வேண்டும் - காரைக்குடி. பாத்திமா ஹமீத்

.
பறக்கும் விமானம் பாதுகாப்பாக
தரையிறங்க வேண்டும்!-கப்பலில்
பயணிக்கும் மீனவர்கள் பத்திரமாக
கரைசேர வேண்டும்!

முதியோர் இல்லங்கள்
மூடப்பட வேண்டும்!
அநாதை விடுதிகள்
அகற்றப்பட வேண்டும்!

வரதட்சணை இன்றிப் பெண்கள்
மணம்முடிக்கப்பட வேண்டும்!
வட்டியில்லாக்கடன் கொடுத்து
வறுமைபோக்கிட வேண்டும்!

கள்ளுக்கடைகள் நாடெங்கும்
காணாமல்போக வேண்டும்!
கண்ணீரில்லாத பெண்களைக்
கண்டுமகிழ வேண்டும்!

நான்எழுதுவது எல்லாம்
நடந்திட வேண்டும்!
நமெல்லோர் மனதிலும்
நலெண்ணெங்கள் உதித்திட
வேண்டும்! வேண்டும்!!


காரைக்குடி. பாத்திமா ஹமீத்
ஷார்ஜா.

No comments: