.
sakthikanal |
அரங்கக்ககலையான எமது நாட்டியங்களை மேடையேற்றும் பொழுது, அரங்கத்தை எவ்வாறு கையாழ்வது என்பதில் கவனம் செலுத்தாவிட்டால் நாட்டியம் வெற்றி பெறமுடியாது. நாட்டிய நாடகம் தொடர்பறாது நடைபெறும் பொழுது தான் நாம் மக்களின் மனதில் பாதிப்பை ஏற்படுத்த முடியும். எனது தயாரிப்பிலான நாட்டிய நாடகங்களில் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை திரை மூடப்படுவது கிடையா. அது தவிர காட்சிக்கு காட்சி சில நொடிகளும் இடைவெளியில்லாது திரைபடம் போண்று கதையுடன் நாட்டியம் நடைபெற வேண்டும். அவ்வாறு ஏற்பட்டால் நாட்டியத்தில் தொய்வு ஏற்பட்டு விடும். அதற்கு மேலும் எனது நாட்டிய நாடகங்களில் எந்த காட்சிப் பொருளோ, காட்சியுடனான திரைச் சேலையோ இணைக்கப்படுவது கிடையாது. நாட்டியம் என்பது மேடையில் இல்லாத ஒன்றை இருப்பது போல நாட்டியத்தால் உருவகப்படுத்தி பார்வையாழரையும் அதை உணர வைப்பதே. அதனால் நாட்டியத்திற்கு பக்கத்துணையாக பொருட்களோ சீன் செட்டிங்கோ வேண்டியதில்லை. இன்றோ இலத்திரன் உலகம், காட்சியை பின்திரையில் SLIDE மூலம் காட்டுகிறார்கள். இவ்வாறாக காட்சிகளை காட்டுவது மனிதரது கற்பனைகளை கட்டுப்படுத்துவதாகும். கலைஞன் உருவகப்படுத்துகிறான், கலாரசிகள் உணர்கிறான். கலா இரசிகர்களும் கற்பனை வளம் மிக்கவர்களே. நாட்டிய கலைஞர் இசையுடன் இணைந்து ஒன்றை உருவகப்படுத்த கலா இரசிகன் அதை உணருவதுதான் முளுமையான கலை. இதுவே கீழத்தேயம் கண்ட, வழர்த்த நாட்டியயுக்தி. மேடை அலங்காரம், மேடையில் காட்சியாவும் கலை மெருகு குறைந்த மேலை நாம்டில் இருந்து நாம் பெற்றவை.
இதை ஒரு உதாரணத்தால் விளக்கலாம். எனது “சக்திகனல்” என்ற நாட்டியத்தில் மூன்று சக்திகளையும் உருவக படுத்தினேன். செல்வத்தின் உருவான லக்ஷமியை ஒரு நாட்டின் இயற்கை வழங்களான நீர்வளம், நிலவளமே நாட்டின் செல்வம். அவற்றை நாட்டியமாக உருவக படுத்தினேன். அடுத்து சரஸ்வதி அறிவு, ஒரு நாட்டின் அறிவு வழர்ச்சி என்பது அங்கு வளர்ந்திருக்கும் தொழில் நுட்பத்தை குறிப்பது. அறிவெண்ற ஒண்றே இந்த தொழிலை விருத்தி செய்பவை. அதை விளக்க தொழில் சாலையை நாட்டியமாக உருவக படுத்தினேன். எனது மனதிலே நான் சிறுமியாக பார்த்த காங்கேசன்துறை சீமந்து கால்சட்டை அணிந்து வெறும் மேலுடன் வேகமாக பலவித ஆட்டங்களால் ஆலையை உருவக படுத்தினார்கள். மங்கிய ஒழியில் அவர்கள் உடல்கள் மட்டுமே கறுப்பு உருவமாக தெரிய ஆடினார்கள். மேடையின் பின்புற திரையில் தொழில் சாலையில் தோன்றும் நெருப்புசுவாலையை காட்டும் முகமாக பும், பும் என சிவப்பு நிறம் தோன்றி மறைந்தது. மறுநாள் காட்சி தர அவர்கள் உடலில் எண்ணையை தடவி இருந்தமை நல்ல யுக்தி என்றார்” திகைப் படைந்தேன். ஆடிய பையன்கள் வேகமாக ஆடியதால் தோன்றிய வியர்வை அவருக்கு எண்ணையாக தெரிந்தது. இங்குதான் கலைஞன் உருவக படுத்தியதை, கற்பனை மிகுந்த கலா இரசிகர் கண்ணில் மேலும் மெருகேறி தோன்றியதை உணர்ந்தேன். இந்த நாட்டியம் “சக்திக்கனல்” எந்த வார்த்தைகளும் அற்று வெறும் வாத்திய இசைக்கே அமைந்தது இதற்காக இசையை நா முத்துசுவாமி அமைத்திருந்தார்.
இதுபற்றி N.Rajagopaln the Melodic Garland Biographical Dictionary of Composers, Musucians
& Dancers எழுதியது.
Karthiga’s
irrepressible urge for innovation and novelty has led to sparkling in
presentation, perhaps designed to take the art better appreciated by audience 11
Western Countries. She belives in minimal equipment on the stage limited to
lighting and costumes, so that the art loving viewer’s attention is focussed
mainly on the dancer’s presentation indicating robust self assurance and self. Confidence.
Some of her productions have been presented with orchestral music alone sgns vocal music. Since 1975, she has brought
forth many specialized presentation.
எனது உதயம் நாட்டிய நாடகமும், சக்திகனலும் வெறும் இசையை பின்னணியாக கொண்டவையே. சென்னையில் வாழ்ந்த போது, CADET இற்கான அகில இந்திய போட்டிக்காக, தமிழக இளைஞர் யுவதிகளை பயிற்றினேன். M.B. சிறீனிவாசன் இசையமைத்தார். இந்த தயாரிப்பு அகில இந்திய போட்டியிலே மூன்றாவது இடத்தை பெற்றது. நான் வார்த்தைகளே இல்லாத இரையை தெரிந்ததன் காரணம் பல மொழிகளை கொண்ட இந்தியரும் போட்டிகிரும் போது அங்கு யாவருக்கும் புரியும் படியாக நடனம் அமைய வேண்டும். மொழி உபயோகித்தால் யாவருக்கும் புரியாதே என்ற நோக்கமே காரணமாக இருந்தது.
எனது நாட்டிய நாடகங்களில் ஒளி அமைப்பை முக்கியமானதாக கருதினேன் ஒளி அமைப்பு மூலம் பல யுக்திகளைக் கையாளமுடியும். இதுவே ஒரு தனிக்கலை மேடையில் எந்தக் காட்சிப்பொருளும் இல்லாது நாட்டியத்தை தங்கு தடை இன்றி நடத்த ஒளி அமைப்பு மிகவும் முக்கியம் . ஒளி அமைப்பை அழகாக கையாளுவதன் மூலம் மக்கள் மனதில் பூடகமாக பல உணர்வுகளை ஏற்படுத்த முடியும்.
எனது சிரேஸ்ட மாணவர் இதை முறையாக அறிந்திருக்க வேண்டும் என்பதற்காக அவர்களில் சிலரை எனது நிகழ்ச்சியின் போது ஒளி அமைப்புக்கு பொறுப்பாக பழக்கி உள்ளேன்.எனது தங்கை உஷா நாதன் , ஆனந்தராணி பாலேந்திரா , சிவாஞ்சலி சிவாபசுபதி , ஷீலா நடராஜா, எனது மகன் அமிழ்தன் எம்முடன் எப்பொழுதும் ஆடிவந்த தர்மேந்திரன் திருஞானசெல்வம் ஆவார்கள் இலங்கையிலே முதன் முதல் ஒளி அமைப்பை நின்று நடத்திய பெண்கள் எனது மாணவியரே என சிங்கள கலைஞரும் போற்றினார்கள் . ஆடலை கற்பவர்கள் அரங்க கலையை முறியாக அறிந்திருக்க வேண்டும் என விரும்பினேன்.
மேலும் காட்சி அமைப்பு எதுவும் இல்லாத போதுதான் கற்பனை விரிவடைய முடியும். கலை உண்மையை போலியாக உருவகித்து உணரவைப்பது. சிறந்த கலைஞரால் மட்டுமே இது சாத்தியமாகும். அபிநயத்தில் அரதிருமதி பாலசரஸ்வதி சி என வர்ணிக்கப் பட்டவர் . அவரது பரதக் கச்சேரியை அவருக்கு 60 வயதிருக்கும் போதே பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. நந்தனார் சரித்திரத்தில் " மலை போல் கிடக்குதே மாடு" என்ற பாடல் மலைபோல் நந்தி சிவனை தரிசிக்க முடியாமல் மறைக்கிறது . பறையனான நந்தனுக்கோ கோவிலின் வெளியே இறையை வணங்க முடியும். இந்த நிலையை அவர் ஆடியபோது அவர் பட்ட அவஸ்தை எட்டி எட்டி சிவ தரிசனத்தை பெற முயல்வது மனதை உருக்கும் காட்சி . அங்கு மேடையிலே நந்தி கிடையாது . இருந்தும் பார்வையாளனாக அமர்திருந்த நான் ஓடிப்போய் அந்த நந்தியை விலத்திவிட முடியாதா எனத் துடித்தேன். அவரது அபிநயம் என்னுள்ளே இப்படி ஒரு உணர்வை ஏற்படுத்தியது. ஒரு சமயம் திருமதி பாலசரஸ்வதி அம்மையார் " கிருஷ்ணா நீ பேகதேபாரோ " என்ற கன்னட மொழி பாடலை ஆடினார் . " கிருஷ்ணா நீ வேகமாய் வாராய் " என அவர் ஆடிய போது கிருஷ்ணன் கால் தடுக்கி மேடயில் இருந்து விழுந்து விட்டதாக அபிநயித்தார். முன் வரிசையில் அமர்திருன்தவர் தன்னை இழந்து விழுந்த கண்ணனை தூக்க ஓடினாராம். மேடையிலே தனி ஆழாக நின்று ஒரு குழந்தைக் கண்ணனுடன் விளையாடி அவன் ஓடும்போது தடுக்கி விழுந்ததாக நடித்தார், அவரது அபிநய திறமை அத்தகையது இங்குதான் அற்புத கலை படைப்பை காண்கிறோம்.

Balasaraswathi |

No comments:
Post a Comment