தமிழ் சினிமா


ஜீரோ





நாம் பயன்படுத்தும் எண்களில் ஜீரோ (zero) விற்கு என தனி முக்கியத்துவம் உள்ளது. அதேபோல் பல வகை படங்களுக்கு மத்தியில்romantic thriller என டாக் லைனோடு ஒரு வித்தியாசமான கதையை கையாண்டுள்ள இந்த ஜீரோ திரைப்படம், அதேபோல் முக்கியத்துவம் பெறுமா? என இந்த விமர்சனத்தில் பார்ப்போம்.

கதைக்களம்

அஷ்வின், ஷிவதா இருவரும் காதலித்து திருமணம் செய்துகொள்கிறார்கள். நாயகனின் தந்தைக்கு இத்திருமணத்தில் விருப்பம் இல்லை. காரணம் நாயகியின் அம்மாவிற்கு கர்ப்ப காலத்தில் ஏற்பட்ட மனநல பாதிப்பும் அதனால் அவர் மரணம் அடைந்ததும், அதேபோல் ஷிவதாவிற்க்கும் மனநலம் பாதிப்பு ஏற்படுமோ என பயம். இவரின் ஐயத்திற்கு ஏற்ப நாளடைவில் நாயகிக்கு மனநல பாதிப்பு ஏற்படுகிறது.
ஒரு கட்டத்தில் தனக்குள் நடக்கும் மாற்றங்களை ஷிவதாவும் உணர ஆரம்பிக்கிறார். ஆனால் இப்பிரச்சனையால் தனது காதலுக்கு எதுவும் ஆகி, தன் அம்மாவை போல தன் வாழ்க்கை மாறக் கூடாது என இவர் நினைக்க முதல் பாதி நகர்கிறது, ஆனால் இக்கதைக்கு இரண்டாம் பாதியில் யாரும் எதிர்பாராத அளவிற்கு ஒரு திருப்பத்தை வைத்து கதை வேறு பாதையில் நகர்கிறது.
இதில் நாயகிக்கு என்ன ஆகுகிறது அவர்களின் திருமண வாழ்க்கை முறிகிறதா, தொடர்கிறதா? என ஓரு சிக்கலான கதையை வித்தியாசமான முறையில் சொல்லி இருக்கிறார் அறிமுக இயக்குநர் ஷிவ் மோஹா.

படத்தை பற்றிய அலசல்:

அஸ்வின், ஷிவதா இருவருக்கும் தான் நடிப்பதற்கான அதிக இடம் உள்ளது. இருவரும் தங்களது பங்கை சரியாக செய்துள்ளனர், JD சக்கரவர்த்தி ஒரு முக்கியமான பாத்திரத்தின் மூலம் கவனம் ஈர்க்கிறார்.
இவர்களை தவிர படத்தில் வரும் மற்ற நடிகர்களும் தங்களது பங்கை குறையில்லாமல் செய்துள்ளார்கள் என்றே சொல்ல வேண்டும். ஒட்டுமொத்த படத்தையும் யாரும் எதிர்பாராத விதத்திலும் வித்தியாசமான அணுகுமுறையிலும் கையாண்டுள்ளார் இயக்குனர்.
குறிப்பாக முதல் பாதியில் ஷிவதாவிற்கு ஏற்படும் மாற்றத்தை காட்டும் காட்சி நமக்கே மனநல பாதிப்பு ஏற்பட்டால் இப்படித்தான் இருக்குமோ என யோசிக்க வைக்கிறது. பல இடங்களில் நம்மை மிரட்டி சீட்டின் நுனிக்கு இழுத்து செல்கிறது படம். ஆனால் இதற்க்காக இவர்கள் எடுத்துக்கொண்ட நேரம் கொஞ்சம் அதிகமோ என யோசிக்க வைக்கிறது. அதேபோல் சில இடங்களில் இருக்கும் இழுவையான காட்சிகள் தேவையற்றவை.
சில கேள்விகளுக்கான பதில் கடைசிவரை தெரியவில்லை. முதல் பாதியில் சுவாரஸ்யமான பல கேள்விகளை எழுப்பி ”அடுத்தது என்ன” என்று யோசிக்க வைத்துவிட்டு பிற்பாதியில் அதற்கான காரணம் தெரிந்தவுடன் படத்தின் சுவாரஸ்யம் சற்று குறைக்கிறது. படத்தின் ஒளிப்பதிவு, CG, படத்தொகுப்பு என அனைத்தும் படத்தின் பலம் என்றாலும் தனித்து தெரிவது நிவாஸ் பிரசன்னாவின் பின்னணி இசையும் படத்தின் ஒலி வடிவமைப்பும் தான் படத்தின் மிகப்பெரிய பலம். பல காட்சிகளை சென்சூரி அடிக்க வைத்ததே இவ்விரண்டு அம்சங்கள்தான்.

க்ளாப்ஸ்:

சிக்கலான கதையை வித்தியாசமான முறையில் சொல்லிய விதம். படத்தின் காட்சியமைப்பு (குறிப்பாக கற்பனையான பல விஷயங்கள்) மற்றும்அனைத்து நடிகர்களின் நடிப்பும் பலம், ஆனால் மிகப்பெரிய பலமாக கருதபடுவது நிவாஸ் பிரசன்னாவின் பின்னணி இசையும் படத்தின் ஒலி வடிவமைப்பும் தான். அதேபோல் ஒட்டுமொத்த படமும் ஒரு வித்தியாசமான அனுபவத்தை தருகிறது.

பல்ப்ஸ்:

இக்கதை எடுத்துக்கொண்ட நேரம், CG சில இடங்களில் இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்கலாமோ என சொல்ல தோன்றுகிறது. சில இடங்களில் இருக்கும் இழுவையான காட்சிகள் தேவையற்றவை. அதேபோல் இப்படம் அனைத்து ரசிகர்களையும் திருப்திபடுத்துமா என்பது கேள்விக்குறி.
மொத்ததில் ஜீரோ ஒரு வித்தியாசமான த்ரில்லர். கண்டிப்பாக ‘டக் அவுட்’ம் அல்ல அதே சமயம் ‘சென்சூரியும்’ அல்ல.

ரேட்டிங் : 2.75 / 5    நன்றி  cineulagam