தமிழ் சினிமா


மாரி


வேலையில்லா பட்டதாரி, அனேகன் படத்தின் தொடர் வெற்றியை தக்க வைத்து ஹாட்ரிக் அடிக்க வேண்டும் என்று தன் மீசை முறுக்கி மாரியாக தனக்கே உரித்தான லோக்கல் சென்னையில் களம் இறங்கியிருக்கிறார் தனுஷ்.
இவர் இப்படி எல்லாம் படம் இயக்குவாரா என இத்தனை நாள் காதலை மட்டும் தன் படத்தில் காட்டிவந்த பாலாஜி மோகன் விஜய், அஜித் கால்ஷீட்டை பிடிப்பதற்காக பிள்ளையார் சுழி போட்டுள்ள படம் தான் மாரி.
கதைக்களம்
ஆடுகளம் படத்தை செம்ம கமர்ஷியலாக, கெத்தா, Positive கிளைமேக்ஸோடு எடுத்தால் எப்படியிருக்கும் அப்படி ஒரு படம் தான் இந்த மாரி. சென்னையில் லோக்கல் பையனாக ஒரு ஏரியாவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தனுஷ், புறா ரேஸ் விடுபவர்.
இவரை எப்படியாவது புறா ரேஸில் வீழ்த்தி விட வேண்டும் என்று எதிர் கூட்டணியில் போட்டி போடுபவர் ‘மைம்’ கோபி. தனுஷை எப்படியாவது கைது செய்ய வேண்டும் என அவருடைய பழைய கேஸை (கொலை வழக்கு) ஒரு பக்கம் தீவிரமாக தேடுகிறார் போலிஸ் அதிகாரி விஜய் ஜேசுதாஸ் (பாடகர் விஜய் ஜேசுதாஸ் தாங்க).
அந்த கொலையை தனுஷ் செய்ததற்கு எந்த ஆதாரமும் இல்லாத நிலையில், காஜல் அகர்வாலின் காதலால் அந்த உண்மையை வெளியே கொண்டு வந்து தனுஷை கைது செய்கிறார் விஜய் ஜேசுதாஸ்.
அதன் பின்பு தனுஷின் மார்க்கெட் இறங்க, விஜய் ஜேசுதாஸின் உண்மை முகம் உடைய, தன் இழந்ததை எல்லாம் தனுஷ் எப்படி மீண்டும் பிடித்தார், விஜய் ஜேசுதாஸ் சூழ்ச்சி வலையை எப்படி உடைத்தார் என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
தனுஷ் ஒரு தண்ணீர் போல, எந்த பாத்திரமாக இருந்தாலும் அப்படியே அந்த உருவமாக மாறுகிறார். ஒரு தாதாவாக இருக்க உடல் வாகு தேவையில்லை என்று தனுஷ் புதுப்பேட்டையிலேயே நிரூபித்துள்ளார்.
அதேபோல் இதில் காலரை தூக்கி கலாட்டா செய்துள்ளார். படம் தேங்கி நிற்கும் இடத்தில் எல்லாம் பூஸ்ட்டாக இருப்பது ரோபோ ஷங்கரின் காமெடி தான், தனக்கே உரித்தான Voice Modulation என அதகளம் செய்கிறார். இவர் பேசும் இடத்தில் தான் தியேட்டரில் விசில் சத்தம் பறக்கின்றது. காஜல் அகர்வால் அழகாக வந்து அதிரடியாக Twist வைத்து, மீண்டும் தனுஷ் மனதில் இடம்பிடிக்க அவர் முயற்சிப்பது செம.
விஜய் ஜேசுதாஸ் முதல் படம் என்று தெரியாத அளவிற்கு நன்றாக நடித்துள்ளார். படத்தின் பாதி பலமே அனிருத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை தான், ருத்ர தாண்டவம் ஆடியுள்ளார். ஆனால், பல இடங்களில் 300 படத்தின் இசையை போட்டு விட்டார். கொஞ்சம் கவனிங்க சார், காதல் காட்சிகளில் 3 பட Music கூட வருகின்றது.
க்ளாப்ஸ்
தனுஷின் யதார்த்த நடிப்பு, அனிருத்தின் பின்னணி இசை, ரோபோ ஷங்கர் கவுண்டர் வசனம், படத்தின் இரண்டாம் பாதி. ஓம் பிரகாஷின் கலர்புல் கேமரா.
பல்ப்ஸ்
படத்தின் முதல் பாதி கொஞ்சம் மெதுவாகவே செல்கின்றது, பாலாஜி மோகன் கொஞ்சம் இன்னும் வித்தியசமான மாஸ் படத்தை தருவார் என நினைத்து செல்பவர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான். பெண்களை பற்றி பேசும் சில தவறான வசனங்களை குறைத்திருக்கலாம்.
மொத்தத்தில் மாஸ் ரசிகர்களை மட்டும் குறி வைத்து இந்த மாரி தான் நினைத்ததை ‘செஞ்சுவிட்டார்’.
ரேட்டிங்- 2.75/5  நன்றி cineulagam  












No comments: