இலங்கைச் செய்திகள்


அரசியல் கைதிகளுக்கு பிணை வழங்க முடிவு : பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் தீர்மானம்

முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்மை தொடர்பாக ஐ.நா.வில் விசாரணை நடத்த வேண்டும்

உறுகாமம் குளத்தின் இரண்டு வான்கதவுகள் திறப்பு
அமைச்சர் மனோவுடன் இலங்கைக்கான கனடிய உயர் ஸ்தானிகர் சந்திப்பு
கே.பி. குறித்து 4 விசா­ரணை அறிக்­கைகள்

அரசியல் கைதிகளுக்கு பிணை வழங்க முடிவு : பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் தீர்மானம்





27/10/2015 தடுத்துவைக்­கப்­பட்டுள்ள தமிழ் அர­சியல் கைதி­களை பிணையில் விடு­விப்­பது என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் நேற்று நடை­பெற்ற உயர்­மட்டக் குழுக் கூட் ­டத்தில் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது. இதற்கான நட­வ­டிக்­கை­களை அடுத்த மாத முதல் வார முடி­வுக்குள் எடுப்­ப­தற்கும் முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது.
தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­தலை தொடர்பில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் நேற்று மாலை உயர்­மட்டக் கூட்டம் இடம்­பெற்­றது. அலரி மாளி­கையில் நடை­பெற்ற இந்தக் கூட்­டத்தில் சட்டம் ஒழுங்கு சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு அமைச்சர் திலக் மாரப்­பன, தேசிய கலந்­து­ரை­யாடல்கள் அமைச்சர் மனோ கணேசன், புனர்­வாழ்வு மீள்­கு­டி­யேற்ற அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன், பொலிஸ் மா அதிபர் என்.இலங்­கக்கோன், பிரதி சட்ட மா அதிபர் உட்­பட அதி­கா­ரிகள் கலந்­து­கொண்­டனர்.
இந்தக் கூட்­டத்தில் சிறைச்­சா­லை­களில் தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சியல் கைதி­களின் விப­ரங்கள் குறித்தும் அவர்­க­ளது வழக்கு விசா­ரணை தொடர்­பான நில­வ­ரங்கள் தொடர்­பா­கவும் விரி­வாக ஆரா­யப்­பட்­டது. தற்­போ­தைய நிலையில் தமிழ் அர­சியல் கைதி­களை பொது­மன்­னிப்பின் அடிப்­ப­டையில் விடு­விக்க முடி­யாது. இதற்­கான சாத்­தி­யப்­பா­டுகள் இல்லை. இதனால் சிறைச்­சா­லை­களில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள நிலையில் விசா­ர­ணை­யின்றி உள்ள கைதி­க­ளையும் வழங்­குகள் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள கைதி­க­ளையும் பிணையில் விடு­விப்­பது என்று தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது. நவம்பர் முதல் வார முடி­வுக்கு இதற்­கான நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­தற்கு முடி­வா­கி­யது.
இது­கு­றித்து கூட்­டத்தில் கலந்­து­கொண்ட தேசிய கலந்­து­ரை­யாடல் அமைச்சர் மனோ கணேசன் கருத்துத் தெரி­விக்­கையில், சிறைச்­சா­லை­களில் தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­தலை குறித்து பிர­தமர் தலை­மை­யி­லான கூட்­டத்தில் ஆரா­யப்­பட்­டது. கைதி­க­ளுக்கு தற்­போ­தைய நிலையில் பொது மன்­னிப்பு வழங்க முடி­யாது என்­ப­தனால் அவர்­களை பிணையில் விடு­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. என்று தெரி­வித்தார்.
தம்மை விடு­விக்கக் கோரி தமிழ் அர­சியல் கைதிகள் சாகும் வரை­யி­லான உண்­ணா­வி­ரதப் போராட்­டத்­தினை நடத்­திய நிலையில் அடுத்த மாதம் ஏழாம் திக­திக்குள் தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­தலை குறித்து தீர்க்­க­மான நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உறு­தி­ய­ளித்­தி­ருந்தார்.
இந்த உறுதி மொழி­யினை கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் சிறைச்­சா­லைக்குச் சென்று தமிழ் அர­சியல் கைதி­க­ளிடம் தெரி­வித்­த­தை­ய­டுத்தே அவர்கள் தமது போராட்­டத்தை கைவிட்­டனர். இந்த நிலையில் கடந்த 19 ஆம் திகதி பிர­தமர் ரணிலய் விக்கிரமசிங்க தலைமையில் கைதிகளின் விவகாரம் குறித்து முதலாவது உயர்மட்டக் கூட்டம் இடம்பெற்றது.
இதனையடுத்தே நேற்றைய தினம் இரண்டாவது விசேட கூட்டம் நடத்தப்பட்டு கைதிகளை பிணையில் விடுப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.  நன்றி வீரகேசரி 





முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்மை தொடர்பாக ஐ.நா.வில் விசாரணை நடத்த வேண்டும்
27/10/2015 வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை தொடர்பாக  ஐ.நா விசாரிக்க வேண்டும் என தேசிய சமாதானப் பேரவை வலியுறுத்தியுள்ளது.

வடமாகாண முஸ்லிம்களின் 25வது வருட வெளியேற்றத்தையிட்டு தேசிய சமாதானப் பேரவை வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே மேற்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
தேசிய சமாதானப் பேரவையின் அறிக்கையில் மேலும் விவரிக்கப்பட்டுள்ளதாவது,
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசாரணை அறிக்கை 2002 ஆண்டு முதல் 2009 வரையான காலத்தை மட்டுப்படுத்தியிருக்கின்றது.
ஆனாலும், இந்தக் காலப்பகுதியோடு மாத்திரம் அதன் விசாரணைகள் நின்று விடாது 1990 ஆம் ஆண்டு வடக்கு மாகாணத்தில் வாழ்ந்த சுமார் 90 ஆயிரம் முஸ்லிம்களின் வெளியேற்றம் பற்றியும் யுத்தத்தின் காரணமாக இடம்பெற்ற இன்னும் பல தீவிர மனித உரிமை மீறல்கள் பற்றியும் பின்னோக்கி விசாரிக்கப்பட வேண்டும் என தேசிய சமாதானப் பேரவை கருதுகின்றது.
இந்த ஒக்ரோபர் மாதத்துடன் வடக்கில் வாழ்ந்த முஸ்லிம் குடி மக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் ஒட்டுமொத்தமாக வெளியேற்றப்பட்ட 25 ஆவது ஆண்டு நிறைவடைகிறது.
வெளியேற்றப்பட்டவர்களில் 80 சதவீதமானோர் தங்களது பூர்வீக வாழ்விடங்களுக்கு வெளியே தொடர்ந்தும்வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

எனினும், இலங்கை மக்களில் ஒரு பிரிவினராகிய இவர்கள் எதிர்நோக்கும் இந்தப் பிரச்சினைக்கு பொது கவனம் அல்லது முன்னுரிமை கொடுக்கப்பட்டு ஒரு நீதியான தீர்வு இதுவரைக் கிட்டவில்லை.
இலங்கையில் நல்லிணக்க, பொறுப்புக் கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்காக ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானம் இலங்கை ஏற்கொண்ட இணை ஆதரவாளரைக் கொண்ட அரசாங்கத்தின் முடிவு நாட்டின் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான ஒரு வாய்ப்பை வழங்குகின்றது.
இன்று கூட, ஆறு ஆண்டுகள் போர் முடிவுக்கு வந்த பிறகும் 1990 ஆம் ஆண்டு ஒரு பெரும் தொகையினராக வெளியேற்றப்பட்ட முஸ்லீம் மக்கள் தற்காலிக வதிவிடங்களில் வாழ்ந்து கொண்டிருப்பது நாட்டில் நீதி மற்றும் நல்லிணக்க செயல்முறையிலுள்ள ஒரு குறைபாடாகவும் குற்றச்சாட்டாகவும் உள்ளது.
இடம்பெயர்ந்த முஸ்லிம்களின் சமீபத்திய மீள்குடியேற்றம் வில்பத்து தேசிய புங்கா அத்து மீறல் என்று சர்ச்சைக்குரிய அத்துமீறலாகக்காட்டப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் சபையின் விசாரணை அறிக்கை 2002-09 வரை மட்டுப்படுத்தப்பட்ட காலமாக இருப்பதால் அதற்கு முன்னுள்ள காலப்பகுதியும் விசாரணைக்காக சேர்க்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி 




