.
போலந்து பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி
பல்மைரா நகரிலுள்ள தூண்களில் கட்டி வைத்து வெடிக்க வைத்து மூவருக்கு மரணதண்டனை
ஆஸி.யின் மோர்லாண்ட் நகரின் மேயராக இலங்கைப் பெண் தெரிவு
போலந்து பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி
போலந்து பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி
பல்மைரா நகரிலுள்ள தூண்களில் கட்டி வைத்து வெடிக்க வைத்து மூவருக்கு மரணதண்டனை
ஆஸி.யின் மோர்லாண்ட் நகரின் மேயராக இலங்கைப் பெண் தெரிவு
போலந்து பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி
27/10/2015 போலந்து பாராளுமன்றத் தேர்தலில் பழைமைவாத எதிர்க்கட்சியான சட்டமும் நீதியும் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதுவரை வெளியான பெறுபேறுகளின் பிரகாரம் அந்தக் கட்சி 39 சதவீத வாக்குகளைப் பெற்றுள் ளது.
அந்தக் கட்சி பாராளுமன்றத்தில் தனித்து ஆட்சி அமைப்பதற்கு தேவையான ஆசனங்களைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி கட்சியின் தலைவர் ஜரோஸ்லோ கக்சின்ஸ்கி பிரதமர் வேட்பாளராக தனது உறவினரான பீற்றா ஸசிட்லோவை தெரிவு செய்திருந்தார்.
இந்நிலையில் பதவியை விட்டு வெளியேறிச் செல்லும் பிரதமர் ஈவா கொப்பாக்ஸ் தனது தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளார்.
சட்டமும் நீதியும் கட்சியானது கிராமப் பிராந்தியங்களில் பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது.
ஜரோஸ்லோ கக்சின்ஸ்கி 2001 ஆம் ஆண்டில் தனது சகோதரரான லெச் கக்சின்ஸ்கியுடன் இணைந்து சட்டமும் நீதியும் கட்சியை ஸ்தாபித்திருந்தார்.
அவர் 2006/-2007 ஆம் ஆண்டு காலப் பகுதியில் தனது சகோதரர் லெச் ஜனாதிபதியாக பதவி வகித்த கால கட்டத்தில் பிரதமராக பதவி வகித்திருந்தார்.
லெச் 2010 ஆம் ஆண்டில் ரஷ்யாவில் இடம்பெற்ற விமான விபத் தில் உயிரிழந்தார்.
தேர்தல் வெற்றி யையடுத்து ஜரோ ஸ்லோ கக்சின் ஸ்கி உரையாற் றுகையில், தமது அரசாங்கம் சட்ட அமுலாக் கத்தில் கவனம் செலுத்தும் என
வும் பழிவாங் கும் நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படமாட்டாது எனவும் கூறினார்.
“தமது சொந்தத் தவறுகளால் விழுந்தவர்களை உதைக்கும் நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்பட மாட்டாது" என அவர் குறிப்பிட்டார்.
அதேசமயம் புதிய பிரதமராக தெரிவாகியுள்ள பீற்றா ஸசிட்லோ, தனக்கு ஆதரவு வழங்கியமைக்காக போலந்து மக்களுக்கு நன்றியைத் தெரிவித்தார்.
''மறைந்த ஜனாதிபதி லெச் கக்சின்ஸ்கியைப் பின்பற்றி எமக்கு முன்னாலுள்ள அனைத்து சவால்களையும் எதிர் கொள்வோம்'' என அவர் கூறினார்.
"போலந்து மக்கள் தமது எதிர்பார்ப் புகள் மற்றும் தேவைப்பாடுகள் குறித்து எமக்குத் தெரிவித்து எமக்கு வாக்களித் திருக்காவிட்டால் நாம் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றிருக்க முடியாது" என அவர் தெரிவித்தார். நன்றி வீரகேசரி
பல்மைரா நகரிலுள்ள தூண்களில் கட்டி வைத்து வெடிக்க வைத்து மூவருக்கு மரணதண்டனை
28/10/2015 ஐ.எஸ். தீவிரவாதிகள் சிரியாவிலுள்ள பண்டைய நகரான பல்மைராவிலுள்ள தூண்களில் மூவரை கட்டி வைத்த பின்னர் அந்த தூண்களை வெடி வைத்து தகர்த்து அவர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றியுள்ளதாக சிரிய மனித உரிமைகள் அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நிறைவேற்றப்பட்ட இந்த மரண தண்டனைகள் குறித்து சர்வதேச ஊடகங்கள் செவ்வாய்க்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
மேற்படி மூவருக்கும் எதற்காக மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது என்பது தொடர்பில் தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
அந்த மூவருக்குமான மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட இடத்திற்கு உள்ளூர்வாசிகள் சென்ற போது அங்கிருந்த அலங்காரத் தூண்கள் வெடித்துச் சிதறியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. நன்றி வீரகேசரி
காணாமல்போன ரஷ்ய விமானம் வெடித்து சிதறியது
ஆஸி.யின் மோர்லாண்ட் நகரின் மேயராக இலங்கைப் பெண் தெரிவு
30/10/2015 அவுஸ்திரேலியாவின் மோர்லாண்ட் நகர மேயராக இலங்கைப் பெண் ஒருவர் முதல்முறையாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் கிறீன் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்ட சமந்தா இரட்ணம் என்ற பெண்ணே இவ்வாறு மேயராகத் தெரிவாகியுள்ளார்.
சமாந்தா, தொழிற்கட்சி வேட்பாளரைத் தோற்கடித்து தோ்தலில் வெற்றியீட்டியுள்ளதுடன், இதற்கு முன்னர் இரு தடவைகள் மேயர் பதவிக்காக போட்டியிட்ட போதிலும் வெற்றிபெறவில்லை.
இலங்கையில் பிறந்த சமந்தா இரட்ணம், உள்நாட்டு யுத்தம் காரணமாக பெற்றோருடன் கடந்த 1989 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் குடியேறியுள்ளார்.
வெற்றியைப் பொறுத்தவரை கடந்த இரு வருடங்களைவிட இவ் வருடம் அதிக நம்பிக்கையுடன் இருந்ததாக சமந்தா தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி
காணாமல்போன ரஷ்ய விமானம் வெடித்து சிதறியது
31/10/2015 காணாமல்போன ரஷ்ய விமானம் வெடித்துச் சிதறியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
எகிப்தின் ஷாம் எல்ஷேக் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ரஷ்ய விமானமான ஏ - 321 என்ற விமானம் வெடித்துச் சிதறியுள்ளது.
குறித்த விமானத்தில் 217 பயணிகளும் 7 விமான பணியாளர்களும் பயணித்துள்ளனர்.
விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானம் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்தது.
விமானத்தில் ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் அதிகமாக பயணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது. எகிப்து எல்லையை கடந்து ரஷ்யா நோக்கி சென்ற போது சின்னை தீபகற்பத்திற்கு அருகில் விமானம் வெடித்து சிதறியுள்ளது.
விமானத்தில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது. இதனை எகிப்து பிரதமர் உறுதி செய்துள்ளார். இதனை அடுத்து தேடுதல் நடவடிக்கை முடிக்கி விடப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment