.
இந்திய சினிமாவில் எப்போதும் தொடர்ந்து தரமான படங்களை கொடுப்பதில் மலையாள சினிமாவிற்கும் பெரும் பங்கு உள்ளது. அந்த வகையில் மலையாள இயக்குனர் ஜோ மேத்யூ இயக்கத்தில் வெளிவந்த ஷட்டர் படத்தின் ரீமேக் தான் இந்த ஒரு நாள் இரவில்.
இத்தனை நாட்கள் எந்திரன், சிவாஜி, காக்க காக்க, என்னை அறிந்தால் என பல பிரமாண்ட படங்களை எடிட் செய்து வந்த ஆண்டனி முதன் முறையாக இப்படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்.
கதைக்களம்
எந்த ஒரு பிரச்சனையையும் நிதானமாக யோசித்தால் நல்ல விடை கிடைக்கும், அப்படியிருக்க எடுத்தோம் முடித்தோம் என்றால் பட்ட பிறகு தான் புத்தி வரும் என்பதை சீட்டின் நுனிக்கு ரசிகர்களை இழுத்து கொண்டு வரும் திரைக்கதையின் மூலம் இயக்குனர் கூறியிருக்கிறார்.
சத்யராஜ் சிங்கப்பூரில் நன்றாக சம்பாதித்து சென்னையில் செட்டில் ஆகிறார், தன் மகள் நண்பர்களுடன் பேசுவதை படிப்பறிவில்லாத சத்யராஜ் தவறாக நினைத்துக்கொண்டு அவசர அவசரமாக படிக்கின்ற தன் மகளுக்கு திருமண ஏற்பாடு செய்கிறார். அப்போது தன் மனைவியுடன் ஏற்படும் தகராறில் அவரை அடித்து கோபமாக வீட்டை வீட்டு வெளியேறுகிறார் சத்யராஜ்.
இதற்கிடையில் சிங்கப்பூருக்கு செல்ல வேண்டும் என்று சத்யராஜ் சொல்லும் அனைத்து வேலைகளையும் செய்து வரும் ஆட்டோக்காரர்வருண். இவர் ஆட்டோவில் ஏறும் பீல்ட் அவுட் இயக்குனர் யூகிசேது தான் எழுதிய கதையை அந்த ஆட்டோவில் விடுகிறார். அந்த கதையை சத்யராஜின் கடையில் வைக்கிறார் வருண்.
பின் சத்யராஜின் கடையில் நண்பர்கள் பேச்சால் தண்ணியடிக்க, அன்று இரவு பாலியல் தொழிலாளியான அனுமோலை பார்த்து ஆசை கொள்கிறார். எங்கும் ரூமிற்கு செல்ல பயந்து தன் கடைக்கே அழைத்து வருகிறார்.
அப்படி வருகையில் அந்த ஆட்டோக்காரர் வருண் இவர்களை உள்ளே வைத்து சாப்பாடு வாங்குவதற்காக பூட்டி வைத்து செல்கிறார்.
அவர் குடித்துவிட்டு வண்டி ஓட்டியதற்காக போலிஸாரிடம் மாட்ட, பின் சத்யராஜ் எப்படி வெளியே வருகிறார், யூகி சேதுவிற்கு தன் திரைக்கதை புத்தகம் கிடைத்ததா? என்பதை மிகவும் சுவாரசியமாக கூறியிருக்கிறது இந்த ஒரு நாள் இரவில்.
படத்தை பற்றிய அலசல்
சத்யராஜ் கட்டப்பாவாக இருந்தாலும் சரி, ஒரு குழந்தைக்கு அப்பாவாக இருந்தாலும் சரி அசத்தி வருகிறார். அதிலும் அந்த ரூமில் மாட்டிக்கொண்டு அருகில் இருக்கும் தன் வீட்டை பயத்துடன் எட்டிப்பார்ப்பது எல்லாம் நான் சீனியர்டா..என்ற காலரை தூக்கி விடுகிறார்.
பாலியல் தொழிலாளியாக வரும் அனுமோல் சத்யராஜின் பதட்டத்தை பயன்படுத்தி பணம் வாங்க, பின் அவர் படும் கஷ்டத்தை உணர்ந்து நான் ஏன் படிக்காமல் தான் இந்த தொழிலுக்கு வந்தேன், உன் குழந்தையை படிக்க வைங்க என்று சத்யராஜிற்கு டார்ச் அடித்து வெளிச்சம் காட்டுவது வரை செம்ம ஸ்கோர் செய்கிறார்.
யூகிசேது தான் படத்திற்கு வசனம் என்பதால் அவர் வரும் காட்சிகள் அனைத்திலும் தன் ஸ்டைலிலேயே டார்க் காமெடி அள்ளி வீசுகிறார், அதோடு மட்டுமில்லாமல் பீல்ட் அவுட் ஆன இயக்குனராக ஒரு ஸ்கிர்ப்ட்டை துளைத்து விட்டு, அவர் படம் கஷ்டம் என நடிக்கவும் செய்திருக்கிறார்.
ஒரே ரூம் இரண்டு இரவு, ஒரு பகல் இதில் இரண்டாம் நாள் இரவில் சத்யராஜ் தன் தவறுகள் அனைத்தையும் உணர்கிறார், தன் நண்பர்கள் அனைவரும் நல்லவர்கள் அல்ல, நம்மை திட்டுபவர்கள் அனைவரும் நமக்கு எதிரிகளும் அல்ல என்பதை மிக அழகாக ஆண்டனி காட்டியுள்ளார்.
நவீனின் பின்னணி இசை படத்தின் பதட்டத்தை இன்னும் அதிகப்படுத்துகிறது, பிரபுவின் ஒளிப்பதிவும் ஒரு சின்ன அறையில் நம்மையும் அந்த டென்ஷனுக்குள் கொண்டு செல்ல வைக்கின்றது.
க்ளாப்ஸ்
படத்தின் திரைக்கதை, அடுத்து என்ன, அடுத்து என்ன என்று நம்மை சீட்டில் கட்டிப்போட வைக்கின்றது, படத்தில் அவ்வப்போது வரும் டுவிஸ்ட். பெண் கல்வி பற்றி ஒரு பாலியல் தொழிலாளி வாயிலாக கூறி அனைவரையும் கைத்தட்ட வைக்கின்றது.
பல்ப்ஸ்
படம் ஆரம்பித்த 20 நிமிடம் கொஞ்சம் கதை எதை நோக்கி செல்கின்றது என்பதே தெரியாமல் இருக்கிறது. மற்றப்படி ஏதும் இல்லை.
மொத்தத்தில் ஒரு நாள் இரவில் சத்யராஜ் மட்டுமில்லை படம் பார்க்கும் அனைவரையும் பதட்டத்துடன் பயணிக்க வைத்ததில்ஆண்டனி வெற்றி பெற்றுவிட்டார்.
ரேட்டிங்- 3.25/5
No comments:
Post a Comment