உறுகாமம் குளத்தின் இரண்டு வான்கதவுகள் திறப்பு


28/10/2015 மட்டக்களப்பு உறுகாமம் குளத்தின் இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் எஸ்.மோகனராஜா தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் கடந்த 5 தினங்களாக மழை பெய்து வருகின்ற நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உறுகாமம் குளத்தின் 2 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து 3 அங்குலம் நீர்பாய்வதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் குறிப்பிட்டார்.

இந்த குளத்தின் 2 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் இந்த குளத்தினை அண்டியுள்ள முந்தனையாறு நிரம்பிக் காணப்படுவதாகவும் இதே நேரம் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள எந்தவொரு குளத்திற்கும் இதுவரை பிரச்சினை இல்லை எனவும் தொடாச்சியாக எமது திணைக்கள அதிகாரிகளினால் குளங்கள் அவதானிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். நன்றி வீரகேசரி














அமைச்சர் மனோவுடன் இலங்கைக்கான கனடிய உயர் ஸ்தானிகர் சந்திப்பு


28/10/2015 தேசிய கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசனை,  இலங்கைக்கான கனடிய உயர் ஸ்தானிகர் ஷெலி வைடிங் சந்தித்து உரையாடியுள்ளார். 

இராஜகிரியவில் அமைந்துள்ள தேசிய கலந்துரையாடல் அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில்,  கனடிய உயர் ஸ்தானிக அரசியல்துறை பொறுப்பாளர் ஜெனிபர் ஹார்ட், தேசிய கலந்துரையாடல் அமைச்சின் செயலாளர் பேர்ல் வீரசிங்க ஆகியோரும் கலந்துக்கொண்டனர்.
இந்த சந்திப்பு தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் தெரிவிக்கையில்,
இனங்களுக்கு இடையிலான சகவாழ்வை மேம்படுத்தும் எனது தேசிய கலந்துரையாடல் அமைச்சின் பொதுவான நடவடிக்கைகளுக்கும் குறிப்பாக தேசிய ஆட்சி மொழி கொள்கையை நடைமுறைபடுத்தும் செயற்பாடுகளுக்கும் கனடிய அரசாங்கத்தால் வழங்கப்படக்கூடிய உத்தேச ஒத்துழைப்புகள்,  உதவிகள், ஆலோசனைகள் பற்றி இந்த சந்திப்பின் போது உயர் ஸ்தானிகர் ஷெலி வைடிங் எடுத்து கூறினார்.
இதற்கு பதில் அளிக்கும் முகமாக, இந்த அமைச்சுக்கு கனேடிய அரசினால் கடந்த காலத்தில் வழங்கப்பட்ட  ஒத்துழைப்புகள் மற்றும் உதவிகள் ஆகியவற்றுக்கு நான் நன்றி தெரிவித்தேன்.  
முந்தைய ஆட்சிகளின் போதும்  தமிழ் மொழியை சிங்கள மொழியுடன் இணைந்த சக ஆட்சி மொழியாக நடைமுறைபடுத்துவதற்கு அரச கரும மொழிக்கொள்கை, அரச கரும மொழி திணைக்களம், அரச கரும மொழி ஆணைக்குழு மற்றும் அமைச்சுடன் கூடிய அமைச்சரும் இருந்தும் தேவைப்பட்ட அரசியல் உறுதிப்பாடு இல்லாமல் இருந்தது. 
இன்று அந்நிலைமை மாறியுள்ளது. என்னிடமும், எமது அரசாங்கத்திடமும் இது தொடர்பில் தேவையான அரசியல் உறுதிப்பாடு  இன்று இருக்கின்றது. தற்போது ஒரு மாதமாகவே அமைச்சராக என் கடமைகள் ஆரம்பமாகியுள்ளன. இவைகளின் பலாபலன்  விரைவில் நடைமுறையில் தெரிய வரும். கனடாவில்  ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளுக்கு நடைமுறையில் வழங்கப்பட்டுள்ள சம அந்தஸ்த்துடன் கூடிய சமகால வரலாறு எங்களுக்கு பெரிதும் வழிகாட்டுகிறது. 
அரசாங்கத்தின் மொழியுரிமை கொள்கையை நடைமுறை படுத்துவது தொடர்பில் கனேடிய அரசின் கடந்த கால ஒத்துழைப்புகள் மற்றும் உதவிகள் மேலும் அதிகரித்த அளவில் எமது  அமைச்சுக்கு வழங்கப்பட வேண்டும் என நான் கேட்டுக்கொண்டேன் என அவர் தெரிவித்தார்.  நன்றி வீரகேசரி 






