தமிழ் சினிமா


வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க 



அஜித்தின் அமர்க்களம், சூர்யாவின் சிங்கம், தனுஷின் வேலையில்லா பட்டதாரி ஆகிய படங்கள் தான் இவர்களின் 25வது படம். இந்த படங்கள் அனைத்தும் ஹிட் ஆக, தன்னுடைய 25வது படத்தையும் ஹிட் அடிக்க வேண்டும் என்று நினைக்க மாட்டாரா ஆர்யா?.

தன் Favorite இயக்குனர் ராஜேஸ் அழகுராஜா தோல்வியில் துவண்டு இருந்தாலும், நீ என் நண்பேண்டா என்று தோளில் ஏற்றி வைத்து VSOP படத்தை தானே தயாரிக்கவும் செய்து வெளியீட்டுள்ளார் ஆர்யா.
ராஜேஸ் படத்தில் என்ன கதை? சரக்கு, நண்பர்கள், காதல், மோதல், பின் சந்தானத்தின் மூலம் தீர்வு. இது தான் இவர் படத்தின் வழக்கமான பார்முலா. இதை தன் முந்தைய படத்தில் மிஸ் செய்த ஒரே காரணத்தால் கொஞ்சம் தடுமாறினார்.
தற்போது பிடித்து விட்டார், ஆர்யா, சந்தானம் திக் ப்ரண்ட்ஸ். இருவரும் ஜாலியாக ஊர் சுற்றி வந்த நேரத்தில் சந்தானத்திற்கு, பானுவுடன் திருமணம் நிச்சயமாகின்றது. திருமணத்திற்கு பிறகு ஆர்யா செய்யும் சேட்டைகள் பிடிக்காமல், அவருடைய நட்பை மனைவி கட் செய்ய சொல்ல, சந்தானம், ஆர்யா காதலித்தால் நம்மை தொந்தரவு செய்ய மாட்டான் என்று தமன்னாவை இவருக்கு கோர்த்து விடுகிறார்.
ஒரு கட்டத்தில் தமன்னாவும் சந்தானம் நட்பை ஆர்யாவிடம் கட் செய்ய சொல்ல, கடைசியில் மனைவிகளுக்காக இவர்கள் நட்பு பிரிந்ததா? இல்லை நட்பு தான் முக்கியம் என கடைசி வரை இருந்தார்களா? என்பது தான் மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

ஆர்யாவிடம் சார் நீங்க என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், நாங்கள் கேமரா வைத்து Shoot செய்து கொள்கிறோம் என சொல்லி விட்டார் போல ராஜேஷ். தனக்கு எது எது எல்லாம் வராதோ, அதையெல்லாம் ப்ளஸாக்கி சிக்ஸர் அடிக்கின்றார்.
சந்தானம் சார் எங்க போனீங்க இத்தனை நாளா? சந்தானத்தின் சரக்கு ராஜேஸ் தான் போல, இந்த கவுண்டரை கவனித்தால், அந்த கவுண்டர் மறந்து விடுகின்றது. அந்த அளவிற்கு பின்னி பெடல் எடுத்து விடுகிறார். ஒரு நாள் நீ என் இடத்துல இருந்து பாரு, எத்தன கவுண்டர், எத்தன மாடுலேஷன் என சந்தானம் பேசும் காட்சியில் நான் தாண்ட காமெடி கிங் என்று சொல்லாமல் யாருக்கோ சொல்கிறார்.
அதிலும் குறிப்பாக வித்யூ லேகா குடும்பத்தை கலாய்க்க செல்லும் இடத்தில் சந்தானத்தின் டாப் 10 காமெடியில் இடம்பெறும் காட்சி. தமன்னா பாகுபலியில் பார்த்த வீரமங்கை இதில், கண்டேன் காதலை ஸ்டைலில் துறுதுறுவென அசத்தியுள்ளார். வித்யூ லேகாவும் மனோரமா, கோவை சரளா வரிசையில் இடம்பிடிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.
நீரவ் ஷா தான் கேமராவா? என்று கேட்கும் அளவிற்கு தான் உள்ளது. டி. இமான் இசையில் ‘லக்கா மாட்டிகிச்சு’ ’நான் ரொம்ப பிஸி’ பாடல் செம்ம குத்து. பின்னணி இசை ராஜேஸ் கண்டிப்பாக யுவனை மிஸ் செய்து தான் வருகிறார்.

க்ளாப்ஸ்




ஆர்யா, சந்தானம் கெமிஸ்ட்ரி, இன்னும் 10 படங்கள் நடிக்கலாம், அந்த அளவிற்கு எனர்ஜி. படத்தின் எந்த இடத்திலும் முகம் சுழிக்காத படியான காட்சியமைப்புகள்.

பல்ப்ஸ்

படத்தின் டைட்டிலை ஏதேதோ சொல்லி சமாளித்தாலும், படம் முழுவதும் ‘மது அருந்துதல்’ வாசகம் வந்து கொண்டே தான் இருக்கின்றது. ராஜேஸின் சரக்கு அது தானே? அவரை சொல்லி எந்த குற்றமும் இல்லை.
மொத்தத்தில் ராஜேஸ் நமக்கு இது தான் ‘பாஸ்’ சரி என்று ஆர்யா+சந்தானத்தை ஒண்ணா நடிக்க வைத்து விட்ட இடத்தை பிடித்து விட்டார்.

ரேட்டிங்- 3/5





நன்றி cineulagam





No comments: