.
மெல்பனில் பெண்ணிய கருத்துக்கள் சங்கமித்த அகில உலக பெண்கள் தினவிழா
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் அகில உலகப்பெண்கள் தினவிழா கடந்த 6 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மெல்பனில் பிரஸ்டன் நகர மண்டபத்தில் சங்கத்தின் தலைவர்
பேராசிரியர் ஆ.சி. கந்தராஜாவின் தலைமையில் நடந்தது.
சங்கத்தின் துணைச்செயலளார் திருமதி சாந்தினி புவனேந்திரராஜா ஒருங்கிணைத்த
நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
திரு. கணநாதன், திருமதி சகுந்தலா கணநாதன் தம்பதியினர் மங்கல விளக்கேற்றி நிகழ்ச்சிகளை தொடக்கிவைத்தனர்.
திரு. நாகராஜாவின் வாழ்த்துப்பாடலும்
கலைஞர் சந்திரசேகரத்தின் நடனமும் இடம்பெற்றது.
கவிஞர் கல்லோடைக்கரன் தலைமையில் கவியரங்கும், ரேணுகா சிவகுமாரன் தலைமையில் விவாத அரங்கும் திருமதி சாந்தினி புவேனேந்திரராஜா தலைமையில் கருத்தரங்கும்
திரு. லெ. முருகபூபதியின் தலைமையில் நினைவரங்கும் இடம்பெற்றன.
நினைவரங்கில் அண்மையில் மறைந்த பெண்ணிய படைப்பாளிகள் அருண். விஜயராணி
நினைவுரையை திருமதி சகுந்தலா பரம்சோதிநாதனும், தமிழினி நினைவுரையை திரு. தெய்வீகனும் நிகழ்த்தினர். தமிழக காலச்சுவடு பதிப்பகத்தின் சமீபத்திய வெளியீடான தமிழினியின்
தன்வரலாற்று நூல் ஒரு கூர்வாளின் நிழலில் பற்றிய அறிமுகமும் நினைவுரையில் இணைந்திருந்தது.
படைப்பாளி ஜே.கே., எழுதி
இயக்கிய அசோகவனத்தில் கண்ணகி என்ற வித்தியாசமான நாடகத்துடன் நிறைவெய்திய பெண்கள் தின விழாவில் சங்கத்தின் உறுப்பினர் திருமதி மாலதி முருகபூபதி நன்றி நவின்றார்.
===0====