கே.பி. குறித்து 4 விசா­ரணை அறிக்­கைகள்


29/10/2015 விடு­தலைப் புலி­களின் சர்­வ­தேச ஆயுத விநி­யோ­கஸ்­த­ரான குமரன் பத்­மநாதன் என்ற கே.பி. தொடர்பில் நான்கு விசா­ரணை அறிக்­கை­களை நீதி­மன்­றுக்கு சமர்ப்பித்­துள்­ள­தாக
சட்ட மா அதிபர் நேற்று மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றுக்கு அறி­வித்தார்.

கே.பி.யை. கைது செய்து அவ­ருக்கு எதி­ராக சட்ட நடவ­டிக்கை எடுக்­கு­மாறு வலி­யு­றுத்தி மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் விஜித்த ஹேரத் தாக்கல் செய்த மனு நேற்று மேன் முறை­யீட்டு நீதி­மன்றின் தலைமை நீதி­பதி விஜித் மலல்­கொட முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­ட­து இதன்போதே சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் ஆஜ­ரான மேல­திக சொலி­சிற்றர் ஜெனரல் ஜயந்த ஜய­சூ­ரிய இந்த விட­யத்தை மன்­றுக்கு தெரி­யப்­ப­டுத்­தினார்.
பொலி­ஸா­ரினால் மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­ணை­க­ளுக்கு அமை­வாக இந்த நான்கு விசா­ரணை அறிக்­கை­களும் தயார் செய்­யப்­பட்­ட­தா­கவும் அவை கடந்த ஜூன் 4, ஜூன் 19, ஜூலை 21 மற்றும் ஒக்­டோபர் 15 ஆகிய திக­தி­களில் மேன் முறை­யீட்டு மன்­றுக்கு சமர்­பிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் மேல­திக சொலி­சிற்றர் ஜெனரல் ஜயந்த ஜய­சூ­ரிய சுட்­டிக்­காட்­டினார்.
விஜித்த ஹேரத் தாக்கல் செய்த ரீட் மனு மீதான விசா­ர­ணையில், கே.பி. தொடர்பில் செய்­யப்­பட்­டுள்ள விசா­ரணை நடவடிக்கை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க ஏற்­க­னவே கால அவ­கா­சத்தை மேன் முறை­யீட்டு மன்று வழங்­கி­யி­ருந்த நிலை­யி­லேயே நேற்று இந்த வழக்கு விசா­ர­ணைக்கு வந்­தது. இந் நிலை­யி­லேயே விசா­ரணை அறிக்­கையை மன்­றுக்கு தாக்கல் செய்­து­விட்­ட­தாக சட்ட மா அதிபர் சார்பில் ஆஜ­ரான மேல­திக சொலி­சிற்றர் ஜெனரல் தெரி­வித்தார்.
இத­னை­ய­டுத்து குறித்த விசா­ரணை அறிக்­கைகள் நான்கும் வழக்குக் கோவைக்குள் இல்­லாமல் இருப்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. இத­னை­ய­டுத்து உட­ன­டி­யாக அந்த அறிக்­கைகள் நான்­கையும் வழக்குக் கோவையில் இணைக்க நீதிவான் உத்­த­ர­விட்டார்.
இந் நிலையில் இது தொடர்பிலான அடுத்த கட்ட விசாரணைகள் நவம்பர் மாதம் 13 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.அது வரை கே.பி.இற்கு விதிக்கப்பட்டுள்ள பயணத் தடையும் தொடரும் என நீதிமன்றம் அறிவித்தது. நன்றி வீரகேசரி

No comments: