அவுஸ்திரேலியாவில் மெல்பேண் நினைவுவணக்க நிகழ்வு

.

கடந்த 18-10-2015 அன்று புற்றுநோயால் பீடிக்கப்பட்டு சாவைத் தழுவிக்கொண்டதமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் மகளீர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினி என்று அழைக்கப்பட்ட சிவசுப்பிரமணியம் சிவகாமி மற்றும்அண்மையில் நியூசிலாந்தில் சாவைத் தழுவிக் கொண்ட தமழ்த்தேசியச் செயற்பாட்டாளர் தேவராஜன், அண்மையில் தாயகத்தில் கிளிநொச்சியில் சாவடைந்ததமிழ்த்தேசியத்தின் முன்னோடியான காந்தியம் டேவிற் ஐயா ஆகியோர்களுக்கானநினைவு வணக்கநிகழ்வு ஒஸ்ரேலியாவில் மெல்பேண் நகரில் தமிழர்ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் 25-10-2015 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00மணிக்கு Vermont South community Centre மண்டபத்தில் மிகவும்  உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர் கொற்றவன் தலைமையில் நடைபெற்றஇந்நிகழ்வில் தமிழினிஅவர்களின் திருவுருவப்படத்திற்கு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மூத்த செயற்பாட்டாளரும் விக்ரோறியா மாநிலத்தின் நாடுகடந்ததமிழீழஅரசின் விக்ரோரிய மாநில பிரதிநிதியுமான திரு சபேசன் சண்முகம் அவர்கள்ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினார்.


அதைத் தொடர்ந்து தேவராஜன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு தமிழர்ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டாளர் திரு மகேந்திரம்அவர்கள்ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து காந்தியம் டேவிற்ஐயா அவர்களது திருவுருவப்படத்திற்குதமிழ்த்தேசியச்செயற்பாட்டாளர் திரு குணரட்ணம் அவர்கள் ஈகைச்சுடரேற்றிமலர்வணக்கம் செலுத்தினார்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து தமிழினி தேவராஜன் டேவிற்ஐயா ஆகியோர்களதுதிருவுருவப்படங்களுக்கு நிகழ்வில் கலந்துகொண்டிருந்த பொதுமக்கள் அனைவரும்மலர்வணக்கம் செலுத்தினார்கள்.
தலைமையுரையைத் தொடர்ந்து தமிழினி அவர்களின் புகழுடலுக்கான இறுதிவணக்கநிகழ்வின்போது பதிவாக்கம் செய்யப்பட்ட வீடியோக்காணொளி அகலத்திரையில்திரையிடப்பட்டது.
தொடர்ந்து தமிழினி தொடர்பான நினைவுரையை திரு சபேசன் சண்முகம் அவர்கள்நிகழ்த்தினார்அதனைத் தொடர்ந்து காந்தியம் டேவிற் ஐயா அவர்கள் தொடர்பானநினைவுரையை தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர் திரு. குணரட்ணம்அவர்கள்நிகழ்த்தினார்.
தொடர்ந்து தேவராஜன் அவர்கள் தொடர்பான நினைவுரையை தமிழர்ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டாளர் திரு வசந்தன்அவர்கள் நிகழ்த்தினார்.
இறுதியாக தமிழினிஅவர்களின் மறைவையொட்டி வடமாகாணசபையின்முதலமைச்சர் திரு சி.வி.விக்கினேஸ்வரன்அவர்கள் விடுத்த இரங்கற்செய்தியைநிகழ்வின் தலைவர் கொற்றவன்அவர்கள் வாசித்ததையடுத்து உறுதிமொழியோடுநினைவுவணக்கநிகழ்வு நிறைவடைந்தது.

No comments: