106 ஆசனங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கிறது ஐ.தே.க. : ரணில் மீண்டும் பிரதமராகின்றார்
ரணிலுக்கு வாழ்த்து தெரிவித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி
தேர்தலில் படுதோல்வியடைந்த சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி
பாராளுமன்றம் சென்று அரசியலை தொடர்வேன் : மஹிந்த
தமிழ் மக்களின் பிரதிநிதிகள்கூட்டமைப்பு என்பதனை மக்கள் நிரூபித்துள்ளனர்
மலையகத்திலிருந்து எட்டு தமிழ் பிரதிநிதிகள் தெரிவு
தேர்தலில் நாம் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை : ஜே.வி.பி
106 ஆசனங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கிறது ஐ.தே.க. : ரணில் மீண்டும் பிரதமராகின்றார்
19/08/2015 நடைபெற்று முடிந்த எட்டாவது பாராளுமன்றத் தேர்தலில் 106ஆசனங்களை பெற்று ஆளும் ஐக்கிய தேசிய கட்சி வெற்றியீட்டியுள்ளது. அத்துடன் 95 ஆசனங்களை பெற்றுக்கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேர்தலில் தோல்வியை தழுவியுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 16 ஆசனங்களையும் மக்கள் விடுதலை முன்னணி 6ஆசனங்களையும் பாராளுமன்றத் தேர்தலில் பெற்றுக்கொண்டுள்ளன. அத்துடன் சிறிலங்கா முஸ் லிம் காங்கிரஸும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் தலா ஒரு ஆசனம் வீதம் பெற்றுள்ளன.
நடந்து முடிந்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி 5,098,927 (45.66மூ) வாக்குகளையும் ஐக்கிய மக் கள் சுதந்திர முன்னணி 4,732,669 (42.38மூ) வாக்குகளையும் மக்கள் விடுதலை முன்னணி 543,944 (4.87%) வாக்குகளையும் பெற்றுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 515,963 (4.62ம%) வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளது.
ஈழ மக்கள் ஜனநாய கக் கட்சி 33இ481 (0.30மூ) வாக்குகளையும் பெற்றுள்ளது. அத்துடன் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி44,193 (0.40%) வாக்குகளையும் பெற்றுள்ளது.
எட்டாவது பாராளுமன்றத் தேர்தலில் தேசிய பட்டியல் ஊடாக ஐக்கிய தேசிய கட்சி 13 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 12 ஆசனங்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2 ஆசனங்களையும் மக்கள் விடுதலை முன்னணி 2 ஆசனங்களையும் பெற்றுக்கொண்டுள்ளன.
மாவட்ட ரீதியில் பார்க்கும்போது ஐக்கிய தேசிய கட்சி 11 மாவட்டங்களில் வெற்றிபெற்றுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 8 மாவட்டங்களை வெற்றிபெற்றுள்ளதுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 3 மாவட்டங்களிலும் வெற்றியீட்டியுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி பொலன்னறுவை, திருகோணமலை, கண்டி, கம்பஹா, கொழும்பு, கேகாலை, பதுளை, நுவரெலியா, மாத்தளை, திகாமடுல்ல, புத்தளம் மாவட்டங்களில் வெற்றியீட்டியுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அம்பாந்தோட்டை, காலி, மாத்தறை, அனுராதபுரம், குருணாகல், மொனராகலை, இரத்தினபுரி, களுத்துறை, ஆகிய மாவட்டங்களில் வெற்றியை உறுதி செய்துகொண்டுள்ளது. அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ்ப்பாணம், வன்னி மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் வெற்றியீட்டியுள்ளது.
அந்தவகையில் பாராளுமன்றத் தேர்தலில் அறுதிப் பெறும்பான்மையை எந்தவொரு கட்சியும் பெறாத நிலையில் தேர்தலில் கூடிய ஆசனங்களை வெற்றிக்கொண்டுள்ள ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியமைக்கவுள்ளது. அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியும் சுதந்திரக் கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்குமான பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றுவருகின்றன.
நடந்து முடிந்த எட்டாவது பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் கடும் போட்டி நிலவியது. நேற்றுக்காலை தேர்தல் முடிவுகள் வெளிவரும்வரை எந்தக் கட்சி வெற்றிபெறும் என்ற ஊகிக்க முடியாதளவுக்கு போட்டி காணப்பட்டது. எனினும் ஐக்கிய தேசிய கட்சி 105 ஆசனங்களை பெற்று வெற்றியை தனதாக்கிக்கொண்டது.
பாராளுமன்றத் தேர்தலில் மொத்தமாக ஒரு கோடியே 50 இலட்சத்து 44490 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றிருந்தனர். எனினும் தேர்தலில்11684098 வாக்காளர்கள் வாக்களித்திருந்தனர். அவற்றில்517123 வாக்குகள் நிராகரிக்கப்பட்ட நிலையில் 11166975 வாக்குகள் செல்லுபடியானதாக அறிவிக்கப்பட்டன.
12314 வாக்களிப்பு நிலையங்களில் நடைபெற்ற தேர்தல் வாக்களிப்பு நேற்று முன்தினம் மாலை நான்கு மணிக்கு நிறைவடைந்தது. 225 உறுப்பினர்கள் எட்டாவது பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவதற்காக கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 6151 வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தனர்.
கொழும்பு மாவட்டம்
ஐக்கிய தேசிய கட்சி கொழும்பு மாவட்டத்தில் 640,743 வாக்குகளையும் 11 ஆசனங்களையும் பெற்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 474,063 வாக்குகளையும் 7 ஆசனங்களையும் பெற்றது. மக்கள் விடுதலை முன்னணி 81,391 வாக்குகளையும் 1 ஆசனத்தையும் பெற்றுக்கொண்டது. கொழும்பு மாவட்டத்தில் 1586598 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றிருந்தனர். அத்துடன் 792 பேர் தேர்தலில் போட்டியிட்டிருந்தனர்.
கம்பஹா
ஐக்கிய தேசிய கட்சி கம்பஹா மாவட்டத்தில் 577,004 வாக்குகளையும் 9 ஆசனங்களையும் பெற்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 549,958 வாக்குகளையும் 8 ஆசனங்களையும் பெற்றது. மக்கள் விடுதலை முன்னணி 87,880 வாக்குகளையும் 1 ஆசனத்தையும் பெற்றுக்கொண்டது. இந்த மாவட்டத்தில் 1637537 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றிருந்தனர்.
களுத்துறை
ஐக்கிய தேசிய கட்சி களுத்துறை மாவட்டத்தில் 310,234 வாக்குகளையும் 4 ஆசனங்களையும் பெற்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 338,801 வாக்குகளையும் 5 ஆசனங்களையும் பெற்றது. மக்கள் விடுதலை முன்னணி 38,475 வாக்குகளையும் 1 ஆசனத்தையும் பெற்றுக்கொண்டது.
கண்டி
ஐக்கிய தேசிய கட்சி கண்டி மாவட்டத்தில் 440,761 வாக்குகளையும் 7 ஆசனங்களையும் பெற்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 309,152 வாக்குகளையும் 5 ஆசனங்களையும் பெற்றது. மக்கள் விடுதலை முன்னணி 30,669 வாக்குகளையும் பெற்றுக்கொண்டது.
நுவரெலியா
ஐக்கிய தேசிய கட்சி நுவரெலியா மாவட்டத்தில் 228,920 வாக்குகளையும் 5 ஆசனங்களையும் பெற்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 147,348 வாக்குகளையும் 3 ஆசனங்களையும் பெற்றது. மக்கள் விடுதலை முன்னணி 5,590 வாக்குகளையும் பெற்றுக்கொண்டது.
மாத்தளை
ஐக்கிய தேசிய கட்சி மாத்தளை மாவட்டத்தில் 138,241 வாக்குகளையும் 3 ஆசனங்களையும் பெற்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 126,315 வாக்குகளையும் 2 ஆசனங்களையும் பெற்றது. மக்கள் விடுதலை முன்னணி 10,947 வாக்குகளையும் பெற்றுக்கொண்டது.
பதுளை
ஐக்கிய தேசிய கட்சி பதுளை மாவட்டத்தில் 258,844 வாக்குகளையும் 5 ஆசனங்களையும் பெற்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி179,459 வாக்குகளையும் 3 ஆசனங்களையும் பெற்றது. மக்கள் விடுதலை முன்னணி 21,445 வாக்குகளையும் பெற்றுக்கொண்டது.
மொனராகலை
ஐக்கிய தேசிய கட்சி மொனராகலை மாவட்டத்தில் 110,372 வாக்குகளையும் 2 ஆசனங்களையும் பெற்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 138,136 வாக்குகளையும் 3 ஆசனங்களையும் பெற்றது. மக்கள் விடுதலை முன்னணி 13,626 வாக்குகளையும் பெற்றுக்கொண்டது.
இரத்திரனபுரி
ஐக்கிய தேசிய கட்சி இரத்தினபுரி மாவட்டத்தில் 284,117 வாக்குகளையும் 5 ஆசனங்களையும் பெற்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 323,636 வாக்குகளையும் 6 ஆசனங்களையும் பெற்றது. மக்கள் விடுதலை முன்னணி 21,525 வாக்குகளையும் பெற்றுக்கொண்டது.
கேகாலை
ஐக்கிய தேசிய கட்சி கேகாலை மாவட்டத்தில் 247,467 வாக்குகளையும் 5 ஆசனங்களையும் பெற்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 227,208 வாக்குகளையும் 4 ஆசனங்களையும் பெற்றது. மக்கள் விடுதலை முன்னணி 18,184 வாக்குகளையும் பெற்றுக்கொண்டது.
குருணாகல்
ஐக்கிய தேசிய கட்சி குருணாகல் மாவட்டத்தில் 441,275 வாக்குகளையும் 7 ஆசனங்களையும் பெற்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 474,124 வாக்குகளையும் 8 ஆசனங்களையும் பெற்றது. மக்கள் விடுதலை முன்னணி 41,077 வாக்குகளையும் பெற்றுக்கொண்டது. எனினும் மக்கள் விடுதலை முன்னணிக்கு எந்த ஆசனமும் கிடைக்கவில்லை.
புத்தளம்
ஐக்கிய தேசிய கட்சி புத்தளம் மாவட்டத்தில் 180,185 வாக்குகளையும் 5 ஆசனங்களையும் பெற்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 153,130 வாக்குகளையும் 3 ஆசனங்களையும் பெற்றது. மக்கள் விடுதலை முன்னணி 12,211 வாக்குகளையும் பெற்றுக்கொண்டது.
அனுராதபுரம்
ஐக்கிய தேசிய கட்சிஅனுராதபுரம் மாவட்டத்தில்213,072 வாக்குகளையும் 4 ஆசனங்களையும் பெற்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 229,856 வாக்குகளையும் 5 ஆசனங்களையும் பெற்றது. மக்கள் விடுதலை முன்னணி 28,701 வாக்குகளையும் பெற்றுக்கொண்டது.
பொலன்னறுவை
ஐக்கிய தேசிய கட்சி பொலன்னறுவை மாவட்டத்தில்118,845 வாக்குகளையும் 3 ஆசனங்களையும் பெற்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 103,172 வாக்குகளையும் 2 ஆசனங்களையும் பெற்றது. மக்கள் விடுதலை முன்னணி 13,497 வாக்குகளையும் பெற்றுக்கொண்டது.
அம்பாந்தோட்டை
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் . ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 196,980 வாக்குகளையும் 4 ஆசனங்களையும் பெற்றது. ஐக்கிய தேசிய கட்சி 130,433 வாக்குகளையும் 2 ஆசனங்களையும் பெற்றது. மக்கள் விடுதலை முன்னணி 36,527 வாக்குகளையும் 1 ஆசனங்களையும் பெற்றுக்கொண்டது.
காலி
காலி மாவட்டத்தில் . ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 312,518 வாக்குகளையும் 6 ஆசனங்களையும் பெற்றது. ஐக்கிய தேசிய கட்சி 265,180 வாக்குகளையும் 4 ஆசனங்களையும் பெற்றது. மக்கள் விடுதலை முன்னணி 37,778 வாக்குகளையும் பெற்றுக்கொண்டது.
மாத்தறை
மாத்தறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 250,505 வாக்குகளையும் 5 ஆசனங்களையும் பெற்றது. ஐக்கிய தேசிய கட்சி 186,675 வாக்குகளையும் 3 ஆசனங்களையும் பெற்றது. மக்கள் விடுதலை முன்னணி 35,270 வாக்குகளையும் பெற்றுக்கொண்டது.
திகாமடுல்லை
ஐக்கிய தேசிய கட்சி திகாமடுல்லை மாவட்டத்தில் 151,013 வாக்குகளையும் 4 ஆசனங்களையும் பெற்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 89,334 வாக்குகளையும் 2 ஆசனங்களையும் பெற்றது. இலங்கை தமிழரசு கட்சி 45,421 வாக்குகளையும் 1 ஆசனத்தை பெற்றுக்கொண்டது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 33,102 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது. ஆனால் இந்தக் கட்சியினால் எந்தவொரு ஆசனத்தையும் பெறவில்லை.
திருகோணமலை
ஐக்கிய தேசிய கட்சி திருகோணமலை மாவட்டத்தில் 83,638 வாக்குகளையும் 2 ஆசனங்களையும் பெற்றது. இலங்கை தமிழரசுக் கட்சி 45,894 வாக்குகளையும் 1 ஆசனங்களையும் பெற்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 38,463 வாக்குகளையும் 1 ஆசனங்களையும் பெற்றது.
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி 207,577 வாக்குகளையும் 5 ஆசனங்களையும் பெற்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 30,232 வாக்குகளையும் 1 ஆசனத்தையும் பெற்றது. ஐக்கிய தேசிய கட்சியும் 20,025 வாக்குகளையும் 1 ஆசனத்தையும் பெற்றுக்கொண்டது.
வன்னி
வன்னி மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி 89,886 வாக்குகளையும் 4 ஆசனங்களையும் பெற்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 20,965 வாக்குகளையும் 1 ஆசனங்களையும் பெற்றது. ஐக்கிய தேசிய கட்சியும் 39,513 வாக்குகளையும் 1 ஆசனத்தையும் பெற்றுக்கொண்டது.
மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி 127,185 வாக்குகளையும் 3 ஆசனங்களையும் பெற்றது. முஸ்லிம் காங்கிரஸ் 38,477 வாக்குகளையும்1 ஆசனங்களையும் பெற்றது. ஐக்கிய தேசிய கட்சியும் 32,359 வாக்குகளையும் 1 ஆசனத்தையும் பெற்றுக்கொண்டது. இந்தத் தேர்தலில் வாக்களிப்பு நடவடிக்கைகளில் 125000 அரச ஊழியர்களும் வாக்கு எண்ணும் செயற்பாடுகளில் 75000 ஈடுபட்டனர். அத்துடன் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொலிஸாரும் தேர்தல் வாக்களிப்பு மற்றும் வாக்கு எண்ணும் பணிகளில் ஈடுபட்டனர்.
30 ஆயிரம் பேர் கண்காணிப்பில்
தேர்தல் வாக்களிப்பை கண்காணிக்கும் செயற்பாடுகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் ஈடுபட்டனர். பொதுநலவாய தேர்தல் கண்காணிப்பு குழு ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழு மற்றும் தெற்காசிய தேர்தல் கண்காணிப்பு அதிகாரசபை போன்ற சர்வதேச கண்காணிப்பு நிறுவனங்கள் கண்காணிப்பில் ஈடுபட்டன.
தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்ட சர்வதேச கண்காணிப்பு நிறுவனங்கள் இன்று அல்லது நாளை தமது அறிக்கைகளை சமர்ப்பிக்கவுள்ளன. பொதுநலவாய தேர்தல் கண்காணிப்பு குழுவின் 9 அதிகாரிகள் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டனர். உள்நாட்டு கண்காணிப்பை பொறுத்தவரை பெப்ரல் அமைப்பு 12,314 தேர்தல் கண்காணிப்பாளர்களை பணியில் ஈடுபடுத்தியுள்ளது. உள்நாட்டு மற்றும் சர்வதேச மட்டத்திலும் மொத்தமாக 30 ஆயிரம் கண்காணிப்பாளர்கள் தேர்தலை கண்காணிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டனர்.
எட்டாவது பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்புகள் மிகவும் அமைதியான முறையில் நேற்று முன்தினம் இடம்பெற்றதுடன் நாடளாவிய ரீதியில் 70 வீதமான வாக்களிப்பும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலும் அனைத்து மாவட்டங்களிலும் 65 வீதத்தை தாண்டிய வாக்களிப்பு பதிவாகியிருந்தது. ஆங்காங்ககே சிறியளவிலான வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியிருந்தாலும் நாடளாவிய ரீதியில் பொதுவாக எட்டாவது பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றது.
தேர்தல் வாக்களிப்பை பொறுத்தவரை எந்தவொரு மாவட்டத்திலும் பாரியளவில் வன்முறைச் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை. நேற்றுக்காலை 7 மணிமுதல் 4 மணிவரை வாக்களிப்பு இடம்பெற்றதுடன் மக்கள் மிகவும் ஆர்வமாக வாக்களித்தனர். நன்றி வீரகேசரி
ரணிலுக்கு வாழ்த்து தெரிவித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி
19/08/2015 நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த வெற்றி இருநாட்டு உறவுகளையும் மேலும் வலுப்படுத்தும் என்றும் இந்திய பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்த தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றதையிட்டு இலங்கை மக்களுக்கும் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார். நன்றி வீரகேசரி
தேர்தலில் படுதோல்வியடைந்த சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி
19/08/2015 நடந்து முடிந்த எட்டாவது பாராளுமன்றத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி படு தோல்வியடைந்துள்ளது. ஜனநாயகக் கட்சியின் சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும் படு தோல்வியடைந்துள்ளார்.
இம்முறை கொழும்பு மாவட்டத்தில் வெறுமனே 5,238 வாக்குகளை மட்டுமே ஜனநாயகக் கட்சி பெற்றுள்ளது. அது மட்டுமன்றி நாடளாவிய ரீதியிலும் மிகவும் குறைந்தளவிலான வாக்குகளையே ஜனநாயகக் கட்சி பெற்றுள்ளது.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணியுடன் இணைந்து ஜனநாயக தேசியக் கூட்டணி என்ற பெயரில் போட்டியிட்ட சரத் பொன்சேகாவின் கட்சி நாடளாவிய ரீதியில் ஏழு ஆசனங்களைப் பெற்றிருந்தது. 110683 வாக்குகளை பெற்று இரண்டு ஆசனங்களை பெற்றிருந்தது.
எனினும் இம்முறை ஒரு ஆசனத்தையேனும் அக்கட்சியினால் பெற முடியவில்லை.கடந்த 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகா எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
பாராளுமன்றம் சென்று அரசியலை தொடர்வேன் : மஹிந்த
19/08/2015 எனக்கு கிடைத்துள்ள மக்கள் ஆணையின்படி பாராளுமன்றம் சென்று அரசியலை தொடரவுள்ளதாக குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தல் நிறைவுற்ற நிலையில் அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
"2015 பொதுத் தேர்தல் முவுகளை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன்.
தேர்தலில் எமது கூட்டமைப்புக்கு வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் எமது கட்சிக்காக படுபட்டு உழைத்த கட்சி ஆதரவாளர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
கிடைத்துள்ள மக்கள் ஆணையின்படி தொடர்ந்து அரசியலில் ஈடுபடுவேன் என்றும் நாட்டின் ஜனநாயகம் மற்றும் பாதுகாப்பை முன்னிறுத்தி நாட்டுக்கு மக்களுக்கு செய்த சேவையை தொடர்ந்தும் செய்வேன் என்று அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
தமிழ் மக்களின் பிரதிநிதிகள்கூட்டமைப்பு என்பதனை மக்கள் நிரூபித்துள்ளனர்
19/08/2015 வட – கிழக்கு மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கையையும் உறுதியையும் மீண்டும் நிரூபித்துள்ளனர். அவர்களின் நம்பிக்கையையும் விசுவாசத்தையும் எப்பொழுதும் நாம் காப்பாற்றுவோம். நன்றி கூறவும் கடமைப்பட்டுள்ளோம்.என்று கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். "
தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்பு பெற் றுள்ள வெற்றி தொடர்பில் கேசரியுடன் கருத்து பகிர்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்; வடக்கு கிழக்கு மக்கள் எம்மீது கொண்ட நம்பிக்கையை மீண்டும் உலகம் அறிய நிரூபித்துள்ளார்கள். அவர்களுக்கு நன்றி தெரிவிக்க நாம் கடமைப்பட்டவர்கள்.
அவர்களின் நம்பிக்கையை எப்பொழுதும் நாம் காப்பாற்றியே தீருவோம். வடக்கு கிழக்கில் போட்டியிட்ட மக்கள் செல்வாக்கற்ற சில கட்சிகளின் விஷமத்தனமான பிரசாரத்தினாலும் நடவடிக்கைளினாலும் நாம் அடையவிருந்த இன்னும் பெரிய பாரிய வெற்றி அக்கட்சிகளால் தடைப்பட்டுவிட்டது. நாம் அக்கட்சிகளை தமிழ் மக்களின் நன்மை கருதி தேர்தலில் இருந்து விலகுமாறு கோரினோம். அவர்கள் அதை செய்யவில்லை. இன்று அவர்கள் எமது மக்களால் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறந்த வெற்றியைப் பெற்றுள்ளது. பெறப்பட்ட ஆசனங்களின் எண்ணிக்கை எதிர்பார்த்ததிலும் பார்க்க சற்று குறைவாக இருந்த போதிலும் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கையையும் உறுதியையும் மீண்டும் நிரூபித்துள்ளனர். தமிழ்க் கூட்டமைப்பை வட – கிழக்கு மக்கள் தங்களுடைய நம்பிக்கைக்குரிய பிரதிநிதியாக இத்தேர்தலில் தெரிவு செய்திருக்கின்றார்கள். இதில் எவ்வித சந்தேகத்துக்கும் இடமில்லை. துரதிஷ்டவசமாக தேர்தலுக்கு முன்பாக சில விஷமத் தனமான பிரசாரங்கள் எம்மீது மேற்கொள்ளப்பட்டன. துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
இது எமது வெற்றி வாய்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியது. எமது செயற்பாட்டைப் பொறுத்தவரை அரசியல் தீர்வு விடயத்தில் கால தாமதம் செய்யாமல் முன்னெடுக்கப்பட வேண்டுமென்பது கூட்டமைப்பின் முக்கியமானதும் உறுதியானதுமான நிலைப்பாடாகும். இது விடயம் குறித்து எடுக்க வேண்டிய முயற்சிகளை இனி வேகமாக மேற்கொள்வோம்.
எம்மை பொறுத்தவரையில் ஜனாதிபதித் தேர்தலில் மக்களால் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவாக புதிதாக அமையவிருக்கும் அரசாங்கம் இருக்க வேண்டும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மக்களால் வழங்கப்பட்ட ஆணையை தொடரும் வகையில் அமையவிருக்கும் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அவ்விதமான நிலைமைக்கு நாங்கள் ஆதரவாக இருப்போமென்று கூற முடியும். அமையவிருக்கும் புதிய அரசாங்கமானது தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைக்குத் தீர்க்கமான ஒரு அரசியல் தீர்வை கொண்டு வருவதற்கு கடுமையான காத்திரமான முயற்சிகளை காலதாமதம் இன்றி மேற்கொள்ள வேண்டுமென்பது எமது எதிர்பார்ப்பாகும்.
யாழ். மாவட்டத்தில் தமிழ்க் கூட்டமைப்பு 5 ஆசனங்களைப் பெற்று பாரிய சாதனை படைத்திருக்கின்ற போதும் 6 ஆசனங்களை பெறுவதற்குரிய வாய்ப்பை மிக மிக சொற்பளவு வாக்கான 6 வாக்குகளால் இழந்துள்ளது என்பது கவலை தருகின்ற விடயமாகும். நாம் இவ் விடயம் சம்பந்தமாக தேர்தலுக்கு முன்பே கூறியுள்ளோம். சிறு கட்சிகள் அதாவது ஒரு ஆசனத்தைக் கூட பெற தகுதியற்ற கட்சிகள் மக்களுடைய செல்வாக்கைப் பெறாத கட்சிகள் இவ்வாறானதொரு நிலைக்கு மக்களைத் தள்ளலாமென முன்பே கூறியிருந்தோம்.
இதன் காரணமாக மக்களுடைய உரிமைக்கு பாதகம் ஏற்படுமெனக் கூறினோம். இக்கட்சிகளை தேர்தலில் இருந்து விலகும்படி கோரிக்கை விடுத்தோம். அவர்கள் விலகவில்லை. அடம்பிடித்து போட்டியிட்டார்கள். தற்பொழுது மக்களால் நிராகரிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் பெற்ற சிறியளவு வாக்குகள் காரணமாக கூட்டமைப்பின் பெரிய வெற்றி பாதிக்கப்பட்டிருக்கிறது. யாழ்.மாவட்டத்தில் 6, ஆசனங்களை பெறுவதற்கு 6 வாக்குகள் தான் போதாமல் இருந்துள்ளன.
இந்நிலைக்கு பொறுப்பானவர்கள் அந்தக் கட்சிகள் மக்களுக்கு பதில் கூற வேண்டும். தமது பொறுப்பை அவர்கள் முழுமையாக ஏற்க வேண்டும். நன்றி வீரகேசரி
மலையகத்திலிருந்து எட்டு தமிழ் பிரதிநிதிகள் தெரிவு
19/08/2015 எட்டாவது பாராளுமன்றத்திற்கு பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்காக நடைபெற்று முடிந்த தேர்தலில் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் விதத்தில் எட்டு பிரதிநிதிகள் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர். ஐக்கிய தேசிய கட்சியின் சார் பில் நுவரெலியா மாவட்டத்தில் அமைச்சர்களான பழனி திகாம்பரம்,வேலுசாமி இராதாகிருஷ்ணன் மற்றும் எம்.திலகராஜ் ஆகியோரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் இ.தொ.கா. வின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான்,தலைவர் முத்துசிவலிங்கம் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் பதுளை மாவட்டத்தில் இருந்து ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சர் வடிவேல் சுரேஷ் ,தமிழ் முற்போக்கு கூட்டணியின் உப தலைவர் அ. அரவிந்த குமார் ஆகியோரும் கண்டி மாவட்டத்தில் இருந்து ஜனநாயக மக்கள் முன்னணியின் உப தலைவர் வேலுகுமாரும் தெரிவாகியுள்ளனர். அந்தவகையிலேயே மலையக தமிழ் பிரதிநிதிகள் எட்டு பேர் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.
மேலும் நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஆர்.யோகராஜன்,பி.இராஜதுரை மற்றும் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான எம்.உதயகுமார், எஸ்.சதாசிவம் முன்னாள் தமிழ் கல்வி அமைச்சர் அனுஷியா சிவராஜா ஆகியோர் தோல்வியடைந்துள்ளனர்.
கண்டி மாவட்டத்தில் முன்னாள் தமிழ் கல்வி அமைச்சர் எஸ். அருள் சாமி, மத்திய மாகாண சபை உறுப்பினர் எஸ்.சிவஞானம் , சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினர்களான கணபதி ராமசந்திரன் ,அண்ணாமலை பாஸ்கரன் , ஊவா மாகாண சபை உறுப்பினர் ஆறுமுகம் கணேச மூர்த்தி ஆகிய தமிழ் வேட்பாளர்கள் தோல்வியை தழுவிக்கொண்டனர் .
விருப்பு வாக்குவிபரம்
நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்ட தொழிலாளர் .தேசிய சங்கத்தின் தலைவரும் அமைச்சருமான பழனி திகாம்பரம் 105528 வாக்குகளை பெற்று முதலிடத்தில் தெரிவாகியுள்ளார். இவரை அடுத்து அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் 87375 , எம். திலகராஜ் 67761 , நவீன் திஸாநாயக்க 66716 , கே.கே. பியதாச 48365 என்ற அடிப்படையில் ஐக்கிய தேசிய கட்சியில் தெரிவு செய்யப்பட்டோர் விருப்பு வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளனர்.
இதே வேளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிட்ட இ.தொ.கா. பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான 61897 ,சீ.பீ ரத்நாயக்க 45649 , இ.தொ.க. தலைவர் முத்துசிவலிங்கம் 45352 என்ற விருப்பு வாக்கு வித்தியாசத்திலும் வெற்றிப்பெற்றுள்ளனர்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பீ.இராஜதுரை 28982,ஆர்.யோகராஜன் 17225 , மாகாண சபை உறுப்பினர்களான எம்.உதயகுமார் 26025 ,எஸ்.சதாசிவம் 6747 ,முன்னாள் தழிழ் கல்வி அமைச்சர் அனுஷியா சிவராஜா 44809 என்றவாறு விருப்பு வாக்குகளை பெற்றுள்ளபோதிலும் தோல்வியை தழுவியுள்ளனர்.
இதே வேளை பதுளை மாவட்டத்தில் தமிழ் வேட்பாளர்களான தமிழ் முற்போக்கு கூட்டணியின் உப தலைவர் அ.அரவிந்த குமார் 53 741 , ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சர் வடிவேல் சுரேஷ் 52378 என்ற ரீதியிலும் விருப்பு வாக்குகளை பெற்று வெற்றிப்பெற்றுள்ளனர்.
முதலமைச்சர் ஹரின் பெர்னாண்டோ 200206 என்ற அதிக பட்ச விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார் . இதே போன்று ஐ.ம.சு.மு.வின் முதன்மை வேட்பாளரம் முன்னாள் எதிர்கட்சித் தலைருமான நிமல் சிறிபால டி சில்வா 135406 வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார். நன்றி வீரகேசரி
தேர்தலில் நாம் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை : ஜே.வி.பி
19/08/2015 நாம் விதைத்ததை மக்கள் புரிந்துகொண்டிருப்பார்களானால் நாம் அறுவடை செய்திருப்போம் என நடந்து முடிந்த பொதுத் தேர்தலுக்கு வியாக்கியானம் தெரிவித்த ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திஸாநாயக, மக்களுக்கான எமது போராட்டம் பாராளுமன்றத்திற்கு மட்டும் வரையறுக்கப்பட்டதல்ல. அதற்கு வெளியே எமக்கு பலம்பொருந்திய அரசியல் போராட்டத்திற்கான பலம் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி.யின் தலைமையகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் நடந்து முடிந்த பொதுத் தேர்தல் தொடர்பாக விளக்கமளிக்கையிலேயே ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திஸாநாயக இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
பொதுத் தேர்தல் நீதியானதும் சுதந்திரமானதுமாக இடம்பெற்றது. சில சில சம்பவங்கள் இடம்பெற்றாலும் பொதுவாக அமைதியான தேர்தல் நடைபெற்றது.
இதற்காக தேர்தல்கள் ஆணையாளர் உட்பட தேர்தல்கள் திணைக்கள ஊழியர்கள் மற்றும் பொலிஸ் மா அதிபர், பொலிஸ் திணைக்களம் உட்பட அரச அதிகாரிகள் அனைவருக்கும் எமது நன்றிகளை தெரிவிப்பதோடு எமக்கு வாக்களித்த வாக்களிக்காத அனைத்து மக்களுக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
கடந்த காலங்களில் சிறிய பிரதிநிதித்துவம் பாராளுமன்றத்தில் இருந்த போதும் மக்களுக்காக குரல் கொடுத்தோம்.
நடந்து முடிந்த தேர்தலில் நாம் எதிர்பார்த்த பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைக்காத போதும் எமக்கு கிடைத்துள்ள எம்.பி. பதவிகளை நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் பயன்படுத்துவோம். தற்போதைய சூழ்நிலையில் கூட்டரசாங்கமே அமையப் போகின்றது. இந்த அரசாங்கத்தில் பங்காளிகளாக நாம் இருக்க மாட்டோம்.
பாராளுமன்றத்திற்குள் எதிர்கட்சிக்குள்ள பொறுப்பை நிறைவேற்றுவோம். மக்களுக்கும் நாட்டுக்கும் நன்மை வழங்கும் திட்டங்களை அரசு கொண்டு வந்தால் ஆதரிப்போம். இல்லாவிட்டால் எதிர்ப்போம். 19 ஆவது திருத்தத்திற்கு அமைய அரசியலமைப்பு சபையில் எமது பங்களிப்பை பெற முயற்சித்தால் அதற்கு எமது பங்களிப்பை வழங்குவோம்.
அதேவேளை செயற்குழுக்களில் அங்கம் வகிப்பதிலும் எமக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் எமது போராட்டம் வெறுமனே பாராளுமன்றக் கட்டிடத்திற்குள் மட்டும் வரையறுக்கப்பட்டது அல்ல.
அதற்கு வெளியே தொழிற்சங்கம் மாணவர் சங்கம் என பல்வேறு வடிவங்களில் எமக்கு பரந்துபட்ட அரசியல் பலம் உள்ளது. இப்பலத்தை நாம் பயன்படுத்துவோம்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சமஷ்டி முறை தொடர்பில் எதுவிதமான பிரச்சினையும் தலை தூக்கவில்லை.
எனவே அது தொடர்பில் அலட்டிக் கொள்ளத் தேவையும் இல்லை. நாம் விதைத்ததை மக்கள் சரியாக புரிந்து கொள்ள வில்லை எனவே எம்மால் அறுவடை செய்ய முடியாமல் போனது. உண்மையை மக்கள் புரிந்து கொள்ளவார்கள் அப்போது நாம் விதைத்ததை அறுவடை செய்வோம் என்றும் அநுர குமார திஸாநாயக தெரிவித்தார். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment