தி. சுவாமிநாதன், நாமக்கல், தாலி அன்பினால் இணைந்த வேலி

.

‘தாலம்’ என்ற பெயர்தான் காலப்போக்கில் தாலியாக மாறியிருக்கிறது. தாலம் பனை என்ற பனை ஓலையால் செய்த ஒன்றையே பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் மணமகன் மணமகள் கழுத்தில் கட்டி வந்த நிலை இருந்துள்ளது. பனை ஓலைத்தாலி அடிக்கடி பழுதுப்பட்டதால் நிரந்தரமாக இருக்க பிற்காலங்களில் உலோகத்தால் ஆன தாலி செய்து பயன்படுத்தத் தொடங்கினர்.

இன்றைய திருமாங்கல்யச் சரடனானது ஒன்பது இழைகளைக் கொண்டது. ஒவ்வொரு இழைகளும் ஒவ்வொரு நற்குணங்களைக் குறிக்கின்றது. அவை தெய்வீகக் குணம், தாய்மை, மேன்மை தொண்டுள்ளம், தன்னடக்கம், ஆற்றல், விவேகம், உண்மை, உள்ளதை உள்ளபடி புரிந்து கொள்ளுதல் ஆகும். ஒரு விரலி மஞ்சளை எடுத்து மஞ்சள் கயிற்றால் கட்டி கழுத்தில் முடிச்சுப் போடுவது கூடத் தாலிதான். இது காலம் காலமாய் நாம் பின்பற்றி வரும் சம்பிரதாயமாகும்.12 வகை தாலிகள்:
தாலிக்கு மாப்பிள்ளை வீட்டார்தான் தங்கம் தருவார்கள் அல்லது தாலி செய்து தருவார்கள். தாலியில் 12 வகை உள்ளது. அவை முறையே பிள்ளையார்தாலிää அம்மன்தாலிää லட்சுமி தாலிää மூன்று கொம்புத் தாலிää லிங்கத் தாலிää புலிப்பல் தாலிää பாப்பயத்; தாலிää பவளத்தாலிää பொட்டுத்தாலிää சிவதாலிää புறாத்தாலிää கிருஷ்ண தாலி ஆகியவைகளாகும். தென்னிந்தியாவில் இடத்திற்கு இடம் தாலியின் வகை மாறுபடுகிறது.

தாலி கட்டும் முறை:
கூறை புடவைஉடுத்தி வந்த மணமகள் வலப்புறத்தில் கிழக்கே நோக்கி அமரää குறித்த சுப முகூர்த்தத்தில் மணமகன் எழுந்து மணமகளின் வலப்புறம் சென்று வடக்கு நோக்கி நின்று இறைவனைத் தியானித்து குருக்கள் ஆசிர்வதித்துக் கொடுக்கும் மாங்கல்யத்தை கெட்டி மேளம் முழங்க அட்சதைத்தூவிää பெண்ணின் கழுத்தில் திருமாங்கல்யம் பூட்டுவார். காரணம் தெரியாமலேயே பல சடங்குகள் நடக்கிறது. அதைப் புரிந்து நடக்கின்ற போது அதன் பலன் மேலும் அதிகரிக்கும். நம்நாட்டில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அந்நியர்கள் படை எடுப்பு நடைபெற்ற பொழுது அவர்களிடமிருந்து தற்காத்துக் கொள்ளும் பொருட்டு பெண்கள் தாலி அணியத் தொடங்கினார்கள் என்று  வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மூன்று முடிச்சின் தத்துவம்:
பிறந்த வீட்டின் மகத்துவம் காப்பதற்கும்ää புகுந்த வீட்டின் மகத்துவம் காப்பதற்கும்ää கொண்ட கணவனை போற்றுவதற்கும் மூன்று முடிச்சு போடப்படுவதாக பெரியவர்கள் தெரிவிக்கிறார்கள். ஒரு வீடு அழகாய் இருப்பதற்கு முக்கியக் காரணம் பெண்தான். தாலி நமது கலாச்சார சின்னம். ஒரு சிலர் தங்கத் தாலிக் கொடியின் உள்ளே மஞ்சள்நூல் வைத்திருப்பார்கள். 10 அல்லது 16 வருடங்களில் தாலியை புதுப்பிக்கலாம்.
  கற்காலத்தில் குகைகளில் ஏனைய மிருகங்களோடு மனிதன் வாழ்ந்தான். படிப்படியாக எழுத்துக்கள் தோன்றியது. நாகரீக வளர்ச்சி ஏற்பட்டது. காலப்போக்கில் பல சடங்குகள் சம்பிரதாயங்கள் படிப்படியாக தோன்றின. அவைகளில் ஒன்றுதான் இந்த திருமாங்கல்யம் அணியும் பழக்கம். நம் நாட்டில் ஆயிரம் ஆண்டுகளாக தொடர்கிறது. உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது நமது முன்னோர்கள் தீர்க்கதரிசிகள்ää தனித்தன்மை வாய்ந்தவர்கள். நிகரற்றவர்கள். அவர்கள் வடிவமைத்து கொடுத்த பல கொடைகளில்  இதுவும் ஒன்று.
கட்டாயத்தாலி கட்டுவது மிகவும் தவறானது. மணப்பெண்ணின் சம்மதமின்றி கட்டாயத்தாலி கட்ட முயற்சித்து பொதுமக்களிடம் தர்ம அடி வாங்கி போலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட வாலிபர்களும் உள்ளனர்.
அனைத்து சக்தியையும் கொடுப்பவள் பெண். சக்தி இருந்தால்தான் (சிவம்)மனிதன் செயல்பட முடியும். திருடர்களில் கூட தாலியைத் திருடுவதற்கு பறிப்பதற்கு தயங்குபவர்கள் உள்ளனர். திருடர்களின் கண்ணுக்கும் தாலி உயர்ந்ததாகப் படுகிறது.

தாலியின் மகத்துவம்:
தாலி அணிந்த பெண் திருமணமானவள் என்பது தாலியின் முக்கிய குறியீடாகும். கணவன் வாழும்வரை மனைவி மார்பில் எப்பொழுதும் இத்தாலி தவழ வேண்டும். அவனை நெஞ்சோடு தான் தாங்கி வாழும் தன்மையை காலம் முழுவதும் அப்பெண் எடுத்துக் காட்டுகிறாள். ஆடவர் ஒரு பெண்ணின் கழுத்தில் தாலியைப் பார்க்கும் போது இவள் மற்றவனுக்கு உரியவள் என ஒதுங்கிப் போய் விடுவர். தாலி என்பது பெண்ணுக்கு அன்பினால் இணைந்த வேலியாக உள்ளது. தாலி அணிந்த பெண்  விவாகமாகியவள். அவள் ஒரு சுமங்கலி என்பதைக் காட்டுகிறது.
            இதர அணிகலன்கள் வேண்டும்போது, அணியப்படுவது. தேவை இல்லாத போது கழற்றி வைக்கப்படுவது. ஆனால் திருமாங்கல்யம் கட்டப்படுவதுää அது கணவன் உயிருள்ளவரை மனைவி கழுத்தில் இருக்க வேண்டியது ஆகும். நம் நாட்டு பெண்கள் தாலியை தன் உயிருக்கு நேராக நேசிக்கின்றனர். தினம் குளிக்கும் போது முகத்திற்கும், தாலி கயிற்றிற்கும் மஞ்சள் தடவும் போது நிறம் மாறாமல் இருக்கும். சீதா தேவியார் இராவணனால் கவரப்பட்ட பொழுது எல்லா அணிகலன்களையும் கழற்றி எறிந்தார். திருமாங்கல்யம் மட்டும் சீதாதேவியின் கழுத்தில் அணி செய்து கொண்டிருந்தது என ராமாயணம் தெரிவிக்கிறது. எந்த ஒரு சுழ்நிலையிலும் தாலியை பெண்கள் உயர்வாக நிகரற்றதாகவே கருதுகிறார்கள்.

ஒரு  நாட்டின் தேசியக் கொடியை வெறும் துணியால் ஆனதாக நம் மனம் பார்ப்பதில்லை. உயர்வாக, உன்னதமானதாக நம் உயிராகக் கருதுகிறோம். அது போலவே நம் பெண்களும் திருமாங்கல்யம் விவரிக்க இயலாத உயர்வைத் தருவதாக கருதுகிறார்கள்.
திருமணத்தில் மட்டுமல்லää அறுபதாம் கல்யாணத்திலும்ää சதாபிஷேகத்திலும் தாலி கட்டுவது உண்டு. அவள் சுமங்கலியாக இயற்கை எய்தியபிறகு, உடலை சிதையில் சேர்க்கிறோம். இறந்த பிறகு அந்;தத் தாலியின் பயன்பாடு நிறைவு பெற்ற பிறகு,  தாலியை உருக்கி வேறு அணிகலனாகப் பயன்படுத்துவது பொருந்தும். அது தவறல்ல என பெரியவர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஒரு ரூபாய் மஞ்சள் கயிறாக இருந்தாலும் ஒரு பெண்ணுக்கு தாலிதான் மிகப்பெரிய சொத்து. ஒரு பெண்ணின் பாதுகாப்பையும் சமூகத்தில் மரியாதையையும் கொடுக்கிறது. இந்தியப் பெண்கள் தாலியை புனிதமாகக் கருதுகிறார்கள். பஞ்சபூதங்களின் சக்தியாக பெண்களுக்கு தாலி விளங்குகிறது. திருமாங்கல்யம் என்றும் மகத்துவம் வாய்ந்த சொல். குடும்ப உறவுகளை மங்களகரமான மஞ்சள் கயிற்றில் பின்னிப் பினைந்திடும் என்கின்றனர்.
தம்பதிகளின் வாழ்விற்கான அச்சாரமாக தாலியை கருதுகிறார்கள். அனைத்து உறவுகளையும்விட தாலியின் உறவு வலிமையானது. தாலி மூலமே பல புதிய உறவுகள் உதயமாகின்றன. பெண் எவ்வளவு நகை அணிந்திருந்தாலும் அது தாலிக்கு இணையாகாது. தாலியை பெண்களிடமிருந்து பிரிக்கவே முடியாது. பெண்கள் தாலியை புனிதமாக நினைத்து குங்குமம் வைத்து போற்றி வருவதை கண்ணில் ஒற்றிக் கொள்வதை பார்க்க முடிகிறது. சுமங்கலி பூஜை செய்யும் பெண்கள் உள்ளனர். நம் நாட்டில் நகைக்கடைகளில் தாலி இல்லாத கடைகளே பார்க்க முடியாது.

மாற்றுக் கருத்து உடையவர்கள்:
தாலி வேண்டாம் என்று மாற்றுக்கருத்து சொல்பவர்களும் நம்மிடையே உள்ளனர். அது தவிர்க்க முடியாதது. பண்பாட்டை சிதைக்கச் செய்யும் தேவையற்ற வாதமாகவே பார்க்கப்படுகிறது. அவர்கள் மாற்று மதத்தவர்கள் பர்தா அணிவத, சிலுவை போடுவதை துணிவுடன் பேச முடியாதவர்கள் என்ற கருத்து ஆழமாக நிலவுகிறது. அவர்கள் சொல்வது போல் நடைமுறையில் தாலியை அடிமைச் சின்னமாக எந்த பெண்மணியும் பார்ப்பதில்லை. கற்காலத்தில் மிருகங்களின் வாழ்க்கையை வாழ்ந்த நாட்களில் நாகரீகம் வளராத காலகட்டத்தில் தாலி அணியும் பழக்கம் இல்லை.
மாற்று மதத்தவர்களின் சமயப் பண்பாடுகளை அமைதியாக ஏற்றுக் கொள்வது போல நமது யாருக்கும் துன்பமற்ற கலாச்சார, பண்பாட்டு பழக்கங்களை விமர்சிப்பதை தவிர்த்து, நமது முன்னேற்றத்திற்கு, நாட்டின் வளர்ச்சிக்கு நமது கவனத்தை திருப்பலாம். எப்பொழுதும் நமக்கு அருகிலேயே உள்ள பொருளின் மகத்துவத்தை நாம் உணர்வதில்லை. தாகம் எடுக்கும் போதுதான் ஒரு துளி தண்ணீரின் அருமை தெரியும். திருமண வாழ்வு அமையாத, இளம் வயதில் கணவனை இழந்த பெண்களுக்கு மிக நன்றாக தெரியும் தாலியின் அருமை.
சமுதாயத்தில் எப்பொழுதுமே ஏதாவது ஒரு தத்துவம் இருந்து கொண்டேதான் இருக்கும். ஏனென்றால் மனிதன் தத்துவத்தை சிருஷ்டி செய்து கொண்டிருக்கும் பிராணி. குடிப்பழக்கம், புகைப்; பழக்கம்;ää கொலைää கற்பழிப்பு போன்ற சமூக சீர்;கெடுகளை கடுமையாக எதிர்க்கலாம். தவறில்லை. ஆனால் தாலி அணியும் பழக்கத்தால் நம் சமுகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. கணவர் உயிருடன் இருக்கும் போது எந்தப் பெண்ணும் தாலியை அகற்றமாட்டாள். நமது பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியம் சிதையக் கூடாது எ;னபவர்களே மிகுதியாக உள்ளனர். தாலிக் கட்டுவதால் பெண்களுக்கு பெருமையே தவிர என்றுமே இழிவு கிடையாது என்றுதான் நமது இந்தியப் பெண்கள் கருதுகின்றனர்.
                                                                             தி. சுவாமிநாதன்
                                                                                   நாமக்கல்

No comments: