உலகச் செய்திகள்


எம்.எச். 370 விமா­னத்­தி­னு­டை­யது என நம்­பப்­படும் சிதை­வுகள் மொரி­ஷி­யஸில் கண்­டு­பி­டிப்பு

 'பனாமா பேப்பர்ஸ்' கசிவு : உலகமே வியப்பில் 

உலகத்தையே உலுக்கிய பனாமா ஆவணங்கள் ; விசாரணை தீவிரம்

மதுபானங்கள் விற்பனை செய்ய முழு தடை

பயங்கர தீ விபத்து : 86 பேர் பலி, 350 காயம்

உண்மையை ஒப்புக்கொண்டார் பிரித்தானிய பிரதமர் : பதவிவிலக எதிர்க்கட்சி அழுத்தம்

எம்.எச். 370 விமா­னத்­தி­னு­டை­யது என நம்­பப்­படும் சிதை­வுகள் மொரி­ஷி­யஸில் கண்­டு­பி­டிப்பு



04/04/2016 காணா­மல்­போன மலே­சிய எம்.எச். 370 விமா­னத்­தி­னு­டை­யது என நம்­பப்­படும் சிதை­வுகள் மொரி­ஷி­யஸின் கிழக்­கே­யுள்ள தீவொன்றில் கரை­யொ­துங்­கி­ யு­ள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
ரொட்­றி­குயஸ் தீவி­லுள்ள ஹோட்­ட­லொன்றில் தங்­கி­யி­ருந்­த­வர்கள் இந்த சிதைவைக் கண்­டு­பி­டித்து அது தொடர்பில் அதி­கா­ரி­க­ளுக்கு அறி­வித்­துள்­ளனர்.



மலே­சிய விமா­ன­சே­வைக் குச் சொந்­த­மான மேற்­படி போயிங் 777 விமா­ன­மானது 2014 ஆம் ஆண்டு 239 பேருடன் மாய­மா­னது.
இந்­நி­லையில் மௌரூக் எபொனி ஹோட்­டலில் தங்­கி­யி­ருந்த ஜீன் டொமி னிக் மற்றும் சுஸி விட்றி ஆகியோர் இந்த சிதைவைக் கண்­டு­ பி­டித்து அது தொடர் பில் பிராந்திய அதி­கா­ரி­க­ளுக்கு அறி­வித் ­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
இதற்கு முன் மொஸாபிக் கடற்­கரைப் பிராந்­தி­ய­மொன்றில் கண்­டு­பி­டிக்­கப்பட்ட சிதை­வுகள் மலே­சிய எம்.எச். 370 விமா­னத்­துக்­கு­ரி­யன என அவுஸ்திரேலிய போக்குவரத்து அமைச்சர் டரென் செஸ்டர் கடந்த வாரமே உறுதிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 








 'பனாமா பேப்பர்ஸ்' கசிவு : உலகமே வியப்பில் 

05/04/2016 உலகம் முழுவதும் வாழும் அரசியல் தலைவர்கள் , திரைப்பட  நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் என பல பிரபலங்கள்  தங்கள் கணக்கில் வராத சொத்துக்களை பனாமா நாட்டில் எவ்வளவு பதுக்கி வைத்திருக்கிறார்கள், எப்படி எல்லாம் வரி ஏய்ப்பு செய்துள்ளார்கள் என்ற தகவல் இன்று கசித்துள்ளதால் உலகமே பெரும் பரபரப்பில் உள்ளது.
'பனாமா பேப்பர்ஸ்' என்ற பெயரால் அறியப்படும் இத்தாள்,விக்கிலீக்ஸ் போன்ற ஒரு தகவல் கசிவு விவகாரமாகும் .
மொஸாக் ஃபொன்செகா என்ற சட்ட நிறுவனமானது பனாமா நாட்டில் இயங்கி வந்துள்ள நிலையில் அந்நிறுவனத்திலிருந்தே இத்தகவல்கள் கசிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பல தசாப்தங்களாக இந்நிறுவனமே இம் மோசடி நடவடிக்கைகளை மிகவும் துல்லியமாகவும் ராஜ தந்திரத்துடனும்  ரகசியமாக தமது வாடிக்கையாளர்களுக்காக முன்னெடுத்துள்ளது. இந்நிறுவனம் தமது வாடிக்கையாளர்கள்  வரி ஏய்ப்பு செய்யவும்  சொத்துக்களை பதுக்கவும் உதவியுள்ளது.
இந்த தகவல் கசிவின் பின்னணியில் பல சர்வதேச ஊடகங்களின்  புலனாய்வு ஊடகவியலாளர்கள் இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
சர்வதேச கூட்டியக்கம் (International Consortium of Investigative Journalism) என்ற வொஷிங்டன்னை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் புலனாய்வு இதழியலாளர்கள் நேற்று  'பனாமா பேப்பர்ஸ்' என்ற தலைப்பில் பல தகவல்களை உலகிற்கு அம்பலப்படுத்தியுள்ளது.



  
இதில் , 11.5 மில்லியன் தகவல் தரவுகளைத் திரட்டியுள்ளதும் அது  சுமார் 2.6 டெரா பயிட்களாகும்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் புலனாய்வில் 140 அரசியல் புள்ளிகளின் வரி ஏய்ப்பு, பண பதுக்கல் அம்பலமாக்கியிருக்கிறதுடன் ,இந்த பட்டியலில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் முதல் பார்சிலோனா கால்பந்து வீரர் லியோனல் மெஸி வரை பலர் இதில் இடம்பெற்றிருக்கின்றனர். 
புடினுக்கு நெருக்கமானவர்களால் ஒரு ரஷ்ய வங்கி, பில்லியன் டாலர்கள் அளவுக்கு பணத்தை முறைகேடு செய்ததில் ஈடுபட்டிருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாகவும்,  இந்த ஆவணங்கள்  மூலம் சுட்டிக்காட்டுகின்றன.
வெளியாகிய இந்த தகவலில் எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக், லிபியாவின் முன்னாள் தலைவர் கடாஃபி, சிரிய அதிபர் பஷர் அல் அஸாத் ஆகியோரது குடும்பத்தினர் மற்றும் நெருக்கமானவர்களோடு தொடர்புடைய ரகசிய வெளிநாட்டு நிறுவனங்கள் குறித்த ஆவணங்களில் இருக்கின்றமையும் குறிப்படத்தக்கது.
இதில் அடங்கியுள்ள  140 அரசியல் பிரபலங்களில் 12 பேர் தற்போதும், முன்னாள் தலைவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில்  இந்தியர்கள் பெயரும் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.





   
பிரிட்டனில் நான்கு நிறுவனங்களை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் குடும்பத்தினர் நடத்தி வருவதாகவும், இந்த நிறுவனங்களின் மூலம் ஏராளமான சொத்துக்கள் வாங்கி வைத்துள்ளதாகவும் இவ் ஆவணங்களில் கூறப்பட்டுள்ளன. 
ஆனால்,மொசாக் ஃபொன்செக நிறுவனம் , தாங்கள் 40 ஆண்டுகளாக இயங்கிவருவதாகவும் ஒருபோதும் இத்தகைய மோசடி குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டதில்லை என்றும் கூறியிருக்கிறது.
இத் தகவல் கசிவு குறித்து முனிச் நகரில் இருந்து செயல்படும் சுடட்சே ஜெய்துங் (Sueddeutsche Zeitung) என்ற நாளிதழின் நிருபர் பாஸ்டியன் ஓபர்மேயர் கூறும்போது, "அடையாளத்தை வெளியிடாத விரும்பாத  உள்வட்டாரம் ஒன்று எங்களுக்கு இத்தகவலை வழங்கியது. அவர்கள் இதற்காக பண  ஏதும் எதிர்பார்க்கவில்லை. ஆயினும் , எவ்விதத்திலும் தங்கள் அடையாளம்  வெளியாகிவிடக்கூடாது என்பதை மட்டும் தம்மிடம் வலியுறுத்தினர்" என்றார்.






பனாமா பேப்பர்ஸ் தகவல் கசிவு உலக மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவரும் நிலையில், பனாமா நாட்டு அதிபர் ஜூவான் கார்லஸ் வெரெலா , "பனாமா நிதித் துறையில் எவ்வித முறைகேடுக்கும் இடமில்லை என்பதில் உறுதியாக இருக்கிறோம். தற்போது கசிந்துள்ள ஆவணங்கள் தொடர்பாக முழுமையான நீதி விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் எதிர்வரும் மே மாத ஆரம்பத்தில் நிதி மோசடிக்காரர்கள் அனைவரின் விபரங்கள் வெளியிடப்படுமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.    நன்றி வீரகேசரி 






உலகத்தையே உலுக்கிய பனாமா ஆவணங்கள் ; விசாரணை தீவிரம்
05/04/2016 உலகத்தையே உலுக்கிய பனாமா ஆவணங்கள் கசிவால்  சர்வதேச அளவில் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரன் பணச்சலவையில் ஈடுபட்டவர்கள் குறித்த விசாரணைகளை தீவிரமாக மேற்கொள்ளுமாறு  உத்தரவிட்டுள்ளார்.
நேற்று  பனாமாவின் சட்ட நிறுவகத்தின் 11 மில்லியன் இரகசிய ஆவணங்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதில் உலகில்  70க்கும் மேற்பட்ட நாடுகளின் முன்னாள் மற்றும் தற்கால அரச தலைவர்கள் ,பிரபலங்கள் மற்றும் கோடீஸ்வரர்கள், சட்டவிரோதமாக தாங்கள் ஈட்டிய பணத்தின் விபரங்கள் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கசிந்த பனமா ஆவணங்களில் எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் ,லிபியாவின் முன்னாள் தலைவர் மொவுமுர் கடாபி மற்றும் சிரியாவின் ஜனாதிபதி பசீர் அல் அசாட் உள்ளிட்டவர்களின் பெயர்களும்  மேலும் இந்தியாவின் நடிர்களான அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா ராய் போன்றவர்களின் பெயர்களும் இதில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால்  இந்தியாவிலும் இது அரசியல் ரீதியான பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு , இது குறித்த விசாரணைகளை நடத்துமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் உத்தரவிட்டுள்ளார்.     நன்றி வீரகேசரி





மதுபானங்கள் விற்பனை செய்ய முழு தடை
07/04/2016 இந்தியாவில் குஜராத், நாகாலாந்து, மிசோரம் மாநிலங்களை தொடர்ந்து நான்காவதாக பீகாரிலும் அனைத்து வகையாக மதுபானங்கள் விற்பனை செய்வதற்கு முழு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பீகார் மாநிலத்தின் முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். 
நேற்று முதல் பூரண மதுவிலக்கு அமுல்படுத்தப்படுவதாக பீகார் அரசு அறிவித்துள்ளது. 
ஹோட்டல் மற்றும் பார்களில் இனி மதுவிற்பனை செய்ய அனுமதி இல்லை .அதன்படி பீகார் மாநிலத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு  மற்றும் நாட்டு மதுபானங்கள் விற்பனை செய்ய முழுவதுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. 

எனினும் இராணுவ சிற்றுண்டிச்சாலைகளில் மதுவிற்பனை தொடரும் எனவும் பீகார் அரசு அறிவித்துள்ளது. 

நன்றி வீரகேசரி










பயங்கர தீ விபத்து : 86 பேர் பலி, 350 காயம்


10/04/2016 கேரளத்தின் கொல்லம் பகுதியில் உள்ள பராவூர் கோவிலில் இன்று அதிகாலையில் 3.30 மணியளவில்  பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 86 பேர் உயிரிழந்தனர். 350 ற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். 
இந்த பயங்கர விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
மேலும் இச் சம்பவத்தில் கோவிலுக்கு சொந்தமான கட்டடம் முற்றிலும் சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது. 
கோவில் திருவிழாவின் போது பட்டாசுகள் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. விபத்து நிகழ்ந்த பகுதிக்கு கேரள மாநில முதல்வர் உம்மன் சாண்டி விரைந்துள்ளார். 

தீவிபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா தெரிவித்துள்ளார்.    நன்றி வீரகேசரி









உண்மையை ஒப்புக்கொண்டார் பிரித்தானிய பிரதமர் : பதவிவிலக எதிர்க்கட்சி அழுத்தம்


பிரித்­தா­னிய பிர­தமர் டேவிட் கமெரோன் தனது காலஞ்­சென்ற தந்­தையின் வெளி­நாட்­டி­லான முத­லீட்டு நிதி­யி­லி­ருந்து வரு­மா­னங்­களைப் பெற்­ற­தாக ஒப்புக் கொண்­ட­தை­ய­டுத்து பதவி வில­கு­வ­தற்­கான கடும் அழுத்­தத்தை எதிர்­கொண்­டுள்­ள­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.

பிரித்­தா­னிய பிர­தமர் 'ஐ.ரி.வி' தொலைக்­காட்சி சேவைக்கு வியா­ழக்­கி­ழமை இரவு அளித்த பேட்­டியின் போது, தான் 2010 ஆம் ஆண்டு பிர­த­ம­ராக பத­வி­யேற்­ப­தற்கு முன்னர் பஹ­மாஸை அடிப்­ப­டை­யாகக் கொண்ட பிள­யர்மோர் நம்­பிக்கை நிதி­யத்தில் தனது மறைந்த தந்தை அயன் கமெ­ரோ­னிற்கு உடை­மை­யாக இருந்த பங்­கு­க­ளி­லி­ருந்து வரு­மா­னத்தைப் பெற்றுக் கொண்­டுள்­ளதை ஒப்புக் கொண்­டுள்ளார்.
பனா­மாவை அடிப்­ப­டை­யாகக் கொண்ட மொஸாக் பொன்­ஸேகா நிறு­வ­னத்­தி­ட­மி­ருந்­தான 'பனாமா பேப்பர்ஸ்' இர­க­சிய ஆவணக் கசிவில் பெயர் குறிப்­பி­டப்­பட்­டுள்ள பல்­லா­யி­ரக்­க­ணக்­கா­னோரில் அயன் கமெ­ரோனும் ஒரு­வ­ராவார்.
பனாமா பேப்பர்ஸ் ஆவணக் கசி­வா­னது உல­கி­லுள்ள செல்­வந்­தர்­களும் அதி­கா­ரத்­தி­லுள்­ள­வர்­களும் வரி ஏய்ப்புச் செய்யும் முக­மாக வெளி­நாட்டு நிறு­வ­னங்­களில் தமது செல்­வத்தை மறைத்து வைத்­த­தாக தெரி­விக்­கி­றது.
எனினும் தான் பத­வி­யேற்­ப­தற்கு 4 மாதங்­க­ளுக்கு முன்னர் அந்தப் பங்­கு­களை விற்று விட்­ட­தாக டேவிட் கமெரோன் கூறினார்.
“நாங்கள் பிள­யர்மோர் முத­லீட்டு நம்­பிக்கை நிதி­யத்தில் 5,000 பங்­கு­களை உடை­மை­யாகக் கொண்­டி­ருந்தோம். அவற்றை நாம் 2010 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் விற்­று­விட்டோம். அதன் பெறு­மதி சுமார் 30,000 ஸ்ரேலிங் பவு­ணாகும்" என கமெரோன் கூறினார்.
நான் எனக்குக் கிடைத்த வரு­மா­னங்கள் தொடர்பில் வரு­மான வரியைச் செலுத்­தி­யுள்ளேன். அதில் மேல­தி­க­மாக ஒரு இலாபம் கிடைத்­தது. ஆனால் அது மூல­தன வரு­மான வரி கொடுப்­ப­னவை விடவும் குறை­வாக இருந்­ததால் நான் அதற்கு வரி செலுத்­த­வில்லை" என கமெரோன் தெரி­வித்தார்.
டேவிட் கமெரோன் வியா­ழக்­கி­ழமை இரவு வரையும் தனது தந்­தையின் பங்­கு­க­ளி­லி­ருந்து தான் வரு­மானம் எத­னையும் பெற­வில்லை என வலி­யு­றுத்தி வந்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.
இந்­நி­லையில் டேவிட் கமெ­ரோனின் இந்த அதி­ரடி அறி­விப்பு குறித்து அந்­நாட்டு தொழிற் கட்சி பிரதித் தலைவர் ரொம் வாட்ஸன் கூறு­கையில் மேற்­படி பங்கு வரு­மா­னங்­களைப் பெற்று வந்­தமை தொடர்பில் டேவிட் கமெரோன் பதவி விலக வேண்டும் என அழைப்பு விடுத்­துள்ளார்.

பனாமா பேப்பர்ஸ் ஆவணக் கசிவில் பெயர் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்த ஐஸ்லாந்து பிரதமர் சிக்மன்டர் கன்லாகுஸன் ஏற்கனவே பதவி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அந்த ஆவணங்களில் உலக நாடுகளைச் சேர்ந்த 12 தற்போதைய மற்றும் முன்னாள் தலைவர்களும் ஏனைய 143 அரசியல்வாதிகளும் பெயர் குறிப்­பி­டப்­பட்டுள்­ள­னர்.   நன்றி வீரகேசரி