ஏனையவர்களிருந்து கார்த்திகா வேறுபாடும் விதம் - 11 - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்

.
எல்லாளன் - காமினி


எனது நாட்டியப் பணியின் மூலம் சமுதாய விழிப்பை ஏற்படுத்த வல்ல நல்ல கருத்துக்களை கலை வடிவத்தில் வழங்க வேண்டும் என விரும்பினேன்.

1976 இரண்டே இனம் வாழும் இலங்கையில் ஒரு நெருக்கடி நிலை உருவாக்கி கொண்டிருந்ததை நாம் எல்லாரும் உணர்ந்த காலமது. இந்நிலைமையை வளரவிடக் கூடாது என சிந்திதவர்களில் நாமும் அடங்குவோம் (நானும் எனது கணவரும்) பேராசிரியர் இந்திரபாலாவுடன் கலந்துரையாடியத்தின் விளைவாக எல்லாளன் - காமினி நாட்டிய நாடகம் உருவானது. நாடக முக்கிய நிஜ பாத்திரம்கள் தவிர கற்பனா பாத்திரங்களும் சம்பவங்களும் என் பொறுப்பே.

நாட்டிய நாடகம் பற்றி "ரூபன்" சிங்கள நாடக அரங்கக் கலைக்கான சஞ்சிகையில் எழுதப்பட்டது. தமிழாக்கம் தினகரன் வார மஞ்சரி.

May 16, 1976 வெளிவந்தது.



"புதியதொரு  சமுதாயம் படைப்பதற்குத் தடையை உள்ளதும், வாழையடி வாழையாக வரும் சந்தர்பவாத மரபினரால் வளர்ந்து வரும் இனத்துவேஷத்தின் தொலை உரிக்கவும், இனம் பிரிக்கும் போக்கைக் கண்டிக்கவும் முன் வந்துள்ளார் கார்த்திகா. இதற்கென காமி-எல்லாளன் கதையை டுத்துளார். இனத்துவேஷ கருத்துகள் எம்மிடையே பரவியுள்ளதை நேரில் பார்க்க மறுப்பதும், அதனால் எமது புற வேற்றுமைகளுக்கு அப்பால் உள்ள மனிதனால் அடிப்படை ஒற்றுமையை காண முடியாமையும் நாம் தரிசிக்க வேண்டும் என கார்த்திகா சரியாகவே கருதுகிறார்.
இந்நிலையில் நாம் உணர்ச்சி வசப்பட்டுத் தப்பித்துக் கொள்ளாமல், பிரச்சனைகளுக்கு நேருக்கு நேர் முகம் கொடுத்து, எம்முடையே உள்ள சான்றோரின் கருத்துக்கள் மூலம் பிரச்சனைகளுக்குத் தீர்வுக்கான வழி கோலுவதே ஏற்றது.

Usha Nathan KAMINI


கார்த்திகா கணேசர் அவர்கள் ஈடுபட்டுவரும் கலை மூலமாக சமூகப்பனியின் மேலும் ஊர் அடியை எடுத்து வைத்துள்ளார். வகுப்பு வாதிகளினால் வரலாறே மாற்றப்பட்டு மக்கள் மத்தியிலே காலாகாலமாக பல சம்பவங்கள் பொய்யான பூசல்கள் மெழுகப்பட்டு வந்துள்ளன. போயின் போர்வையால், மக்கள் நெஞ்சில் இவை நச்சாக பதிந்து போனதால் நாடும் நலிவுற்றது. இதில் காமினி - எல்லாளன் உட்படுத்தப் பட்டதொன்று இரு மன்னர்களையும் வகுப்பு வாதிகளாகவும், நடந்த போரை வகுப்பு வாத அடிப்படையிலான போர் எனவும் தடம் மாற்றி காட்டப்பட்டுள்ளது. இதுவரை காலமும் வரலாற்றரிஞ்சர்களும் கூட உண்மையினை எடுத்து விளக்க முன்வராமை வருந்த வேண்டியதே.

தனது ஒப்பற்ற கலைத்திறன் மூலம், கார்த்திகா கணேசர் அவர்கள் காமினி-எல்லாளன் கதையை மக்கள் முன் படைக்கிறார். சிங்கள தமிழ் மக்கள் யாவருமே ஒரே மனதாக கார்த்திகாவின் துணிச்சலான பணியை பாராட்டியே தீர வேண்டிய தார்மீகக் கடமையுடையவராகின்றனர் என எழுதியது 'ரூபன்' சிங்கள நாடக அரங்கக் கலைகளுக்கான சஞ்சிகை.

நாடு படிப்பதே அன்றைய அரசுகளின், மன்னர்களின் தர்மம். இதை சாதிபதற்கே போர்கள். எல்லாளனும் நாடு பிடித்தான். நடு நிலைமையுடன் ஆண்டான். தொடர்ந்து காமினியும் நாடு பிடிக்க ஆவல் கொண்டான். நடந்தது போர். எல்லாளன் காமினி போர் நடந்தே இருக்கும். இவர்கள் இறந்த பின் எழுதப்பட்ட 'மாவம்சம்' காலத்துக்கு காலம் புதுபித்து எழுதப்பட்ட போதே இந்தப் போர் இனத் துவேஷப் போராக திரித்து எழுதப்பட்டுள்ளது. எல்லாளன் சிங்கள வரதோ, அல்லது  பௌத்தர்களதோ எதிரியல்ல, அவ்வாறே காமினியும் தமிழரது எதிரியல்ல. அவர்கள் இறந்து 2000 ஆண்டுகளின் பின் இன்று இந்த உண்மையை மக்களுக்கு புரிய வைக்க வேண்டிய நிலையில் உள்ளோம். அன்று தமிழ் மன்னர்களும் ஒருவருடன் ஒருவர் மோதினர். ஆனால் தமிழ் மன்னன் எல்லாளன் சிங்கள இளவரசன் காமினியுடன் போர்புரிந்தமை இனவாதமாக திரிக்கப்பட்டுள்ளது.
 
Anantharani Balendra, Usha Nathan
காமினியின் மனப்போக்கை ஈழத்து இரத்தினத்தின் கவிதை சுருக்கமாகவும், ஆழமாகவும் சித்தரின்கின்றது.

அரச" குளத்தில் பிறந்தவர்
நாடு  பிடிப்பது தப்போ அம்மா
அதில் இனம் matham என்றொரு
வேற்றுமை சொல்லி
தடுப்பது முறையோ அம்மா
அவன் தமிழன் என்பதனால்
அவனோடு போராட
கனவிலும் நான்
நினைத்ததில்லை அம்மா
என்தந்தை ஓர் அரசன்
யானோ இளவரசன்
என்பதனால் போர்
வேண்டும் அம்மா"


நாடகத்தின் பீடிகைக் காட்சி வகுப்பு வாதிகளின் வேஷத்தை இனம் காட்டி நாடகத்தின் நோக்கத்தையும் கூறுகின்றது.
“இந்நாட்டின் இரு இனங்களை இரண்டாகப் பிரிப்பதற்கு தம்பாட்டில் கதை அளப்போர்தான் இங்கு வாழுகின்றார். உள்நாட்டின் சரித்திரத்தை உணராமல் உளறுகின்ற மனிதர்களை இன்றோடு மாற்றிவைப்போம்.  இனம் பிரிக்க எல்லாளன் காமினியின் கதை எடுத்து இயம்பியது இதுவரைக்கும் எல்லாற்கும் புரியுமது ஈன மனம் படைத்த மனிதர்களின் இனம்பிரிக்கும் கதை எல்லாம் இன்றோடு மறையட்டும் உண்மையினை நாம் சொல்வோம்.”
தினகரன் வாரமஞ்சரி மே 16 – 1976 எல்லாளன் - காமினி நாட்டிய விமர்சனம். கே. சபாரத்தினம்
விமர்சனத்தின் ஒரு பகுதி கார்த்திகா கணேசர் புரிந்து வரும் சமூகத் தொண்டு
இன்று மிகவும் பிரச்சனைக்குரியதாகக் கருதப்பட்ட பல காலமாக வகுப்பு வாதிகளால் தவறாக வியக்கியானம் செய்யப்பட்டு வந்த எல்லாளன் - காமினி வரலாற்றை, உண்மை துணையுடன் நாட்டிய மாக்கியுள்ளார் திருமதி கார்த்திகா. இதன் காட்சி அமைப்பும், உடை ஒப்பனை அலங்காரமும், ஆடிய பெண்களின் அற்புத நடிப்பும், கார்த்திகா என்கிற ஒப்பற்ற இயக்குனரின் திறமையை வெளியிட்;டது ஒருபுறம் இருக்க நாட்டிய நாடகம் மக்களிடையே ஏற்படுத்திய தாக்கம் பிரமிக்கத்தக்கது.
இந்த நாடகத்தை பலதரப்பட்டோர் பார்க்க வந்தனர். சபையோரை நோக்கிய போது வரவேற்று வாழ்த்த வந்தோரை விட, ஒரு வித தயக்கத்துடனும், குழப்பிய மனதுடனும் வந்தவரே பலர். ஆனால் நாடகம் முடிந்து வெளிவரும் போது, அதிஷ்டவசமாகப் பெரும் மழை பெய்தது. இதனால் யாவரும் மண்டபவாயிலில் குழுமி நின்று நாடகம் பற்றி அளவளாவ நிர்ப்பத்திக்கப்பட்டனர். யாவரும் உற்சாகமாக மனம்விட்டு அதன் கருவையும் விமர்சித்தமையை நாம் கண்ணாரக் கண்டபோதுதான் இந் நாட்டிய நாடகத்தின் பாரிய பணியினை நாம் பூரணமாக உணர முடிந்தது. எந்த எண்ணத்தோடு இந்நாடகம் மக்கள் முன் அரங்கேற்றப்பட்டதோ, அந்த எண்ணம் முற்றாக மக்களிடையே சென்றடைந்துள்ளதை மண்டபம்முன் நடைபெற்ற அபிப்பிராய வெளியீடுகள் காட்டின.
அனைவரும் தொட அஞ்சிய, தொட எண்ணாத ஒரு பிரச்சினையைத் துணிந்த எடுத்து, ஒப்பற்ற கலைப் படைபபாக்கி நான் சொல்ல வந்த எண்ணத்தை அப்படியே பார்வையாழர் மனதில் ஏற்படுத்திய கார்த்திகாவின் துணிவை, திறமையை, சமூகப் பிரக்ஞையை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
THE SUNDAY OBSERVER MAY 30, 1976
REVIEW – ELARA – GAMINI
T. MAHADEVEN

விமர்சனத்தின் ஒரு பகுதி

NEW INTERPRETATION IN BALLET
Perhaps the most misinterpreted event in our long history is the encounter between Elara and  Duttha gamini ......,
Just is the Anuradhapura Kingdom was expanding in the North at the expense of the weak. Neighbourse. There was another kingdo based at Mahagama in the South which was also busy sub jugating several chieftaincies
This was the natural process in the evalution of large kingdoms in ancient time. As the Anuradapura and the Mahagama kingdom were growing in this manner. A final debacle between the two was inevitable. This is what happen when Elara was reigning Anuradhapura and Duthagamini was in control of Ruhuna
At the Lionel Wendt Theater on the Pre – republic day in the presence of a large gathering the ballet succeeded in conveing the above interpretation and proved that the theatre is one of the best means of educating and maturing our emotional responses to life, and especially to other people. Karthiga Kanesar deserves to be congratulated for selecting this theme for a ballet, and exploding the myth of communalism through the mediam of art.
The success of Karthiga as appears to me lies in her creative approach which would have helped her to identify the inherent flaws in the dance – dramas produced so far. And her adopting the correct solutions through original choreographic techiniques in Elara Gamini she has been making further advance in terms of quality, craftsmanship and artistic finesses.
There was never a dull moment. The dramatic element was kept alive by judicious synthesis of the indigenous dances with the classical forms such as Kathahali and Bharata Natyams.

தினகரன் வாரமஞ்சரி – ஞாயிறு யூன் 6, 1976. கே. எல். சிவகுமாரன்
கார்த்திகா கணேசரின் எல்லாளன் - காமினி பற்றி அவதானிப்பு முத்துசாமி ஈழத்து ரத்தினம் - கார்த்திகா கணேசர் ஆகியோரின் ஒத்துழைப்புடன் மேடையேறியது.  காமினியாக உஷா நாதன். எல்லாளனாக தழபதியா சிவஞ்சவி பசுபதி.  எல்லாளன் நிருபர் – நடறாஜா.  விகார மகாதேவி – ஆனந்தராணி ராஐரத்தினம் (பாலேந்திரா) பாத்திர பொருத்தமுடன் திறமையாக ஆடினார்கள். நாட்டியத்தின் நோக்கம் சிறப்புடையது, வரவேற்ற வேண்டியதே.