போதைவஸ்து கடத்தல் தொடர்பில் ஈரானிய கிராமத்திலுள்ள அனைத்து ஆண்களுக்கும் மரணதண்டனை நிறைவேற்றம்
இலங்கை தூதரகம் இன்று முற்றுகை
கற்பை காப்பாற்றி கொள்ள தனக்கு தானே தீ வைத்துக்கொண்ட சிறுமி : அதிர்ச்சி செய்தி
அகதிகள் மீது பொலிஸார் தாக்குதல்
பேஸ்புக் நிறுவனத்தின் துணைத் தலைவர் கைது
MH370 விமானத்தின் பாகம் கண்டுபிடிப்பு : அமெரிக்கா அறிவிப்பு
போதைவஸ்து கடத்தல் தொடர்பில் ஈரானிய கிராமத்திலுள்ள அனைத்து ஆண்களுக்கும் மரணதண்டனை நிறைவேற்றம்
29/02/2016 ஈரானிய கிராமமொன்றிலிருந்த அனைத்து ஆண்களுக்கும் போதைவஸ்துக்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுக்களின் கீழ் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக மனித உரிமைக் குழுவொன்று தெரிவிக்கிறது.
அந்நாட்டின் பெண்கள் மற்றும் குடும்ப விவகாரத்துக்கான உப தலைவரான ஷஹின்தோகத் மொலாவெர்டி தெரிவிக்கையில், சிஸ்டான் மற்றும் பலுசிஸ்தான் பிராந்தியத்திலுள்ள கிராமமொன்றைச் சேர்ந்த ஆண்களுக்கே போதைவஸ்து கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இவ்வாறு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதாக கூறினார்.
அந்த ஆண்கள் அனைவருக்கும் ஒரேசமயத்தில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதா அல்லது வெவ்வேறு கால கட்டத்தில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதா என்பது அறியப்படவில்லை.
உலகில் அதிகளவு மரணதண்டனைகளை நிறைவேற்றும் நாடுகள் பட்டியலில் இரண்டாவது இடத்திலுள்ள ஈரானில் நிறைவேற்றப்படும் மரணதண்டனைகளில் மூன்றில் இரு மடங்கானவை போதைவஸ்து கடத்தலுடன் தொடர்புபட்டவை என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வருடத்தில் அந்நாட்டில் நிறைவேற்றப்பட்ட 947 தூக்குத் தண்டனைகளில் சுமார் 600 தண்டனைகள் போதைவஸ்துக் கடத்தலுடன் தொடர்புபட்டவையாகும்.
அதேசமயம் அந்நாட்டில் இந்த வருடத்தில் 31 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட் டுள்ளதாக மனித உரிமைக் குழுவான றிப் பிறைவ் தெரிவிக்கிறது. நன்றி வீரகேசரி
இலங்கை தூதரகம் இன்று முற்றுகை
29/02/2016 இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு ள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யக்கோரி சென்னையில் உள்ள இலங்கை தூதரக அலுவலகத்தை மீனவர்கள் முற்றுகையிட்டு இன்று போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள இராமேஸ்வரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் பகுதிகளை சேர்ந்த 27 மீனவர்களையும், 79 படகுகளையும் விடுவிக்க வேண்டும். இலங்கை நீதிமன்றம் விடுவித்து கடலில் மூழ்கி சேதமடைந்த 18 படகுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளுக்கு மத்திய–மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக இன்று சென்னையில் உள்ள இலங்கை தூதரக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த மீனவர்கள் முடிவு செய்துள்ளனர். இதில் பங்கேற்பதற்காக இராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன் ஆகிய பகுதிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மீனவர்கள் இப் போராட்டத்தில் கலந்துக்கொள்ள சென்னைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
கற்பை காப்பாற்றி கொள்ள தனக்கு தானே தீ வைத்துக்கொண்ட சிறுமி : அதிர்ச்சி செய்தி
01/03/2016 ஐ.எஸ். தீவிரவாதிகளிடமிருந்து தன்னுடைய கற்பை காப்பாற்றிக் கொள்வதற்காக தனக்கு தானே தீ வைத்துக் கொண்ட ஒரு சிறுமியை பற்றிய அதிர்ச்சி செய்தி வெளியே கசிந்திருக்கிறது.
ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி தங்கள் வசம் வைத்துள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள், உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறார்கள்.
ஐ.எஸ் தீவிரவாதிகள், ஈராக்கின் வடக்கு பகுதியில் யாஷ்டி இனத்தைச் சேர்ந்த ஆண்களை கொன்றுவிட்டு, பெண்களை வலுக்கட்டாயமாக கொண்டு சென்று தங்களுடைய பாலியல் அடிமைகளாக பயன்படுத்தி வருகிறார்கள்.
சில வருடம் கழித்து அந்த பெண்களை மற்றவர்களுக்கு அடிமைகளாக விற்று விடுகிறார்கள். ஏராளமான சிறுமிகள் மற்றும் பெண்கள் அவர்களிடம் அடிமை வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், அவர்களிடமிருந்து சுமார் 1100 பெண்கள் சமீபத்தில் மீட்கப்பட்டனர். அவர்கள் தற்போது ஜெர்மனியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் மூலம் சில அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, ஐ.எஸ்.தீவிரவாதிகளிடம் சிக்கி பல பெண்களின் வாழ்க்கை சீரழிந்திருப்பதாக அவர் கூறினார். அதில் குறிப்பாக, அவர்களிடம் சிக்கிய 8 வயதே நிரம்பிய ஒரு சிறுமி, பலமுறை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு அதன்பின் விற்கப்பட்டிருக்கிறாள் என்றும், அவர்களிடமிருந்து தப்பித்துக் கொள்ள அந்த சிறுமி தன்னைத தானே தீ வைத்துக் கொண்டதாகவும், இதனால் அந்த சிறுமி 80 சத வீத தீக்காயங்களுடன் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி
அகதிகள் மீது பொலிஸார் தாக்குதல்
01/03/2016 பிரான்ஸ் நாட்டில் கலே பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த அகதிகளின் குடியிருப்புக்களை அகற்றச்சென்ற பொலிஸாருக்கும் அகதிகளுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டதால் பதற்ற நிலை உருவாகியுள்ளது.
சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களை அகதி மக்களின் எதிர்ப்பையும் மீறி பொலிஸ் அகற்ற முற்பட்ட வேளையில் இந்த குழப்பநிலை ஏற்பட்டது.
இதன்போது, அகதிகள் பொலிஸார் மீது கற்பிரயோகத்தை மேற்கொண்டதிற்கு எதிராக அவர்கள் மீது கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் தாரை பிரியோகித்தனர்.
மேலும் 23 அகதிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நன்றி வீரகேசரி
பேஸ்புக் நிறுவனத்தின் துணைத் தலைவர் கைது
03/03/2016 முதன்மை சமூக வலைத்தளமான பேஸ்புக் நிறுவனத்தின் இலத்தீன் அமெரிக்க பிரிவின் துணைத் தலைவர் டியாகோ சோடன் (Diego Dzodan) பிரேஸில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பேஸ்புக் நிறுவனத்தின் வட்ஸ் எப் மெசெஞ்சர் ஊடாக போதை பொருள் விற்பனை தொடர்பாக பரிமாற்றப்பட்ட தகவல்களை பொலிஸாருக்கு வழங்க மறுத்த குற்றசாட்டிலேயே இவர், கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கொள்கையின் அடிப்படையில் தனக்கு அந்த தகவல்களை வழங்க முடியாது என டியாகோ சோடன் கைது செய்யப்பட்ட பின்னர் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.
அதேவேளை இக்கைது தொடர்பில் பேஸ்புக் நிறுவனம் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
MH370 விமானத்தின் பாகம் கண்டுபிடிப்பு : அமெரிக்கா அறிவிப்பு
03/03/2016 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் திகதி 12 ஊழியர்களுடனும் 227 பயணிகளுடனும் மலேசியாவிலிருந்து பீஜிங் நோக்கி பயணித்த எம் எச் 370 விமானம் காணாமல் போயிருந்த நிலையில் அதன் பாகங்கள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஆபிரிக்காவில் இருந்து குறித்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
போயிங் 777 என்ற ரக விமாமொன்றின் பாகமொன்றை ஆபிரிக்க நாடான மொஸாம்பிக்கில் கண்டெடுத்ததாக மலேஷியாவும் உறுதிப்படுத்தியுள்ளது.
குறித்த பாகம் எம் எச் விமானத்தினுடையது என்பதற்கு உயர் சாதகத்தன்மைகள் காணப்படுவதாக
எம் எச் 370 விமானமும் போயிங் 777 என்ற ரகத்தை சார்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி