடங்களை விட்டு வெளியேற்றப்பட்டுபாதுகாப்பான இடங்களில்தங்கவைக்கப்பட்டுள்ளனர்இதேபோல்வடக்கு கலிபோர்னியாவின் ஒருசிலபகுதிகளிலும் காட்டுத்தீ மிகவேகமாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில்,மத்திய கலிபோர்னியாவில் சில பகுதிகளுக்கு ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நன்றி வீரகேசரி













உயிருக்காக போராடும் பெண் நிகழ்ச்சி தொகுப்பாளர் ; ஒலிம்பிக்கிற்கு சென்றவேளை சம்பவம்

18/08/2016 ரியோ ஒலிம்பிக்கிற்காக சென்ற பெண் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவர் மலேரியா நோய்த்தாக்கத்திற்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தனது உயிருக்காக போராடி வருகின்றார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி பெண் தொகுப்பாளரான சார்லி வெப்ஸ்டரே இவ்வாறு மலேரியா நோயினால் பீடிக்கப்பட்டு கோமா நிலையில் ரியோடி ஜெனீரோவிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
33 வயதான சார்லி வெப்ஸ்டர் ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி செய்திச் சேவையின் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்துள்ளார்.
தற்போது டீம் ஜிபி குழுமத்தின் தூதுவராக இருக்கும் சார்லி வெப்ஸ்டர் , கடந்த 6 ஆம் திகதி ஒலிம்பிக் நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக இங்கிலாந்திலிருந்து ரியோ டி ஜெனீரோவுக்கு சென்றிருந்தார்.
அங்கு ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்ட சார்லி வெப்ஸ்டர், அதன் பின் மலேரியா நோய்த்தாக்கத்திற்கு ஆளானார்.
நிகழ்ச்சி தொகுப்பாளினியான சார்லி வெப்ஸ்டர், தான் நோயினால் பீடிக்கப்பட்டுள்ள நிலையில் ரியோ டி ஜெனீரோவிலுள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாக தனது டுவிட்டர் பக்கத்தில்  தரவேற்றியிருந்தார்.
இதேவேளை, இவருக்கு அருகில் தாயர் மற்றும் சகேதரர்கள் இருப்பதாகவும்  பிரேசில், அமெரிக்க மற்றும் இங்கிலாந்து மருத்துவர்கள் குழு இணைந்து தரமான சிகிச்சைகளை மேற்கொள்வதாகவும் அவரது ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
நன்றி வீரகேசரி












துருக்கியில் கார் குண்டு தாக்குதல் ; 3 பேர் பலி ; 100 பேர் காயம்

18/08/2016 துருக்கியில் இடம்பெற்ற கார் குண்டு தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துருக்கியின் கிழக்கு பகுதியில் மத்திய இபேக்யோலு மாவட்டத்தில் அமைந்துள்ள பொலிஸ் நிலைய தலைமையகம் மற்றும் குடியிருப்பை குறிவைத்து இத்தாக்குதல்நடத்தப்பட்டடுள்ளது.
குறித்த தாக்குதலை தொடர்ந்து ஏராளமான பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்
இந்த தாக்குதலுக்கு இதுவரையிலும் எவ்வித அமைப்பு பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி











துருக்கியில் இரட்டை கார் குண்டு தாக்குதல் ; 14 பேர் பலி 

19/08/2016 துருக்கியின் இடம்பெற்ற இரட்டை கார் குண்டு தாக்குதலில் 14 பேர் பலியாகியுள்ளனர்.
துருக்கி , இஸ்தான்புலில் பொலிஸ் நிலையங்கள் இரண்டை குறி வைத்து கார் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதலில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன் , 220 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இத் தாக்குதலிற்கு குர்திஷ் பயங்கிரவாதிகள் பொறுபேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி




No comments: