அவதார புருஷன்- முத்தமிழில் ராம அவதாரம்‏

.

ராமாயணக் கதை மேடை யேற்றப்படுவது புதிதல்ல. ஆனால் இயல், இசை, நாடகம் என முத்தமிழின் துணை யுடன் காட்சிக்கும் கருத்துக்கும் விருந்தளிக்கும் விதத்தில் ராமாயணக் கதையை மேடை யேற்றியது கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் சார்பாக நடத்தப்பட்ட ‘அவதார புருஷன்’ நாட்டிய நிகழ்ச்சி.
சென்னை நாரதகான சபாவில் கடந்த வாரம் அரங்கேறிய இந்த நாட்டிய நாடகம் காட்சிகளாலும் கருத்தாலும் ரசிகர்களை 2 மணி நேரத்துக்கும் மேலாகக் கட்டிப் போட்டது. ஏறக்குறைய 60-க்கும் மேற்பட்ட கலைஞர்களின் (பாதிக்கு மேல் குழந்தைகள்) துணையுடனும் தொழில்நுட் பத்தின் உதவியுடனும் ராம காதையை ரத்தினச் சுருக்கமாக மேடையில் நிகழ்த்திக் காட்டி னார்கள்.
ராமாயணக் கதையின் சங்கிலி அறுபடாமல், நேர்த்தியாகச் சுருக் கித் தந்தார்கள். தேவைப்படும் இடத்தில் ஒளிப்படக் காட்சியின் மூலமும், கதை சொல்லியும் நாடகத்தை நகர்த்திச் சென்றார்கள். பொதுவாக இதுபோன்ற நாட்டிய நாடகங்களில் அபிநயங்களின் வழியாகவே காட்சிகள் விளக்கப் படும். தொடர்ச்சியாக நடன நிகழ்ச்சிகளைப் பார்ப்பவர் களுக்கே இது புரியும். ‘அவதார புருஷன்’ நிகழ்ச்சியில் இந்த இடைவெளியை நிரப்பியது அனிமேஷன் ஒளிப்படக் காட்சி. அபிநயங்களின் உட் பொருள் களை சாதாரண ரசிகர்களுக்கும் அனிமேஷன் காட்சிகள் புரிய வைத்தன.


காட்சியமைப்பு பிரமிக்கவைத் தது. ராமாயணச் சூழலை நம் கண்முன்னே கொண்டுவர பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக் கிறது. அயோத்தியா, மிதிலை நகரங்கள், அடர்ந்த கானகங்கள், கொட்டும் அருவி, தர்பார் மண்டபங்கள், போர்க்களக் காட்சி கள் எனப் பலவும் நம் கண்முன் திரையில் விரிந்தன. குறிப்பாக, சீதாவைத் தேடி வான் மார்க்கமாக ஆஞ்சநேயர் பறக்கும் காட்சியும், அசோகவனத்தில் ஆஞ்சநேயர் இறங்கும் காட்சியும் வியப்பூட்டும் வகையில் இருந்தன. மரத்தின் கிளையில் இருந்து குதிக்கும் வரை அனிமேஷன். அதன் தொடர்ச்சியாக மேடையில் சீதை முன்பு தோன்றுவார் ஆஞ்சநேயர்.
இந்த நிகழ்ச்சிக்காகப் பிரத் யேகமாகச் சில காட்சிகளை ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் படம்பிடித்து அதனுடன் ஆஞ்சநேயர் இடம்பெறும் காட்சி களையும் அனிமேஷன் தொழில் நுட்பத்தில் இணைத்திருக்கிறார் மதுரை முரளிதரன். ராமராக நடித்த மானஸி, சீதையாக நடித்த காவ்யா முரளிதரன் உட்பட எல்லா குழந்தைகளின் நடன அசைவுகளிலும் சித்ரா முரளிதர னின் பயிற்சி வெளிப்பட்டது. இலங்கைக்குப் பாலம் போடும் காட்சியில் வானர சேனைகளாக நடித்த குழந்தைகளின் சுறுசுறுப்பு அரங்கில் இருந்தவர்களை ஆரவாரம் செய்யவைத்தது.
கம்ப ராமாயண வரிகளையே முழுக்க முழுக்கப் பயன்படுத்தி இசையமைத்திருந்தது நாடகத்தை மேலான கவித்துவ தளத்துக்கு கொண்டுசென்றது. மதுரை முரளிதரனின் நடன அமைப்பில் நேர்த்தி பளிச்சிட்டது. கூடவே ஒப்பனை, இசை, ஒளி அமைப்பு என எல்லா அம்சங்களுமாக சேர்ந்து ‘அவதார புருஷனை’ தத்ரூபமாக மேடை யில் தரிசிக்க வைத்தன.
nantri: http://tamil.thehindu.com/

No comments: