அயல் நாடுகளுக்கு புலம் பெயர்ந்த தமிழர்களின் இன்றைய நிலை - தி. சுவாமிநாதன்- நாமக்கல்

.

பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் போது, காலனி நாடுகளில் கரும்புத் தோட்டங்களில் தேயிலை தோட்டங்களில் கடுமையாக உழைக்க நிறைய ஆட்கள் தேவைப்பட்டார்கள். நம் நாட்டில் இருந்து இந்தியர்கள் பலர் கப்பலில் அழைத்துச் செல்லப்பட்டனர். பஞ்சம், பொருளாதார சுரண்டல்களிலிருந்து விடுபடும் நோக்கிலும், சுய வேலை தேடியும், கைவினைத் தொழிலாளர்களாக, வியாபாரிகளாக, காலத்துக்குக் காலம் இந்தியர்கள் பல்வேறு காரணங்களுக்காக புலம் பெயர்ந்துள்ளார்கள். இவ்வாறு பிழைக்கச் சென்றவர்கள் 70-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மக்கள் கிராமப்புறங்களிலிருந்து நகர்புறங்களுக்கும் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கும், ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கும் புலம் பெயர்வதற்குப் பல காரணங்கள் உள்ளது. இருப்பினும், பொருள் தேடல், புதிய தொழில் தொடங்குதல், உயர்தர வாழ்க்கை நாட்டம், தரமான கல்வி பெறும் எண்ணம் போன்றவை பொதுவானது. அவ்வாறு சென்றவர்களின் இன்றைய நிலையை தெரிந்து கொள்வது அவசியம். திரைக் கடலோடியும் திரவியம் தேடு என்ற முதுமொழிக்கு ஏற்ப பலநூறு ஆண்டுகளாக உலகம் முழுக்க தன் உழைப்பினை தந்து அந்தந்த நாட்டின் வளர்ச்சிக்கு தூணாய் இருந்தவர்களின் இன்றைய சு10ழல் நாடுகளின் ஜனநாயகத் தன்மைக்கு ஏற்றவாறு உலகம் முழுவதும் இன்பம், துன்பம், மகிழ்ச்சி, துயரம் கலந்தே உள்ளது. கடும் உழைப்பைக் கொடுத்தவர்கள் தங்கள் கலாச்சாரம் மொழி வளத்தை இழந்து விடும் அபாயச் சு10ழல் நிறைந்தது.



உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் நிலை:
கடல்கடந்து ஆயிரம் மைல்களைத் தாண்டி அந்நிய தேசத்தில் வசிக்க நேர்ந்த சு10ழ்நிலையிலும்ää தங்கள் அடையாளங்களைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். பண்பாட்டு சீரழிவிலிருந்து முடிந்த வரை விலகி நிற்கிறார்கள். தங்கள் மரபைக் காப்பாற்றிக் கொள்ள உறுதி காட்டுகின்றனர். மொழிää இன உணர்வு, சமயம், இறை உணர்வு மற்ற நாட்டு கலாச்சார சீரழிவிற்கு இறையாகி விடாமல் தடுக்கிறது. திருமண உறவில்ää குடும்ப அமைப்பில் மரபு ரீதியாக பின்பற்றி வரும் பண்பாடுகளும்ää கலாச்சார பண்புகளும் எந்த நாட்டில் குடியேறினாலும் இந்தியர்களிடையே இன்றும் தொடர்கிறது.
மலேசியாவில் 20 லட்சம் தமிழர்கள் இருக்கிறார்கள். அரசு நிர்வாகத்திலும், தொழில் துறையிலும், ஒரு சில தமிழர்கள் உயர்ந்த அந்தஸ்த்தில் உள்ளனர். மிக குறைந்த கூலிக்கு அபாரமான உழைப்பை ரப்பர் தோட்டங்களில் தந்தவர்கள். மலையைக் குடைந்து ரயில் பாதை அமைத்தார்கள். மலேசியா ஒரு இஸ்லாமிய நாடாக இருந்த போதிலும் இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்துக் கோவில்கள் உள்ளன. கோயில்கள் கட்ட அரசாங்கமே மானியம் தருகிறது. கோலாலம்பூரில் மட்டும் சுமார் ஆறு தியேட்டர்களில் தமிழ்ப்படங்கள் ஓடிய வண்ணமிருக்கும் இன்றைய தழிழ் சந்ததியினர் மலேசியாவை தங்களது சொந்த நாடாக உணருகின்றனர்.
கனடாவில் ஒரு லட்சத்து எழுபதாயிரம் தமிழர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் இலங்கையிலிருந்து சென்ற தமிழர்கள்தான் அங்கே தேர்தலில் கூட போட்டியிடுகின்றனர். டோரண்டோ நகரத்தில் ஹோட்டல்களிலும், கேஸ் ஸ்டேஷனிலும, பெட்ரோல் நிலையங்களிலும் தொழிற்சாலைகளிலும் பரவலாக தமிழர்கள் வேலை பார்க்கிறார்கள். இது தவிர சிறு வியாபார நிறுவனங்கள் பலவும் தமிழர்களால் நடத்தப்படுகிறது. அங்கு தமிழர் உணவகங்கள் நிறைய உள்ளன. சம்பாத்தியத்தில் அறுபது சதவிகிதம் வீட்டு வாடகைக்கே செலவு செய்ய வேண்டியுள்ளது. 10 கோயில்கள் உள்ளன. தொலைக்காட்சியில் தமிழ் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகிறது. தமிழ் பத்திரிக்கைகள் உள்ளன.
நாடு கடந்து வந்து முற்றிலும் புதிய நாட்டில் வாழ முற்படும் போது  அவமானங்கள் துயரங்கள் சோதனைகள், சந்தேகங்கள் மன உலைச்சல் பலவற்றை சந்திக்க வேண்டியுள்ளது யாவருக்கும் பொதுவானதே.
லண்டனில் சுமார் ஒன்றரை லட்சம் தமிழர்கள் வசிக்கிறார்கள். இதில் மிகப் பெரும்பாலோர் டாக்டர்கள், என்ஜினியர்கள், பேராசிரியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், என நல்ல அந்தஸ்த்தில் உள்ளனர். மிகப்பலரும் அரசாங்க உத்தியோகஸ்தர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கத்தாகும். தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் உள்ளன. லண்டனில் ஒன்பது ஹிந்து கோயில்கள் உள்ளன. தமிழர்கள் தங்கள் வீட்டுத் திருமணங்கள் எல்லாவற்றையும் கோவில்களில்தான் நடத்துகின்றனர். தங்களது மரபுää மொழி, கலை, பண்பாடு, ஆன்மீக விஷயங்களில் சுதந்திரமாக செயல்பட எந்த விதத்தடையும் தமிழர்களுக்கு இங்கு இல்லை.
சிங்கப்பூரில் 1.5 லட்சம் தமிழர்கள் உள்ளனர். ஆட்சி மொழிகளில் தமிழும் ஒன்று. எஸ்.ஆர். நாதன் என்ற தமிழர் சிங்கப்பூரின் அதிபராக இருந்துள்ளார். உழைப்பாளர்களாக இங்கு வந்த தமிழர்களில் சலவை தொழிலாளிää முடி திருத்துவோர்ää சமையல்காரர் போன்றோர் நிறைய பேர் சென்றனர். இங்கு சாதாரண வேலை செய்பவருக்;கே 1500 வெள்ளி சம்பளமாகக் கிடைக்கிறது. விடுமுறை வந்தால் பழனி திருப்பதி என்று தமிழகத்திற்கு வந்து செல்லவே தமிழர்கள் விரும்புகிறார்கள். குடும்ப அமைப்பு, பெரியவர்களிடம் மரியாதைää விருந்தினர்களை உபசரிப்பது போன்றவையெல்லாம் தமிழ் நாட்டிலுள்ளவர்களிடமிருந்து சிறிதும் வித்தியாசப் படுத்த முடியாமல் அப்படியே இங்குள்ளது. இங்கு 40 இந்துக் கோவில்கள் உள்ளன. அமைச்சர்களாக தமிழர்கள் உள்ளனர். பாலங்கள் கட்டும் வேலையில் கட்டுமானத் தொழிலாளர்களாக நிறைய தமிழர்கள்  உள்ளனர்.
அமெரிக்காவில் ஏராளமான தமிழர்கள் பரவலாக வசிக்கின்றனர். மருத்துவர்கள், என்ஜினியர்கள், சாப்ட்வேர் என்ஜினியர்கள் ஆயிரக்கணக்கில் அமெரிக்கா சென்ற வண்ணமுள்ளனர். சென்னை ஐ.ஐ.டியில் உயர் தொழில் நுட்பம் படித்த பெரும்பாலானவர்கள் அப்படியே அமெரிக்காவிற்கு வந்து விடுகின்றனர். தகவல் தொழில்நுட்பம் விண்வெளி ஆராய்ச்சித்துறை உள்ளிட்ட பல உயர்ந்த இடங்களில் தமிழர்களின் அறிவாற்றல் கண்டு வியக்கும் நிலை உள்ளது. பல அமெரிக்க நிறுவனங்கள் தகுதிக்கு திறமைக்கு வாய்ப்பு தருகிறது. தமிழ் வகுப்புகள், நடத்தப்படுகிறது. பொங்கல் விழா களை கட்டுகிறது. அமெரிக்காவில் இந்தியர்கள் மீது தனி மதிப்பு மரியாதை உள்ளது. நமது பெண்களைப் போல் பொட்டு வைப்பது இப்போது லேட்டஸ்ட் பேஷனாக உள்ளது. காதில் தோடு, கையில் வளையல் அணிவது, காலில் கொலுசு போட்டுக் கொள்வது என்று நம்மைப்பார்த்து அமெரிக்கர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். அமெரிக்காவில் நூற்றுக்கும் மேற்பட்ட ஹிந்துக் கோவில்கள் உள்ளன.
ஆஸ்திரேலியாவில் ஐம்பதாயிரம் தமிழர்கள் உள்ளனர். பிரிட்டிஷ் காலணியாதிக்கத்தின் போது தமிழர்கள் கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்டனர். கரும்பு மற்றும் வாழைத் தோட்டங்களில் கூலிகளாக வேலைக்கு அமர்த்தப்பட்டார்கள். இங்குள்ள  தமிழர்கள் சொந்த வீடு மற்றும் சொத்துள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விடுமுறை நாட்களில் தமிழ் வகுப்புகள் நடத்தப்படுகிறது. காதலுக்கு எதிர்ப்பு காட்டுவதில்லை. பிரமாண்டமான இந்துக் கோவில்கள் ஆஸ்திரேலியாவில் நிறைய உள்ளது.  
அரபு நாடுகளில் சுமார் ஒரு லட்சம் தமிழர்கள் உள்ளனர். அரபு நாடுகளில் நிரந்தரமாக தங்கி என்றுமே குடியுரிமை பெற்று விட முடியாது. இங்கு செல்லும்போதே திரும்பும் தேதியை தீர்மானித்து கொள்ள வேண்டும். பெரும்பாலும் சுமாரான படிப்புள்ளவர்களும், போதுமான படிப்பில்லாத உழைப்பாளிகளுமாகவே உள்ள நிறைய தமிழர்கள் தங்கள் ரத்தத்தை வேர்வையாக சிந்தி பாடுபடுகிறார்கள். அரபு நாடுகளில் கம்பீரமாக எழுந்து நிற்கும் கட்டிடங்களின் அஸ்திவாரத்தில் தமிழர்களின் உழைப்பு கண்ணுக்கு தெரியாமல் மறைந்துள்ளது. 70 சதவீத தமிழர்கள் கூலி வேலைகள், சாதாரண பணிகள், கழிவறையை சுத்தம்  செய்பவர்கள், வீட்டுப்பணியாளர்கள் என பலதரப்பட்ட பணிகளில் வேலை பார்க்கிறார்கள். அதிகமாக செலவழித்து அரபு நாடுகளுக்கு வந்து அதிகமாக வேலைகளை செய்து, அதிகமான பாதிப்புகளை அனுபவிப்பவர்களும் இவர்கள்தான். அரபு நாடுகளுக்கு வருபவர்கள் வர முயற்சிப்பவர்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் என்னவெனில் நீங்கள் எந்த நிறுவனத்திற்காக வேலைக்கு வருகிறீர்களோ அந்த நிறுவனம்தான் உங்கள் விசா மற்றும் போக்குவரத்திற்கான செலவுகளை ஏற்க வேண்டும் என்பதுதான் அரபு நாடுகளில் சட்டமாகும். குறைந்தபட்சம் 3 ஆண்டுகளிலிருந்து அதிகபட்சம் 30 ஆண்டுகள் வரையில் பணி புரிகிறார்கள் பிறகு தமிழகம் திரும்பி விடுகிறார்கள். அரபு நாட்டு மக்களில் சிலருக்கு தொழில் நுட்பத்தையும் வேலை நுணுக்கங்களையும் கற்றுத்தந்து அப்படி கற்றுக் கொண்டவர்களுக்கே கீழேயே வேலை செய்ய தமிழர்கள் நிர்பந்திக்கப்படுகிறார்கள்.
ஜெர்மனியில் சுமார் ஐம்பதாயிரம் தமிழர்கள் வாழ்கிறார்கள். தென் இந்தியர்களை மிகவும் புத்திசாலிகள் என கருதும் போக்கு ஜெர்மனியில் உள்ளது. ஜெர்மன் நாட்டில் பணிபுரியக் கூடியவர் ஜெர்மன் மொழியை மிக நன்றாக அறிந்திருக்க வேண்டியது அவசியம். மொத்த தமிழர்களில் 10 சதவிகிதத்தினர் கட்டிடத் தொழில், சாலை போடுதல், ஹோட்டல்  வேலை போன்றவற்றில் உள்ளனர். ஜெர்மனியில் அதிகபட்ச ஜனநாயகத்திற்கு இடமில்லை. ஆகவே, மற்ற நாட்டில் நம்மவர்களால் கோயில்களை கட்டியது போல இங்கு கட்ட முடியாது. ஆனால் அவரவர்கள் வீட்டில் வழிபாடு செய்து கொள்ளத் தடை கிடையாது.
பிரான்ஸ் நாட்டில் ஐந்து லட்சம் தமிழர்கள் உள்ளனர். பிரான்ஸில் தமிழர்கள் பெரும்பாலும் பாண்டிச்சேரி வாழ் மக்கள்தான். பாண்டிச்சேரி விடுதலை பெற்ற நிலையில், எப்போது வேண்டுமானாலும் நீங்கள் பிரான்ஸ் வந்து குடியிருக்கலாம் என்ற உத்தரவாதத்தை பிரான்ஸ் வழங்கிச் சென்றது. தமிழர்கள் பலர் பிரான்ஸ் ராணுவத்தில், அரசு உத்தியோகங்களில், நல்ல சம்பளத்துடன் உள்ளனர். வணிகர்களாகவும் உள்ளனர். காது குத்துதல், மொட்டையடித்தல், மஞ்சள் நீராட்டு விழா, நிச்சயதார்த்தம், திருமணம் போன்ற பல விழாக்கள் தமிழ்நாட்டில் நடப்பதைப் போலவே இங்கேயும் நடக்கின்றன. இங்கு வறுமை கிடையாது. அனைவருக்கும் வேலை கிடைத்து விடுகிறது. மதசார்பற்ற நாடு. கோயில், மசு10தி கட்டிக் கொள்ள அரசு இடம் தந்து உதவுகிறது. இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றுபவர்;களுக்கு என்று எந்த தனிச் சட்டமும் இந்நாட்டில் கிடையாது.
தென்னாப்பிரிக்காவில் விவசாயம் என்றால் என்னவென்று சரிவர அறிந்திராத அந்த நாடுகளுக்கு சென்ற தமிழர்கள் பசுமை செழித்தோங்கும் வளமான பூமியாக மாற்ற வியர்வை சிந்தி உழைத்தவர்கள். கரும்புää தேயிலை, காப்பித் தோட்டங்களிலும், தங்க சுரங்கக்களிலும். தமிழர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டார்கள். சுமார் 12 லட்சம் இந்தியர்கள் உள்ளனர். இன்று நல்ல நிலையில் உள்ளனர். கோயில்கள் உள்ளன. பொங்கல்ää தீபாவளி, கொண்டாடுகிறார்கள்.
செசல்ஸ் நாட்டில் 6000 இந்தியர்கள் உள்ளனர். தமிழர்கள் மிக நல்ல நிலையில் வாழும் நாடுகளில் செசலும் ஒன்று. மொரீஷியஸ் தீவில் 1 லட்சம் தமிழர்கள் உள்ளனர். கரும்பு தோட்டத்தில் வேலை பார்க்க 250 ஆண்டுகளுக்கு முன் சென்றவர்கள் இவர்களுடைய சந்ததியினர்களுக்கு இன்று தமிழ் பேச தெரியவில்லை என்றாலும் பொருளாதார ரீதியாக நன்றாகவே உள்ளனர் என்பது ஆறுதலளிக்கிறது. இலங்கை தழிழர்களின் இன்றைய நிலை அனைவருக்கும் தெரிந்ததே.
                                                                               

No comments: