உலகச் செய்திகள்


அப்துல் கலாம் காலமானார்

அமெ­ரிக்க ஜனா­தி­பதி எதி­யோப்­பியா விஜயம்

அப்துல் கலாமின் உடல் இராமேஸ்வரம் கொண்டு செல்லப்பட்டது

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்

மகத்தான மாமனிதர் மண்ணுக்குள் விதைக்கப்பட்டார்

இந்திய பெருங்கடலில் விமானத்தின் பாகம்: எம்.எச்.370 விமானத்தினுடையதா?

எம்.எச்.17 விமான அனர்த்த விசாரணை தீர்ப்பாயத்தை ஸ்தாபிப்பதற்கான ஐக்கிய நாடுகள் தீர்மானம் தோல்வி

மியன்மாரில் வெள்ளம் : 27 பேர் பலி






அப்துல் கலாம் காலமானார்

27/07/2015 இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தனது 83 ஆவது வயதில் இன்று காலமானார்.

மேகாலய மாநில தலைநகர் ஷில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் இன்று இடம்பெற்ற கருத்தரங்கில் முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் கலந்து கொண்டார். 

இந்நிலையில் குறித்த நிகழ்வில் மேடையில் நின்று பேசிக் கொண்டிருந்தபோது அப்துல் கலாமுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
மயங்கி சரிந்த அவரை அங்குள்ள பெத்தானி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். 
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதையடுத்து இராணுவ மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர் குழு வரவழைக்கப்பட்டது.

இந்த மருத்துவர்கள் அப்துல் கலாமின் உடல்நிலையை பரிசோதனை செய்து, தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அப்துல் கலாமின் உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 









அமெ­ரிக்க ஜனா­தி­பதி எதி­யோப்­பியா விஜயம்

27/07/2015 அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபாமா கென்­யா­வுக்­கான தனது விஜ­யத்தின் இறுதிக் கட்­ட­மாக அந் ­நாட்டு தலை­நகர் நைரோ­பியி­ லுள்ள கஸ­ரானி விளை­யாட்டு மைதா ­னத்­தி­லி­ருந்து உரை­யாற்­றினார்.
அவ­ரது உரை அந்­நாட்டு தொலைக் ­காட்சி சேவை மூலம் நாட்டு மக்­க­ளுக்கு ஒலி­ப­ரப்­பப்­பட்­டது.

அல் ஷபாப் தீவி­ர­வா­தி­க­ளுக்கு எதி­ராக கடந்த வருடம் மேற்­கொள்­ளப்­பட்ட நட­வ­டிக்­கையின் போது கஸ­ரானி மைதானம் நூற்­றுக்­கணக் கான சோமா­லி­யர்­க­ளுக்­கான சர்ச்­சைக்­கு­ரிய தடுப்பு முகா­மாக பயன்­ப­டுத்­தப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்கது.
அவர் சனிக்­கி­ழமை கென்ய ஜனா­தி­பதி உகுறு கென்­யட்­டாவு டன் பாது­காப்பு விவ­கா­ரங்கள் தொடர்பில் கலந்­து­ரை­யா­டினார்.
பராக் ஒபா­மாவின் இந்த இரு நாள் கென்ய விஜ­யத்­தை­யொட்டி அந்­நாட்டின் பாது­காப்பு என்­று­மில்­லா­த­வாறு பலப்­ப­டுத்­தப்­பட்­டிருந்­ தது.
அவர் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை பின்­னி­ரவு கென்­யா­வுக்­கான விஜ­யத்தை பூர்த்தி செய்துகொண்டு எதி­யோப்­பி­யா­வுக்கு பய­ண­மானார்.

எதி­யோப்­பி­யா­வுக்கு அமெ­ரிக்க ஜனா­தி­ப­தி­யொ­ருவர் விஜ­யத்தை மேற்­கொள்­வது இதுவே முதல் தட­வை­யாகும். அத்­துடன் 54 உறுப்­பி­னர்­களைக் கொண்ட ஆபி­ரி க்க ஒன்­றிய உச்­சி­ மா­நாட்டில் உரை­ யாற்­றிய முத­லா­வது அமெ­ரிக்கத் தலைவர் என்ற பெய­ரையும் ஜனாதி­பதி பராக் ஒபாமா பெற­வுள்ளார்.
மேற்­படி உச்­சி­ மா­நாடு நாளை செவ்­வாய்க்­கிழமை இடம்­பெ­ற­வுள்ளமை குறிப்­பி­டத் ­தக்­கது.
எதியோப்பியாவுக்கான அமெ ரிக்க ஜனாதிபதியின் விஜயத்தை வரலாற்று முக்கியத்துவம் மிக்க விஜயமாக ஆபிரிக்க ஒன்றிய ஆணை யாளர் நகோசஸனா தலமினி ஸுமா குறிப்பிட்டுள்ளார்.   நன்றி வீரகேசரி










அப்துல் கலாமின் உடல் இராமேஸ்வரம் கொண்டு செல்லப்பட்டது

29/07/2015 மக்களின் ஜனாதிபதி மற்றும் இந்திய ஏவுகணையின் தந்தையுமான முன்னாள் இந்திய ஜனாதிபதி  அப்துல் கலாம், நேற்று முன்தினம் மேகலாயாவின் ஷில்லாங் நகரில் ஐ.ஐ.எம். மையத்தில் மாணவர்கள் மத்தியில் உரையாடி கொண்டிருந்த போது மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார்.
நேற்று காலை கலாம் அவர்களின் உடல் டெல்லி கொண்டுவரப்பட்டது. அங்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர்.
இறுதி சடங்கிற்காக அப்துல் கலாம் அவர்களின் உடல், சிறப்பு விமானம் மூலம் டெல்லியிலிருந்து இன்று காலை மதுரைக்கு கொண்டுசெல்லப்பட்டு பின் அங்கிருந்து ஹெலிகொப்டர் மூலம் இராமேஸ்வரத்தில் உள்ள அவரது அண்ணன் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரின் உறவினர்கள் அஞ்சலி செலுத்திய பின், மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அவரது உடல் ராமேஸ்வரம் பஸ் நிலையம் அருகிலுள்ள மைதானத்திற்கு கொண்டு செல்லப்படும். பின் வீட்டருகிலுள்ள பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடத்தப்படவுள்ளது.
நாளை இராணுவ மரியாதையுடன் கலாம் அவர்களின் உடல் காலை 11 மணியளவில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படும். கலாமின் இறுதிச்சடங்கில், அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் ராமேஸ்வரத்தில் பலத்த பாதுகாப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.   நன்றி வீரகேசரி











இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்

28/07/2015   இந்தோனேஷியா பப்புவா நியுகினி பகுதியில் இன்று 7.0 ரிச்டர் அளவில் பூமி அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தோனேஷிய நேரப்படி இன்று காலை 6.41 மணியளவில் இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
இந்த பூமிஅதிர்ச்சியினால் பல கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன்,ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பூமி அதிர்ச்சியினால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.   நன்றி வீரகேசரி









மகத்தான மாமனிதர் மண்ணுக்குள் விதைக்கப்பட்டார்


30/07/2015 இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உடல் சற்றுமுன்னர் அவருடைய சொந்த இடமான ராமேஸ்வரத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்தில் இருந்து 3. 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பேக்கரும்பு என்ற பகுதியிலேயே அடக்கம் செய்யப்பட்டது. 
இந்நிகழ்வில் பல்லாயிரம் கணக்கான மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

முன்னதாக இன்று காலை 9.45 மணியளவில் இவரது உடல் வீட்டில் இருந்து பள்ளிவாசல் எடுத்து செல்லப்பட்டு அங்கு தொழுகை நடந்தது. பின்னர் ஊர்வலமாக உடல் பேக்கரும்பு என்ற பகுதிக்கு அவரது உடல் எடுத்து செல்லப்பட்டது. 
இங்குள்ள பகுதியில் இவரது உடல் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்கிட முழு ராணுவ மரியாதையுடன் அஞ்சலி செலுத்தப்பட்டது. 
இவரது இறுதிச்சடங்கில் சுமார் 3. 5 லட்சம் பேர் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். 
கலாம் இறுதிச்சடங்கு நடந்த மைதானத்திற்குள் முக்கியஸ்த்தர்களுக்கு மாத்திரமே அனுமதியளிக்கப்பட்டது. பொதுமக்கள் இறுதிச்சடங்கை நேரடியாக பார்க்க அனுமதிக்கப்படவில்லை. 

இவரது உடலுக்கு பிரதமர் மோடி, காங்., துணை தலைவர் ராகுல் , மத்திய அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், வெங்கையாநாயுடு , மனோகர் பாரிக்கர் , மேகலாயா கவர்னர் சண்முகநாதன், மாநில முதல்வர்கள் சித்தராமையா ( கர்நாடகா), சந்திரபாபு நாயுடு (ஆந்திரா) , உம்மன்சாண்டி (கேரளா), கேரள கவர்னர் சதாசிவம், கேரள எதிர்கட்சி தலைவர் அச்சுதானந்தன், குலாம் நபி ஆசாத், எடியூரப்பா, குமாரசாமி, மத்திய அமைச்சர்கள், தமிழக அமைச்சர்கள், தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலர் , பொதுமக்கள் என பலரும் திரண்டு இறுதி மரியாதை செலுத்தினர். நன்றி வீரகேசரி











இந்திய பெருங்கடலில் விமானத்தின் பாகம்: எம்.எச்.370 விமானத்தினுடையதா?

30/07/2015 மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து கடந்த வருடம் மார்ச் 8 ஆம் திகதி பீஜிங் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இந்து சமுத்திரப் பகுதியில் காணாமல் போனதாகக் கருதப்படும் மலேசியன் ஏயார் லயின்ஸின் எம்.எச்.370 விமானத்தின் பாகம் எனச் சந்தேகிக்கப் படும் உடைந்த பகுதி ஒன்று இந்து சமுத்திரத்தில் மடகாஸ்காருக்குக் கிழக்கே உள்ள பிரான்ஸ் நாட்டுக்குச் சொந்தமான ரீயூனியன் என்ற தீவுக் கூட்டங்களில் ஒன்றான செயின்ட் அன்ட்ரே தீவின் கடற்கரை ஓரமாகக் கண்டு பிடிக்கப் பட்டிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சினாவின் பீஜியிங் சென்ற ஆர் 370 விமானம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் காணாமல் போனது. இதை கண்டுபிடிப்பதற்காக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டது. எனினும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன. மேலும் உலக வரலாற்றில் காணாமல் போன விமானங்களை தேடும் பணிக்காக அதிக பணம் செலழிக்கப்பட்டது இந்த விமானத்தின் தேடுதல் பணிக்காகும்.
இந்நிலையில் எம்.எச்.370 விமானத்தின் இறக்கைப் பாகம் போன்று தென்படும் குறித்த சேதமடைந்த பாகம் தற்போது பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப் பட்டுள்ளது. இந்தப் பாகத்தை பிரெஞ்சு விமானப் படையின் உறுப்பினரான அட்ஜுட்டன்ட் கிறிஸ்டியன் ரெட்டோர்னட் என்பவரே முதலில் கண்டு பிடித்துள்ளார்.



இது காணாமல் போன மலேசிய விமானத்திற்கு சொந்தமானதான இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனவே காணாமல் போன விமானத்தின் சீரியல் எண்ணை வைத்து இதை கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இந்த பொருள் பல நாட்களாக தண்ணீரில் சிப்பியால் மறைக்கப்பட்டு இருந்ததாக இதை பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த தீவு பிரான்ஸ் நாட்டுக்கு சொந்தமானது என்பதால் அந்நாட்டு பொலிசார் இது குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

நன்றி வீரகேசரி









எம்.எச்.17 விமான அனர்த்த விசாரணை தீர்ப்பாயத்தை ஸ்தாபிப்பதற்கான ஐக்கிய நாடுகள் தீர்மானம் தோல்வி

31/07/2015 மலே­சிய எம்.எச்.17 விமானம் கடந்த வருடம் மலே­சி­யா­வி­லி­ருந்து நெதர்­லாந்­திற்கு பய­ணித்த வேளை உக்­ரே­னிய வான் பரப்பில் சுட்டு வீழ்த்­தப்­பட்­டமை தொடர்பில் சர்­வ­தேச விசா­ர­ணைக்­கான விசேட தீர்ப்­பா­ய­மொன்றை ஸ்தாபிப்­ப­தற்­காக ஐக்­கிய நாடுகள் பாது­காப்புச் சபையில் தீர்­மா­ன­மொன்றை நிறை­வேற்­று­வ­தற்கு எடுக்கப்பட்ட முயற்­சியை ரஷ்யா தனது வீட்டோ அதி­கா­ரத்தைப் பயன்­ப­டுத்தி தடுத்­துள்­ளது.
அவுஸ்­தி­ரே­லியா, பெல்­ஜியம், மலே­சியா, நெதர்­லாந்து, உக்ரேன் ஆகிய நாடு­களால் முன்­வைக்­கப்­பட்ட மேற்­படி தீர்­மா­னத்­திற்கு ஆத­ர­வாக ஐக்­கிய நாடுகள் சபையின் 15 உறுப்­பி­னர்­களில் 11 உறுப்­பி­னர்கள் வாக்­க­ளித்­துள்­ளனர்.

இந்தத் தீர்­மா­னத்­திற்கு பிரித்­தா­னியா, பிரான்ஸ், அமெ­ரிக்கா ஆகிய நாடுகள் ஆத­ர­வ­ளித்­துள்­ளன.
அந்­நா­டுகள் உக்­ரே­னி­லுள்ள ரஷ்ய ஆத­ரவு பிரி­வி­னை­வா­தி­களே விமா­னத்தைச் சுட்டு வீழ்த்திய­தாக குற்­றஞ்­சாட்­டு­கின்­றன.
அங்­கோலா, சீனா மற்றும் வெனி­சுலா ஆகிய நாடுகள் இந்த வாக்­க­ளிப்பில் பங்­கேற்­க­வில்லை. இந்­நி­லையில் மேற்­படி விமானம் சுட்டு வீழ்த்­தப்­பட்ட சம்­ப­வத்­துடன் தனக்கு தொடர்பு இருப்­ப­தாக தெரி­விக்­கப்­படும் குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு ரஷ்யா மறுப்புத் தெரி­வித்­துள்­ளதுடன் உக்­ரே­னிய இரா­ணு­வமே அந்த விமா­னத்தைச் சுட்டு வீழ்த்­தி­ய­தாக குற்­றஞ்­சாட்டி வரு­கி­றது.
கடந்த வருடம் ஜூலை மாதம் 17 ஆம் திகதி மேற்படி மலேசிய எம்.எச்.17 விமானம் உக்ரேனிய வான் பரப்பில் வைத்து சுட்டு வீழ்த்தப்பட்டதில் அதில் பயணம் செய்த 298 பேரும் கொல்லப்பட்டிருந்தனர்.    நன்றி வீரகேசரி









மியன்மாரில் வெள்ளம் : 27 பேர் பலி

02/08/2015  மியன்மாரில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கின் காரணமாக 27 பேர் உயிரிழந்துள்ளதாக  சர்வதேக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த அனர்த்தத்தினால்  பாரிய அளவிலான பொருட்சேதங்களும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வெள்ளப் பெருக்கில் சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மியன்மாரில் 14 மாகாணங்களில் ஒரு மாகாணத்தை தவிர ஏனைய மாகாணங்கள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 5 இலட்சம் ஏக்கருக்கும் மேற்பட்ட நெற்பயிர்ச் செய்கைகள் நீரில் முழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.  நன்றி வீரகேசரி



No comments: