உலகச் செய்திகள்


பாங்கொக்கில் குண்டுவெடிப்பு : 27 க்கும் அதிகமானோர் பலி

இந்­தோ­னே­சிய விமா­னத்தில் பய­ணித்த 54 பேரது சட­லங்­களும் மீட்பு

இந்திய குடியரசுத் தலைவரின் மனைவியின் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி

ஐ.எஸ். தீவி­ர­வா­தி­க­ளுக்கு எதி­ராக போராடும் பெண்கள் படை­ய­ணிக்கு தலைமை தாங்கும் முன்னாள் பாடகி

பாங்கொக்கில் குண்டுவெடிப்பு : 27 க்கும் அதிகமானோர் பலி

17/08/2015 தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கிலுள்ள மிகவும் பிரபலமான இராவன் இந்து ஆலயத்திற்கருகில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 27 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இச்சம்பவத்தில் பலர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக சம்பவ தெரிவிக்கப்படுகின்றது.

ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்கு அருகிலுள்ள இந்த இந்து வழிபாட்டுத் தலத்திற்கு பௌத்த மக்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் வருகை தரும்  இடமாகும். 
சுற்றுலாப் பயணிகள் மத்தியிலும் பிரபலமான ஒரு இடமாகவும் குறித்த ஆலயம் திகழ்கிறது. நன்றி வீரகேசரி 


இந்­தோ­னே­சிய விமா­னத்தில் பய­ணித்த 54 பேரது சட­லங்­களும் மீட்பு

19/08/2015 இந்­தோ­னே­சி­யாவின் மலைப் பிராந்­தி­யத்தில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை விபத்­துக்­குள்­ளான திறை­கனா விமா­ன­சேவை விமா­னத்தில் பயணம் செய்த 54 பேரி­னதும் சட­லங்கள் மீட்புப் பணி­யா­ளர்கால் மீட்­கப்­பட்­டுள்­ளன.

பகு­தி­யாக எரிந்து முழு­மை­யாக அழிவடைந்திருந்த அந்த விமா­னத்தின் சிதைவை தாம் கண்­டு­பி­டித்­துள்­ள­தாக மேற்­படி மீட்புக் குழுவின் தலைவர் தெரி­வித்தார்.
அந்த விமா­னத்தில் 44  வய­து­வந்­த­வர்­களும் 5 சிறு­வர்­களும் 5 விமான ஊழி­யர்­களும் பய­ணித்­துள்­ளனர். அத்­துடன் மேற்­படி விமா­னத்தில் 486,000 அமெ­ரிக்க டொலர் பெறு­ம­தி­யான சமூகப் பணிகளுக்கான பணமும் எடுத்துச் செல்லப்பட்டிருந்தது.   நன்றி வீரகேசரி
இந்திய குடியரசுத் தலைவரின் மனைவியின் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி

19/08/2015 இந்தியக் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியின் மனைவி சுர்வா முகர்ஜியின்  உடலுக்கு பிரதமர் மோடி நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இந்தியக் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியின் மனைவி சுர்வா முகர்ஜி தனது 74 வயதில் நேற்று மரணம் அடைந்தார். 
குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியின் மனைவி சுர்வாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் டெல்லியில் உள்ள ஆர்.ஆர். மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 
இந்நிலையில் சவ்ராவின் நிலைமை மிகவும் மோசமடைந்தது. அவரைக் காப்பாற்ற வைத்தியர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காத நிலையில்  நேற்று செவ்வாய்கிழமை காலை 11 மணி அளவில் அவருடைய உயிர் பிரிந்தது. 
சுர்வாவின் உடல் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் இறுதி அஞ்சலிக்காக குடியரசுத்தலைவர் மாளிகையில் நேற்று மாலை 5 மணி வரை வைக்கப்பட்டிருந்தது. 
சுர்வாவின் உடலுக்கு பிரதமர் நரேந்திரமோடி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் தல்கதோராவில் உள்ள பிரணாப்முகர்ஜியின் மகனும் எம்.பி.யுமான அபிஜித் முகர்ஜி வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. 
இதேவேளை, இந்திய குடியரசுத்  தலைவர் பிரணாப் முகர்ஜின் மனைவி சுர்வா முகர்ஜியின் உடலுக்கு அதிகளவானோர் அஞ்சலி செலுத்தினர். நன்றி வீரகேசரி
ஐ.எஸ். தீவி­ர­வா­தி­க­ளுக்கு எதி­ராக போராடும் பெண்கள் படை­ய­ணிக்கு தலைமை தாங்கும் முன்னாள் பாடகி

19/08/2015 தமது இனத்தைச் சேர்ந்த பல்­லா­யி­ரக்­க­ணக்­கான பெண்­களை கடத்திச் சென்று பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்தி படு­கொலை செய்த ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களைப் பழி­தீர்க்கும் முக­மாக ஈராக்­கிய யஸிடி இனத்தைச் சேர்ந்த முன்னாள் பாட­கி­யொ­ருவர் பெண்­களை மட்­டுமே உள்­ள­டக்­கிய படை­ய­ணி­யொன்றை உரு­வாக்கி தலைமை தாங்கி வழி­ந­டத்தி வரு­கிறார்.
ஸேட் ஷின்­காலி (30 வயது) என்ற மேற்­படி பாடகி ஐ.எஸ். தீவி­ர­வா­தி­க­ளுக்கு எதி­ராகப் போராடும் முக­மாக 'சண் கேர்ல்ஸ்' (சூரிய பெண்கள் ) என்ற முற்று முழு­தாக பெண்­களைக் கொண்ட படை­ய­ணி­யொன்றை உரு­வாக்­கி­யுள்ளார்.

அவ­ரது படை­ய­ணியைச் சேர்ந்த பெண்கள் தீவி­ர­வா­தி­க­ளிடம் சிக்கிக் கொள்ளும் பட்­சத்தில் அவர்­களால் கொல்­லப்­ப­டவும் பாலியல் அடி­மை­யா­க நடத்­தப்­ப­டவும் கூடிய அபாயம் உள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.
வட ஈராக்­கிய பிராந்­தி­யத்தில் யஸிடி இனத்­த­வர்­க­ளது கிரா­மப்­புற பாடல்­களைப் பாடு­வதில் பிர­சித்தி பெற்ற ஷின்­கா­லிக்கு மேற்­படி படை­ய­ணியை ஸ்தாபிப்­ப­தற்கு குர்திஷ் ஜனா­தி­பதி அங்­கீ­காரம் அளித்­துள்ளார்.
அவ­ரது படை­ய­ணியில் 17 வய­துக்கும் 30 வய­துக்கும் இடைப்­பட்ட வய­து­டைய 123 பெண்கள் அங்கம் வகிக்­கின்­றனர்.
கடந்த ஆண்டு வட ஈராக்கின் சின்ஜார் மாகா­ணத்­தி­லுள்ள கிரா­மங்­களைக் கைப்­பற்­றிய தீவி­ர­வா­திகள் இயஸிடி இனத்தைச் சேர்ந்த பல்­லா­யி­ரக்­க­ணக்­கான பெண்­களைக் கடத்திச் சென்­றி­ருந்­தனர்.
இந்­நி­லையில் தீவி­ர­வா­தி­க­ளி­ட­மி­ருந்து தப்பி வந்த பெண்கள்இ தாம் தீவி­ர­வா­தி­களால் கொடூ­ர­மான முறையில் பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தப்­பட்டும் அந்த தீவி­ர­வா­தி­களை திரு­மணம் செய்­வ­தற்கு நிர்ப்­பந்­திக்­கப்­பட்டும் கொடு­மைப்­ப­டுத்­தப்­பட்­ட­தாக தெரி­வித்­தி­ருந்­தனர்.
'சண் கேர்ல்ஸ்' படை­ய­ணியில் அங்­கத்­துவம் வகிக்கும் இளம் பெண் படை­வீ­ர­ரான ஜேன் பாரெஸ் (17 வயது) விப­ரிக்­கையில்இ ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் சின்ஜார் பிராந்­தி­யத்தைக் கைப்பற்றிய போது தனது சகோதரனுடன் அங்கிருந்து தப்பி வந்ததாக தெரிவித்தார்.
தான் இந்தப் பெண்கள் படையணியில் இணைந்து போராடுவது குறித்து தனது தந்தை பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளதாக அவர் கூறினார்.    நன்றி வீரகேசரி


No comments: